
ஆனால் அதை அந்த அமைப்பு மறுத்துள்ளது. பாகிஸ்தானின் பாதுகாப்புக்கு மிகப் பெரும் சவாலாக விளங்கும் பாகிஸ்தானி தலிபான் அமைப்பின் தலைவர் ஹக்கீமுல்லா மெசூத், கடந்த 12ம் திகதி, வடக்கு வஜீரிஸ்தானின் டட்டாகெல் என்ற பகுதியில் நடந்த அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் பலியானார் என அமெரிக்க அதிகாரிகள் சிலர் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தனர்.
ஆப்கன் எல்லையை ஒட்டிய அப்பகுதிக்கு அவர் வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்த போது கொல்லப்பட்டதாக, தலிபான் அமைப்பினர் தந்தியில்லா வானொலி மூலம் பேசிக் கொண்டதை, இடைமறித்து ஒட்டுக் கேட்டதாக அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.
ஆனால், இதுகுறித்து பாகிஸ்தான் தரப்பில் அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், பாகிஸ்தானி தலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் எசனுல்லா எசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் மெசூத் பலியானதாக வெளியான செய்தி தவறானது.
அவர் எங்கிருக்கிறார் என்பதைக் கண்டறிய கிளப்பி விடப்பட்ட புரளிகள் இவை எனத் தெரிவித்தார். டட்டாகெல் பகுதியில் நடந்த ஆளில்லா விமானத் தாக்குதலில் ஒன்பது பேர் பலியானதாகவும் அவர்களில் ஹக்கீமுல்லா இல்லை எனவும் தலிபான் அமைப்பினைச் சேர்ந்தவர்கள் ஒரு பத்திரிகைக்கு தெரிவித்துள்ளனர்.
கடந்த 2009ல் அந்த அமைப்பின் தலைவராக இருந்த பைதுல்லா மெசூத், ஆளில்லா விமானத் தாக்குதலில் பலியான பின், ஹக்கீமுல்லா தலைவரானார். 2010, ஜனவரியில், தெற்கு வஜீரிஸ்தானில் அவர் ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக வெளியான செய்தியை அடுத்து, தனது குரல் பதிவுச் செய்திகளை வெளியிட்டுத் தான் உயிரோடு இருப்பதை வெளியுலகுக்கு நிரூபித்தார் ஹக்கீமுல்லா
0 கருத்துகள்: