December 11, 2011.... AL-IHZAN World News

ஸ்டாக்ஹோம்: டோன்னா எல்ஜம்மால் என்கிற 26  வயது பெண்மணியே ஸ்வீடனில் ஹிஜாப் அணிந்து பணி புரியும் முதல் பெண் காவலதிகாரி என்று மெட்ரோ சே என்னும் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. அவர் ஹிஜாப் அணிவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே காவல்துறையில் தாம் இணைய விருப்பப்பட்டார் என்றும் அப்பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து டோன்னா எல்ஜம்மால் தாம் சிறுவயது முதலே மக்களுக்கு சேவை செய்ய ஆர்வம் கொண்டுள்ளதாகவும் கணினி முன் அமர்ந்து பொழுது போக்க தாம் விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் நீண்ட விவாதங்களுக்கு பின்னர் சில வருடங்களுக்கு முன்புதான் போலிஸ் சீருடையின் ஒரு பகுதியாக ஹிஜாப் அணிய தனக்கு வாய்ப்பு கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.



அவரை பொறுத்தவரையில் ஸ்வீடன் ஒரு பன்முக கலாச்சாரத்தை கொண்ட நாடு எனவும் அனைத்து துறைகளிலும் பல்வேறுபட்ட மக்கள் பணிபுரிந்தால்தான் அறிவும் புரிதலும் வளரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

டோன்னா எல்ஜம்மால் சிறுவயது முதலே மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க கூடியவர். மேலும் அவரின் குடும்பம் வெளிநாட்டிலிருந்து ஸ்வீடனில் போய் குடியேறியவர்கள். அவர் சிறைத்துறையில் பணிபுரியும்போதே ஹிஜாப் அணியும் பழக்கம் உடையவர் ஆவார். மேலும் முன்னதாக ஹிஜாப் பற்றி பலரும் விமர்சனம் செய்தனர் என்றும் பின்னர் தன்னை நன்றாக புரிந்துகொண்டதன் விளைவாக விமர்சனங்கள் நின்று போனது என்றும் அவர் கூறியுள்ளார்.


மேலும் ஹிஜாப் எந்த வகையிலும் தனது பணிக்கு இடையூறாக இல்லை என்றும் அது தனது உடலில் ஒரு பகுதி என அவர் கருதுவதாகவும் மற்றும் ஹிஜாப் அணிந்து கொண்டே அணைத்து பணிகளையும் சிறப்பாக செய்ய முடிகிறது என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் வெளிநாட்டவர்கள் இரண்டு பேரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோட் அப்டு அருகில் உள்ள குவாசிம் பெலா நகரில் இரண்டு பேரை அடையாளம் தெரியாத மர்ம கும்பல் துப்பாக்கி முனையில் கார் மூலம் கடத்தி சென்றனர்.
கடத்திச் சென்றவர்களில் ஜேர்மனியை சேர்ந்தவர் பர்ன்ட்(45), இத்தாலியை சேர்ந்தவர் கியோவான்னி(38) என்றும் தொண்டு நிறுவனத்தில் திட்ட இயக்குநர் மற்றும் நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்ததாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 2010ம் ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருவரும் பணிபுரிந்து வருவதாகவும், இவர்கள் கோட் அப்டு பகுதியில் நடைபெறும் பணிகளை பார்வையிட சென்ற போது அவர்களை மர்ம நபர்கள் கடத்தி சென்றதாகவும் பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் கூறினார்.
தாரிக் இ தலிபான் என்ற பாகிஸ்தானி தலிபான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹக்கீமுல்லா மெசூத், அமெரிக்க ஆளில்லா விமானங்களின் தாக்குதலில் பலியானார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் அதை அந்த அமைப்பு மறுத்துள்ளது. பாகிஸ்தானின் பாதுகாப்புக்கு மிகப் பெரும் சவாலாக விளங்கும் பாகிஸ்தானி தலிபான் அமைப்பின் தலைவர் ஹக்கீமுல்லா மெசூத், கடந்த 12ம் திகதி, வடக்கு வஜீரிஸ்தானின் டட்டாகெல் என்ற பகுதியில் நடந்த அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் பலியானார் என அமெரிக்க அதிகாரிகள் சிலர் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தனர்.
ஆப்கன் எல்லையை ஒட்டிய அப்பகுதிக்கு அவர் வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்த போது கொல்லப்பட்டதாக, தலிபான் அமைப்பினர் தந்தியில்லா வானொலி மூலம் பேசிக் கொண்டதை, இடைமறித்து ஒட்டுக் கேட்டதாக அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.
ஆனால், இதுகுறித்து பாகிஸ்தான் தரப்பில் அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், பாகிஸ்தானி தலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் எசனுல்லா எசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் மெசூத் பலியானதாக வெளியான செய்தி தவறானது.
அவர் எங்கிருக்கிறார் என்பதைக் கண்டறிய கிளப்பி விடப்பட்ட புரளிகள் இவை எனத் தெரிவித்தார். டட்டாகெல் பகுதியில் நடந்த ஆளில்லா விமானத் தாக்குதலில் ஒன்பது பேர் பலியானதாகவும் அவர்களில் ஹக்கீமுல்லா இல்லை எனவும் தலிபான் அமைப்பினைச் சேர்ந்தவர்கள் ஒரு பத்திரிகைக்கு தெரிவித்துள்ளனர்.
கடந்த 2009ல் அந்த அமைப்பின் தலைவராக இருந்த பைதுல்லா மெசூத், ஆளில்லா விமானத் தாக்குதலில் பலியான பின், ஹக்கீமுல்லா தலைவரானார். 2010, ஜனவரியில், தெற்கு வஜீரிஸ்தானில் அவர் ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக வெளியான செய்தியை அடுத்து, தனது குரல் பதிவுச் செய்திகளை வெளியிட்டுத் தான் உயிரோடு இருப்பதை வெளியுலகுக்கு நிரூபித்தார் ஹக்கீமுல்லா

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts