கொல்லப்பட்ட தலிபான்களின் சடலங்கள் மீது, அமெரிக்க இராணுவத்தினர்
மலசலம் கழிக்கும் வீடியோ ஒளிப்பதிவு காட்சிகள் ஊடகங்களில் கசிந்துள்ளதுடன் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க இராணுவ கடற்படை பிரிவின் ஸ்னைப்பர் குழுவொன்று ஆப்கானிஸ்தானில் தமது சேவைக்காலத்தின் போது இச்செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுட்டுக்கொல்லப்பட்ட மூன்று தலிபான் போராளிகளின் சடலங்கள் மீது குறித்த இராணுவத்தினர் மலசலம் கழிப்பது போன்று அக்காட்சிகளில் பதிவாகியுள்ளது.

'"Have a great day, buddy' என ஒருவர் கூறுவதுடன் மற்றொருவர் "You got it on the video?"என கேட்கிறார். "Yeah' என மற்றுமொருவர் பதில் அளிக்கிறார். "Golden, like a shower' என்கிறார் இன்னுமொருவர். இராணுவ குழுவிலிருந்த ஒருவர் அல்லது பொதுமகன் ஒருவர் இவ்வீடியோவை பதிவு செய்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் குறித்த அநாகரீக செயலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இது ஒட்டுமொத்த அமெரிக்க இராணுவத்திற்கும் இழுக்கு ஏற்படுத்தும் வருந்தத்தக்க செயல் எனவும் அமெரிக்க பாதுகாப்புதுறை செயலர் லியோன் பனெட்டா மற்றும் அமெரிக்க அரசு அனுதாபம் தெரிவித்துள்ளது.

இச்செயலுக்கு ஆப்கான் அதிபர் மற்றும் நேட்டோ படையினரும் கண்டனம் விடுத்துள்ளனர். இதேவேளை இவ்வீடியோ தொடர்பில் தலிபான்கள் விடுத்துள்ள அறிக்கையில்,

ஊடகம் மூலம் இந்த ஒரு வீடியோ தற்போது கசிந்துள்ளதால் உங்களுக்கு தெரியவந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இப்படி நடந்தவை எத்தனை? இப்போது உங்கள் நாக்குகளே இந்த வெட்கர செயல்களை பற்றி கூறுகிறது. இதை ஏற்றுக்கொள்ளும் எந்த மதமும், புனிதமான எழுத்துக்களை வாசிக்காதவையாக இருக்கலாம். .... மனிதனின் மிருகத்தன்மை பற்றி வெளியுலகம் தெரிந்து கொள்ளட்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 க்கு வயதுக்குட்பட்டோர், பலவீனமானவர்கள் இவ்வீடியோவை பார்ப்பதை தவிர்க்க
கடந்த 2009ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இறுதியுத்தத்தின் போது போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறலை நிரூபிக்கும் பல வீடியோ ஆதாரங்கள் வெளிவந்த போதும் அவற்றில் தோன்றிய இராணு சிப்பாய்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதாகவோ, இச்சம்பவங்களுக்கு பொறுப்பேற்று மன்னிப்பு கோருவதாகவோ இலங்கை அரசு உட்பட எந்தவொரு தரப்பினரும் வெளிப்படையாக மன்னிப்பு தெரிவிக்கவில்லை என மனித உரிமை அமைப்புக்கள் விமர்சித்து வந்த நிலையில், அமெரிக்க இராணுவத்தின் இச்செயற்பாடு உலகை உலுக்கியுள்ளது

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts