செவ்வாய் கிரகத்தை படமெடுத்து அனுப்பும் நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் அண்மையில் அனுப்பிய படமொன்றில் கட்டாந்தரையில் மலரின் சூலகம் தோன்றுவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
இந்நிலையில் இந்த செவ்வாய் மலர் குறித்து பலரும் தங்களது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

விண்வெளி ஆய்வில் அதிக ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட ரசிகர்கள் இது மலரல்ல என்றும் விலைமதிப்பில்லாத ரத்தினம் என்றும் தெரிவித்தனர்.

நாசா ஆய்வாளர்களோ இந்த மலரைப்பார்த்து இது ஏதோ பாறையிலிருந்து முளைத்து வந்தது போல தோன்றுகிறது என்று தெரிவிக்கின்றனர்.

விண்வெளி ரசிகர்கள் இந்த மலர் குறித்து இணையத்தில் பெரிய விவாதமே நடத்திக்கொண்டிருக்கின்றனர்.

இது மலர் போல காட்சியளிப்பதால் மலர் என்று பலர் கருதுகின்றனர்.

ஆனால் செவ்வாய் கிரகத்தில் மலர்கள் காணப்படுவதில்லை என்று நாசாவின் செய்தித்தொடர்பாளர் கய் வெப்ஸ்ட்டர்.

கடந்த ஒக்ரோபர் மாதம் இது போன்ற ஒரு பொருளை படமெடுத்து அனுப்பியபோது பல்வேறு ஊகங்கள் தோன்றின.

பின்பு அந்த பொருள் கியூரியாசிட்டி ரோவரில் இருந்து கீழே விழுந்த பிளாஸ்டிக் துண்டு என்பது தெரியவந்தது.
செவ்வாயில் மலர்களா? கியூரியாசிட்டியின் புதிய படம்
[ சனிக்கிழமை, 05 சனவரி 2013 ) 


செவ்வாய் கிரகத்தை படமெடுத்து அனுப்பும் நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் அண்மையில் அனுப்பிய படமொன்றில் கட்டாந்தரையில் மலரின் சூலகம் தோன்றுவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
இந்நிலையில் இந்த செவ்வாய் மலர் குறித்து பலரும் தங்களது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

விண்வெளி ஆய்வில் அதிக ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட ரசிகர்கள் இது மலரல்ல என்றும் விலைமதிப்பில்லாத ரத்தினம் என்றும் தெரிவித்தனர்.

நாசா ஆய்வாளர்களோ இந்த மலரைப்பார்த்து இது ஏதோ பாறையிலிருந்து முளைத்து வந்தது போல தோன்றுகிறது என்று தெரிவிக்கின்றனர்.

விண்வெளி ரசிகர்கள் இந்த மலர் குறித்து இணையத்தில் பெரிய விவாதமே நடத்திக்கொண்டிருக்கின்றனர்.

இது மலர் போல காட்சியளிப்பதால் மலர் என்று பலர் கருதுகின்றனர்.

ஆனால் செவ்வாய் கிரகத்தில் மலர்கள் காணப்படுவதில்லை என்று நாசாவின் செய்தித்தொடர்பாளர் கய் வெப்ஸ்ட்டர்.

கடந்த ஒக்ரோபர் மாதம் இது போன்ற ஒரு பொருளை படமெடுத்து அனுப்பியபோது பல்வேறு ஊகங்கள் தோன்றின.

பின்பு அந்த பொருள் கியூரியாசிட்டி ரோவரில் இருந்து கீழே விழுந்த பிளாஸ்டிக் துண்டு என்பது தெரியவந்தது.






இரண்டு வெவ்வேறு பத்திரிகைகளில் வெளியான தகவல்கள் உங்களின் பார்வக்கு...

(நன்றி

கஃபதுல்லாஹ் : வேகமெடுக்கும் விரிவாக்கப்பணிகள்!

Saturday, 05 January 2013

கஃபதுல்லாஹ்வில் "தவாஃப்" செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் "மதாஃப்" பகுதியை விரிவாக்கம் செய்யும் பணி இரவு பகலாக நடந்து வருகிறது.

நவீன எந்திரங்களின் துணையுடன் 2000 நபர்கள் வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது, தவாஃப் செய்யும் இடங்களை சுற்றியுள்ள கட்டிடங்களை இடிக்கும் வேலைகளும் இடிபாடுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தும் பணிகளும் கவனமுடன் கையாளப்பட்டு வருகிறது.

உமராவுக்கு வருபவர்களின் வருகை துவங்கிவிட்டாலும், அவர்களுக்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாண்டு ரமலான் மாதத்தில் உமராவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை இரு மடங்கு உயரும் என கணிக்கப்பட்டுள்ளதால், ரமலானுக்கு முன்னதாகவே "மதாஃப்" விரிவாக்கப்பணிகள் முடிக்கப்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

கஃபதுல்லாஹ்வில் "தவாஃப்" செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் "மதாஃப்" பகுதியை விரிவாக்கம் செய்யும் பணி இரவு பகலாக நடந்து வருகிறது.

நவீன எந்திரங்களின் துணையுடன் 2000 நபர்கள் வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது, தவாஃப் செய்யும் இடங்களை சுற்றியுள்ள கட்டிடங்களை இடிக்கும் வேலைகளும் இடிபாடுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தும் பணிகளும் கவனமுடன் கையாளப்பட்டு வருகிறது.

உமராவுக்கு வருபவர்களின் வருகை துவங்கிவிட்டாலும், அவர்களுக்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாண்டு ரமலான் மாதத்தில் உமராவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை இரு மடங்கு உயரும் என கணிக்கப்பட்டுள்ளதால், ரமலானுக்கு முன்னதாகவே "மதாஃப்" விரிவாக்கப்பணிகள் முடிக்கப்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது
பாகிஸ்தானில் தலிபானியர்களால் சுடப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுமி மலாலா, குணமடைந்ததையடுத்து வீடு திரும்புகிறார்.
தலிபானியர்களுக்கெதிராக பேசியதன் விளைவாக கடந்த 2011ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் பள்ளிக்கு பேருந்தில் சென்று கொண்டிருக்கையில் மலாலா மீது தலிபானியர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் இடது கண் மற்றும் தாடையில் குண்டடிப்பட்டு படுகாயமடைந்தார். பின் லண்டனில் உள்ள எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர், தற்போது குணமடைந்துள்ளார்.
எனவே விரைவில் மலாலா மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே மலாலாவின் தந்தை ஜியாவுதீன் யூசுப்சைக்கு பாகிஸ்தான் அரசு லண்டனிலேயே வேலை அளித்துள்ளது.
அங்குள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் கல்வி பணியில் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரிட்டனில் முதன் முறையாக அறுவை சிகிச்சை மூலம் நபரொருவருக்கு மாற்று கை பொருத்தப்பட்டுள்ளது.
பிரிட்டனின் யார்க்ஷயர் பகுதியை சேர்ந்தவர் மார்க் கஹில்(வயது 51). பக்கவாதத்தின் காரணமாக 20 ஆண்டுகளுக்கு முன், இவரது வலது கை செயலிழந்தது.
இதனையடுத்து பல்வேறு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டும், சிகிச்சை பலனில்லாமல் போனதால் மாற்று கை பொருத்த முடிவு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து லண்டனில் உள்ள மருத்துவமனையில் எட்டு மணிநேர அறுவை சிகிச்சைக்கு பின்னர் மாற்று கை பொருத்தப்பட்டது.
எட்டு ரத்த குழாய்கள், மூன்று நரம்புகள், தசை நார்கள், எலும்புகள் ஆகியவை சரியாக இணைக்கப்பட்டன.
கடந்த வாரம் நடந்த இந்த சிகிச்சையின் மூலம், தற்போது மார்க் கஹிலின் கையில் உணர்வு ஏற்பட்டுள்ளது.
ஓரளவுக்கு கை விரல்களை அசைக்கிறார், சகஜநிலைக்கு வர ஆறு மாதமாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 
 ஓடும் பேருந்தில் மாணவியொருவர் வன்புணரப்பட்டதன் அதிர்ச்சி தேசம் எங்கும் வியாபித்திருக்கும் நிலையில்,

மற்றொரு பலாத்கார முயற்சிக்கு எதிராகப் போராடி முப்பது வயது பெண்மணியொருவர் ஓடும் தொடர்வண்டியிலிருந்து குதித்து படுகாயம் அடைந்துள்ளார். பீஹாரின் ஆர்ரா சந்திப்பு அருகே நடைபெற்ற இச்சம்பவத்தில் அப்பெண்ணுக்கு தலையிலும் கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

திப்ரூகர் - டெல்லி பிரம்மபுத்திரா விரைவு வண்டியில் சம்பவித்த இந்த அவலத்தில் காயமடைந்துள்ள பெண் மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங்கைச் சேர்ந்தவர் என்றும், காயமுற்ற நிலையில் போஜ்பூர் அருகிலுள்ள சாதர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது.

பலாத்காரம் செய்ய முயன்றவரின் பெயர் ரமேஷ்குமார் என்றும் ஹிமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் என்றும் தெரிகிறது. மேலும், அஸ்ஸாம் துப்பாக்கிப் படைப் பிரிவைச் சேர்ந்த உபாத்யாய் என்னும் வீரர் அந்த காமுகனைப் பிடித்து ரெயில்வே பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்துள்ளார். தொடர்பாக, இருவழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
 தென் கொரியாவில் சிறுமியை கற்பழித்த காம கொடூரனுக்கு ஆண்மை நீக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
தென் கொரியாவில் பியோ என்ற குடும்ப பெயர் கொண்ட 31 வயது மதிக்கத்தக்க நபரொருவர், ஸ்மார்ட்போன் சட்டிங் மூலம் அறிமுகமான 5 சிறுமிகளுடன் தகாத முறையில் உறவு வைத்துள்ளார்.
அதன் பின்னர் அந்த சிறுமிகளுடன் உல்லாசமாக இருந்த போது, எடுத்த வீடியோ காட்சிகளை வெளியிட்டு விடுவதாகவும், வெளியில் சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட பியோ மீது சியோல் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி கிம் கி-யங் இன்று பரபரப்பான தீர்ப்பை வழங்கினார்.
அவர் தனது தீர்ப்பில், பியோ பல பெண்களை கற்பழித்துள்ளார். எனவே அவராகவே இந்த பாலியல் ஆசையை துறந்து திருந்துவார் என்பது சாத்தியமில்லை.
எனவே அவருக்கு 15 ஆண்டு சிறைத்தண்டனையும், ரசாயன ஆண்மை நீக்கம் செய்யவும் உத்தரவிடப்படுகிறது.
சிறையில் இருந்து விடுதலையான பிறகு அவர் 20 ஆண்டுகள் மின்னணு கண்காணிப்பு கொலுசு அணிந்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
தென் கொரியாவில் குழந்தைகளை கற்பழிக்கும் குற்றத்திற்கு ஆண்மை நீக்கம் செய்யலாம் என்ற சட்டம் கடந்த 2011ஆம் ஆண்டுதான் அமுலுக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி வழங்கப்பட்ட முதல் தீர்ப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
]
சிரியாவில் உள்நாட்டு போருக்கு இதுவரையிலும் 46 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் அசாத்துக்கு எதிராக கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெடித்த போராட்டம் இன்னும் ஓயவில்லை.
இராணுவத்தினர் மூலம் அப்பாவி பொதுமக்கள் உட்பட புரட்சிபடையினரை கொன்று குவிக்கிறார் அசாத்.
இந்த உள்நாட்டு போரில் இதுவரையிலும் 46 ஆயிரம் பேர் பலியானதாக சிரியாவுக்கான மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் 2011ஆம் ஆண்டில் 6,548 பேரும், 2012ஆம் ஆண்டில் 39,520 பேரும் இறந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டும் வன்முறை தொடரும் பட்சத்தில், 1 லட்சம் பேர் வரை உயிரிழக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 சிரியாவில் விமான படை தளத்தை கைப்பற்றுவதற்காக இராணுவத்துக்கும், புரட்சி படையினருக்கும் இடையே கடும் சண்டை நடக்கிறது.
சிரியாவில் ஜனாதிபதிக்கு எதிராக கடந்த 22 மாதங்களாக போராட்டம் நடந்து வருகிறது. இவர்களை சிரியா இராணுவத்தினர் ஒடுக்கி வருகின்றனர்.
இந்நிலையில் இராணுவத்திடமிருந்து பல நகரங்களை புரட்சிபடையினர் கைப்பற்றி உள்ளனர்.
குறிப்பாக இராணுவ தளங்களை புரட்சி படையினர் தகர்த்து வருகின்றனர். இந்த சண்டையில் 60 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில் டமாஸ்கஸ் அருகே உள்ள இத்லிப் நகரின் விமான நிலையம் மற்றும் ஐந்து விமானப்படை நிலையங்களை கைப்பற்றி புரட்சிபடையினர் முயற்சி செய்து வருகின்றனர். இதற்கு இராணுவம் தகுந்த பதிலடி கொடுத்து வருவதால், சண்டை நீடிக்கிறது.
இதனால் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்வது வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
 இந்தோனேசியாவில் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்தோனேசியாவில் ஷரியத் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாண்டா ஏஸ் மாகாணத்தில் உள்ள லோக்சூமாவே நகர மேயர், பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.
அதன் படி பெண்கள் இறுக்கமான பேண்ட் அணிய கூடாது, கள்ளக்காதல், விபசாரம், ஓரினச்சேர்க்கையில் ஈடுபட கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறிப்பாக ஆண்களுடன் பைக்கில் செல்லும் போது, இருக்கையின் பின்பக்கம் இரண்டு பக்கம் கால் போட்டு அமர்ந்து செல்ல கூடாது.
அப்படி உட்காருவது சரியில்லை, ஒரு பக்கமே இரண்டு கால்களையும் வைத்துக் கொண்டு பைக் சீட்டில் உட்கார்ந்து செல்ல வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இரண்டு பக்கமும் கால் போட்டு பெண்கள் பைக் ஓட்டுவதற்கு அனுமதிக்கப்படும். ஆனால் பைக் ஓட்டும் போது முஸ்லிம் பாரம்பரியப்படி உடை அணிந்திருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
  எகிப்தில் போராட்டம் நடந்த போது தொலைக்காட்சியில் நேரடியாக முபாரக் பார்த்து கொண்டிருந்தார் என்ற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து இவர் பதவி விலகினார். இப்போராட்டத்தில் அப்பாவி பொதுமக்கள் உட்பட சுமார் 900 பேர் பலியாகினர்.
இதன் காரணமாக முபாரக் தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். எனினும் பொதுமக்கள் போராட்டத்தின் போது, அரசு படைகள் தாக்குதல் நடத்தியது தனக்கு தெரியாது என்றும், தன்னுடைய உதவியாளர்கள் இதனை தெரிவிக்காமல் மறைத்து விட்டார் என்றும் நீதிமன்ற விசாரணையின் போது தெரிவித்தார்.
இந்நிலையில் இதுகுறித்து மனித உரிமைகள் தொடர்பான வழக்கறிஞர் அகமது ரக்ஹெப் கூறுகையில், போராட்டம் தீவிரமாக நடைபெற்ற 18 நாட்களாக அங்கு இடம்பெறும் ஆர்ப்பாட்டப் பேரணியை ஹோஸ்னி முபாரக் தனது மாளிகையிலிருந்து சாட்டெலைட் தொலைக்காட்சி மூலம் பார்த்து வந்தார் என்ற பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
ஆடம் லான்சா
                                                            ஆடம் லான்சா



டிசம்பர் 14 ஆம் தேதி 2012 அன்று, அமெரிக்காவின் கனெடிகட் மாநிலத்தின் நியூட்டன் நகரிலுள்ள சாண்டி ஹூக் பள்ளிக்குள், சந்தோஷமாக கைவீசி சென்ற இளந்தளிர்கள் அடுத்த சில மணி நேரத்துக்குள் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட சோகம் எவரையும் மனம் கனக்க வைக்கும். இந்தக் கொடுமையான சம்பவம், 6-7 வயது நிரம்பிய 20 குழந்தைகளையும், 6 பள்ளி அலுவலர்களையும், கொலையாளியையும், அவரது தாயையும் சேர்த்து 28 உயிர்களை காவு கொண்டுள்ளது.
ஆடம் லான்சா என்ற 20 வயது நிரம்பிய இளைஞன் தான் இந்த கொலைகளை துப்பாக்கியின் துணையோடு நடத்தியுள்ளான்.
வசதியான குடும்பத்தை சேர்ந்த ஆடம், அவனுடைய அம்மாவுடன் நியூட்டன் நகரில் வசித்து வந்துள்ளான். ஆதாமின் தந்தை பீட்டர் லான்சா, ஜி.ஈ. கேபிடல் நிறுவனத்தின் துணைத்தலைவராக உயர் பொறுப்பில் பணிபுரிபவர். பெற்றோர் இருவரும் மூன்று ஆண்டுகளாக விவாகரத்து முடிந்து பிரிந்து வாழ்கின்றனர்.
சம்பவத்தன்று, தாயின் கைத்துப்பாக்கியால் அவரை நெற்றிப் பொட்டில் சுட்டுக் கொன்று விட்டு, வீட்டில் இருந்த இன்னும் ஒரு நீளத் துப்பாக்கியையும் தானியங்கி துப்பாக்கியையும் எடுத்துக் கொண்டு காரில் சாண்டி ஹூக் பள்ளிக்குச் சென்றிருக்கிறான் ஆடம். பள்ளியின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, கண்ணில் அகப்பட்டவர்களை குழந்தைகள் என்றும், ஆசிரியர்கள் என்றும் பார்க்காமல் சுட்டுத் தள்ளியுள்ளான். இறுதியில் தன் உயிரையும் மாய்த்து கொண்டான்.
இந்த சம்பவம் அமெரிக்க மக்களை கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. அமெரிக்காவில் பொது இடங்களில் தனி நபர்கள் இது போன்று கொலைச் செயல்களில் ஈடுபடுவது இந்த ஆண்டில் மூன்றாவது முறையாகும். 1982-ம் ஆண்டு முதல் 61க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடுகள் நடந்திருப்பதாக மதர் ஜோன்ஸ் இணைய தளம் தெரிவிக்கிறது. அக்கொலைகளில் பயன்படுத்தப்பட்டுள்ள துப்பாக்கிகள் அனைத்தும் உரிமம் பெற்றவையாகவே இருந்துள்ளன. இச்சம்பவங்களை நிகழ்த்திய நபர்கள் பெரும்பாலும் சகஜமாக வாழ்ந்து அமெரிக்க போட்டியில் தோற்றுப் போனதால் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக மாறியிருக்கின்றனர்.
இக்கொலைகள் நடக்கும் போதெல்லாம் அமெரிக்காவின் துப்பாக்கிச் சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும், ‘ஒவ்வொரு பள்ளியிலும் ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்களை அரசு நியமிக்க வேண்டும்’ என்று அமெரிக்க துப்பாக்கிக் கழகத்தின் எதிர் கருத்துக்களும் வெளியாகும்.
தற்போதைய படுகொலையைப் பார்க்கும் போது குழந்தைகளைக் கூட பாதுகாக்க முடியாத அமெரிக்க சமூகத்தின் தோல்விக்கு என்ன காரணங்கள் இருக்க முடியும்?
ஆடம் லான்சாவிற்கு, ஆட்டிசம் எனப்படும் மன இறுக்க குறைபாட்டின் ஒரு வகையான அஸ்பெர்கஸ் இருப்பதாக அவரது 5 வயதில் கண்டறியப்பட்டது. யாருடனும் பேசாமல், பழகாத ஒரு தனிமை விரும்பியைப் போல் இருந்தான் என்று அக்கம் பக்கம் வீட்டார் அவனுடைய குணாதிசயங்களை பற்றி கூறியுள்ளனர்.
2010 உயர் நிலைப் பள்ளி ஆண்டு புத்தகத்தில் அவனுடைய புகைப்படத்திற்கு பதிலாக ‘காமிராவுக்கு வெட்கம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவன் சராசரிக்கு அதிகமான புத்திசாலி என்று அவனது பள்ளி நண்பரகள் நினைவு கூர்கிறார்கள்.
ஆடம் லான்சாவின் தாய் நான்சி லான்சா
ஆடம் லான்சாவின் தாய் நான்சி லான்சா
அஸ்பெர்கஸ் வகை மன இறுக்கம் புலனுணர்வுகள், பேச்சுத்திறன் இவற்றை பாதித்து சமுதாய தொடர்புகளை துண்டிக்க செய்யும் ஒரு குறைபாடு. ஆட்டிசம், மரபு ரீதியாகவும் குழந்தை கருவில் இருக்கும் போதோ பிறந்து சில நாட்களிலோ சுற்றுச் சூழல் அல்லது உணவுப் பொருட்களில் இருக்கும் உலோக நச்சுக்கள், கதிர்வீச்சு மூலம் நரம்பு மண்டலமும் மூளையும் தாக்கப்படுவதால் ஏற்படுகிறது என்று கருதப்படுகிறது.
அமெரிக்க அரசாங்கத்தின் மதிப்பீட்டுப்படி, நாடு முழுவதும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்வி, மருத்துவம், மற்றும் சிறப்பு பராமரிப்புக்கு ஆண்டுக்கு $137 பில்லியன் தேவைப்படுகிறது. ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையை வாழ்நாள் முழுவதும் பராமரிக்க $2.3 மில்லியன் தேவைப்படும்.
அஸ்பெர்கஸ் வகை ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தமது விருப்பத்துக்கு மாறாக ஏதாவது நடக்கும் போது கோபத்தையும், ஆத்திரத்தையும் கட்டுப்படுத்த முடியாமல் நடந்து கொள்வார்கள்.
பெற்றோரின் அரவணைப்பும், தொடர்ச்சியான மருத்துவ உதவியும், ஆலோசனையும், சிறப்புக் கல்வியும் தான் அஸ்பெர்கஸ் குறைபாடு உடையவர்களை இயல்பான வாழ்க்கை நடத்த உதவும் வழிமுறைகள் ஆகும், இதை வாழ்நாள் முழுவதும் அவர்கள் செய்தாக வேண்டிய நிர்ப்பந்தமும் உள்ளது.
அமெரிக்காவை பொறுத்தவரை எல்லா மருத்துவ சேவையும், மருத்துவக் காப்பீடு திட்டம் மூலமாகத்தான் வழங்கப்படுகின்றன. ஆனால் காப்பீட்டு நிறுவனங்கள் மனநல நோய்களுக்கான சிகிச்சைகளை பெரும்பாலும் மறுத்து விடுகின்றன. ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டுள்ள 13 வயது மகனுக்கு தாயான “லீசா லாங்” என்பவர் “நான் தான் ஆடம் லான்சாவின் தாய்” என்ற தலைப்பில் எழுதிய பதிவில் தனது மகனை சமாளிக்க முடியாமல், முறையான மருத்துவ சிகிச்சையும் அளிக்க முடியாமல் போராடும் துயரத்தை உருக்கமாக விவரித்துள்ளார்.
அரசு உதவியை பெற வேண்டும் என்றால் மன நோய் பாதிக்கப்பட்டுள்ள குழந்தை மீது காவல்துறையில் கிரிமினல் வழக்கு ஒன்றை பதிவு செய்து விட்டால் அரசாங்கம் அவர்களுக்கு வைத்தியம் என்பதை சிறைச்சாலையில் அடைத்து வைத்து தரும். அமெரிக்காவின், மனித உரிமை கண்காணிப்புத் துறையின் கணிப்புப்படி, அமெரிக்க சிறைச்சாலைகளில் மனநலம் குன்றியவர்களின் எண்ணிக்கை 2000-ம் முதல் 2006 ஆண்டுக்குள் நான்கு மடங்காக அதிகமாகியிருக்கிறது.
அத்தியாவசிய மருத்துவ சேவைகள் கூட பணம் படைத்தவர்களுக்கு மட்டும்தான் கிடைக்கும் என்ற சமூகக் கட்டமைப்பில் தனித்து விடப்படும் நபர்களும் குடும்பங்களும் உடல் நல, மன நலக் குறைபாடுகள் தொடர்பான முழு பொருளாதார மற்றும் மனவியல் சுமைகளை தாமே சுமக்க வேண்டியிருக்கிறது.
ஆடம் லான்சாவின் தாய் நான்சி லான்சா, விவாகரத்துக்கு பிறகு வீட்டிலேயே வைத்து ஆதாமை பராமரித்து வந்திருக்கிறார். பணமும் வசதி வாய்ப்பும் இருந்ததால்தான், திருமதி நான்சி லான்சாவால் விவாகரத்து ஆன பிறகும் வேலைக்குப் போகாமல் வீட்டில் இருந்தபடியே பிரச்சனை உடைய மகனை பராமரிக்க முடிந்தது. குறிப்பிட்ட கட்டத்தில் மகனின் நலம் கருதி அவனை மனநோய் காப்பகத்தில் கொண்டு சேர்க்க முடிவு செய்திருக்கிறார். அதை அறிந்ததிலிருந்து ஆடம் கோபமாக இருந்திருக்கிறான்.
அமெரிக்காவின் பெரும்பான்மை பதின்ம வயதினரைப் போல கணினி மற்றும் வீடியோ விளையாட்டுகளில் மிகவும் நாட்டம் கொண்டு, குழுவாக இணையத்தின் மூலம் விளையாடுவதிலும் ஆடமுக்கு பெருத்த ஈடுபாடு இருந்துள்ளது. அத்தோடு அமெரிக்க சமூகத்தின் தனிநபர் வாதம், ‘தகுதியுள்ளது மட்டும் தப்பிப் பிழைக்கும்’ என்ற கோட்பாட்டில் இயங்கும் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தில் உயர் பதவி வகிக்கும் தந்தை, அமைதியற்ற வீட்டுச் சூழல் அனைத்தும் சேர்ந்த ஆடம் லான்சாவின் மன இறுக்க குறைபாட்டை மோசமடையச் செய்திருக்கின்றன.
மருத்துவ உதவிக்கு இடையூறு மிக்க மனிதத்தன்மையற்ற சட்டத்திட்டங்களை வகுத்துள்ள அமெரிக்க அரசாங்கம், தங்கு தடை இன்றி துப்பாக்கி வாங்குவதற்கு வசதியான சட்டச் சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. “வேர்மொன்ட்” வகை துப்பாக்கி வகை வாங்க 16 வயது முதல் அனுமதி, நீளத் துப்பாக்கி வாங்கும் உரிமம் 18 வயதுக்கு மேல் அனுமதி, தானியங்கி கைத்துப்பாக்கி வாங்கும் உரிமம் 21 வயதுக்கு மேல் அனுமதி என்று வயது அடிப்படையில் துப்பாக்கிகள் விற்கப்படுகின்றன.
ஆடம் லான்சாவின் தந்தை பீட்டர் லான்சா
ஆடம் லான்சாவின் தந்தை பீட்டர் லான்சா
துப்பாக்கி விற்பனையை தடுத்து நிறுத்தும் எந்த முயற்சியையும் தேசிய ரைபிள் சங்கம் என்ற அமைப்பு பண பலத்தையும் அதிகார பலத்தையும் கொண்டு தடுத்து நிறுத்துகிறது. துப்பாக்கி உற்பத்தி செய்யும் முதலாளிகளோடு, பல ஆயிரக்கணக்கான சாதாரண அமெரிக்கர்களும் துப்பாக்கி சட்டங்களை மாற்றுவதை எதிர்க்கின்றனர். ‘சக மனிதர்களை நம்ப முடியாது, என்னையும் என் குடும்பத்தையும் நானே பாதுகாத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது’ என்று சமூகச் சூழலை சுட்டிக் காட்டி துப்பாக்கி வைத்திருக்கும் உரிமையை இவர்கள் நியாயப்படுத்துகிறார்கள்.
இத்தகைய சூழலில் துப்பாக்கிகள் வாங்கி சேகரிப்பது என்பது திருமதி லான்சாவின் பொழுதுபோக்காக இருந்திருக்கிறது. ஆடம் லான்சாவையும் அவரது சகோதரனையும் துப்பாக்கி சுடும் போட்டிகளுக்கு அழைத்து போவது, அவர்களுக்கு சுடுவதற்கான பயிற்சி அளிப்பது என்று வளர்த்திருக்கிறார்.
மனக் குறைபாடுடைய ஆடம் லான்சா தனது விருப்பத்துக்கு எதிரான நடவடிக்கைகளால் ஆத்திரமடைந்து கோபத்தை வெளிக்காட்ட நினைக்கும் போது கைக்கெட்டிய தூரத்தில் கொலைக் கருவிகள் சட்ட பூர்வமாக வைக்கப்பட்டிருந்திருக்கின்றன. அவற்றை பயன்படுத்தும் முறையான பயிற்சியும் அவனுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அதுதான் இந்த கொடூரமான நிகழ்வுக்கு உடனடி காரணமாக இருந்திருக்கிறது.
குழந்தைகளின் உயிரிழப்பிற்காக கண்ணீர் சிந்திய அதிபர் ஒபாமா, இதை இனியும் தொடர அனுமதிக்க போவதில்லை என்று வாய்ச் சவடால் விட்டாலும், எந்தவிதமான செயல் திட்டத்தையும் முன்வைக்காமல் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு ஹவாய்க்கு குதூகலமாக குடும்பத்துடன் சென்று விட்டார்.
மரபு ரீதியான குறைபாடு, வன்முறையை மனதுக்குள் திணிக்கும் பொழுதுபோக்கு விளையாட்டுகள், தனித்து விடப்படும் கோட்பாட்டை முன் வைக்கும் சமூகச் சூழல், மருத்துவ வசதிகளை மறுக்கும் பொருளாதார அமைப்பு இவை அனைத்தும் சேர்ந்து 28 உயிர்களை பலி வாங்கியிருக்கின்றன. துப்பாக்கியின் விசைகளை அழுத்தியது ஆடம் லான்சாவாக இருந்தாலும் அவன் கையில் இந்த துப்பாக்கியை வைத்த அமெரிக்க ஆயுத தளவாட முதலாளிகள்தான் இந்த கொலைகளுக்கான மூல காரணம் என்பதால் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். அதுவரை அன்றாடம் இத்தகைய மரண பயத்தில்தான் அமெரிக்க மக்கள் வாழ வேண்டும்.
 


பாகிஸ்தானில் தலிபான்கள் ஆதிக்கம் உள்ள வசிரிஸ்தானில் இன்று அதிகாலை அமெரிக்கா விமான தாக்குதல்கள் நடத்தியது. தெற்கு வசிரிஸ்தானில் அங்கூர் அட்டாவில் வந்த வாகனத்தில் தலிபான் தலைவர் முல்லா நசீர், துணைத்தலைவர் ரத்தா கான் ஆகியோர் வந்த வாகனத்தை குறிவைத்து அமெரிக்காவின் உளவு விமானம் குண்டு வீசியது. இதில் நசீர், ரத்தா கான் மற்றும் 4 போராளிகள் கொல்லப்பட்டனர். 

இதனை பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இத்தாக்குதல் நடந்து சில மணி நேரங்களில் வடக்கு வசிரிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதலில் மேலும் 4 போராளிகள் இறந்தனர். புத்தாண்டு பிறந்ததும் நடந்த முதல் விமான தாக்குதல் இதுவாகும். 

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள தெற்கு வசிரிஸ்தானில் செயல்படும் போராளிக் குழுக்களின் கமாணட்ராக செயல்பட்டவர் நசீர். கடந்த 2007-ம் ஆண்டு அவர் பாகிஸ்தான் அரசுடன் அமைதி ஒப்பந்தத்திற்கு முன்வந்தார். அப்போது தங்கள் இயக்கம் பாகிஸ்தான் மண்ணில் தீவிர செயல்களில் ஈடுபடாது என்று உறுதி அளித்திருந்தார். 

ஆனால், அவர் தங்கள் போராளிகளை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி, அமெரிக்க படைகள் மீது தாக்குதல் நடத்துவதாக அமெரிக்க குற்றம் சாட்டி விமான தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts