ஈரான் தொடர்ந்து அணுஆயுதங்களை தயாரித்து குவித்து வருவதாக அமெரிக்கா உட்பட மேற் கத்திய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஈரான் மீது பொருளாதார தடைகளும் விதிக்கப்பட்டன. ஆனால், ஆக்கப்பூர்வ பயன்பாட்டுக்காக மட்டுமே அணுசக்தி உற்பத்தி செய்யப்படுவதாக ஈரான் தொடர்ந்து கூறி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான  இஸ்ரேல்,  அணு உற்பத்தியை ஈரான்  உடனடியாக நிறுத்த தவறினால்  அந்நாடு மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று அமெரிக்காவை வலியுறுத்திள்ளது. ஈரானின் அணு உற்பத்தி  நிலையங்கள் மீது தாக்குதலை
தொடங்க அமெரிக்காவுக்கு 12 மணி நேர கெடுவை இஸ்ரேல் நேற்று விடுத்தது. அவ்வாறு நடைபெறவில்லை எனில் தன்னிச்சையாக தாக்குதல் நடத்தப் போவதாகவும் எச்சரித்துள்ளது.
அமெரிக்க முப்படை இணை தலைவரான ஜெனரல் மார்ட்டினிடம் இஸ்ரேல் ராணுவ அமைச் சர் எகுத் பாரக் இதை தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன
.
ஈரானின் அணு உற்பத்தி நிலையங்களை குறி வைத்து, தாக்குதல் நடத்தி அழிக்கப் போவதாக இஸ்ரேல் திடீரென அறிவித்திருப்பதின் காரணமாக அமெரிக்கா உட்பட உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. அதில் மீண்டும் வெற்றி பெற அமெரிக்க வாழ் இஸ்ரேலியர் களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், அதிபர் ஒபாமாவுக்கு நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது.

ஈரானில் இஸ்லாமிய கொள்கைகள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன. மேற்கத்திய கலாசாரத்துக்கு இங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் வசிக்கும் ஈரான் நடிகை கோல்ஷிப்டே பராஹனி, அந்நாட்டு பத்திரிகைக்கு அரை நிர்வாண போஸ் கொடுத்ததை கண்டித்து அவர் தாய்நாடு திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பார்பி பொம்மைகள் விற்று வந்த பத்துக்கும் அதிகமான  கடைகளுக்கு அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர். மினி ஸ்கர்ட், நீச்சல் உடையில் பார்பி பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன. பெண்கள் பொது இடங்களில் செல்லும்

போது முகத்தை மறைக்கும் அளவுக்கு பர்தா அணிந்து செல்ல வேண்டும் என்று ஈரானில் சட்டதிட்டம் உள்ளது.
இதுபோன்ற ஒரு சமுதாயத்தில் பார்பி பொம்மைகள் கலாசார சீரழிவுக்கு வழிவகுக்கின்றன. இந்த பொம்மைகள் விற்பனைக்கு ஈரானில் கடந்த 90ம் ஆண்டே தடை விதிக்கப்பட்டது.
பார்பி பொம்மைகளுக்கு பதில், ஈரான் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் தாரா - சாரா என்ற பெயரில் இரட்டை பொம்மைகள் அறிமுகம் செய்யப்பட்டன.
எனினும், டெஹ்ரானில் பார்பி பொம்மைகளை விற்பனை செய்து வந்த கடைகளுக்கு சீல் வைத்துள்ளோம் என்று அதிகாரிகள் கூறினர்.
thanks to asiananban.blogspot.com

வெளிநாடுகளைச் சேர்ந்த  161 இஸ்லாமிய மத போதகர்களை  இலங்கையிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு குடிவரவு கட்டுப்பாட்டாளர் சூலாநந்த பெரேரா உத்தரவிட்டுள்ளார். இலங்கையில் தங்கியிருந்து இஸ்லாம் பற்றி பிரசாரம் செய்து வரும் இந்தியாபங்களாதேஷ்பாகிஸ்தான் மற்றும் அரபு நாடுகளிலிருந்து வந்தவர்களே இவ்வாறு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தப்லீக் ஜமாஅத் இயக்கத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் இவர்கள் நாடுமுழுவதும் சென்று இஸ்லாம் பற்றி போதனை செய்து வருகின்றனர்.எனினும்இவர்கள் வீசா சட்டங்களை மீறிசெயற்படுவதாக கூறியே நாட்டில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவர்களின் அலுவலகம் ஒன்று கொட்டாஞ்சேனையிலும் இயங்கி வருவதாகவும் தப்லித் ஜமாட் என்ற அமைப்பை சேர்ந்த இவர்கள் சுற்றுலாவுக்கு இலங்கைக்கு வந்துள்ள நிலையில் வேறு விடயங்களில் ஈடுபடமுடியாது என்று குடிவரவு கட்டுப்பாட்டாளர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும்குறித்த அமைப்பினர் எவ்வித அரசியல் நோக்கங்களையும் கொண்டவர்கள் அல்லர் என்று மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா தெரிவித்துள்ளார்.இவர்கள் இஸ்லாமின் உண்மையை பிரசாரம் செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்தநிலையில் குறித்த அமைப்பினர்,முன்னாள் அமைச்சர் ஏ எச் எம்பௌஸியை சந்தித்து தம்மை இலங்கையில் இருந்து வெளியேறக்கூறும் உத்தரவை விலக்கிக்கொள்ளும் முயற்சியில் நேற்று ஈடுபட்டிருந்தனர்.
நன்றி http://www.madawalanews.com 

அமெரிக்கா:
நிவ் யோக்கில் பலசரக்குக் கடை நடத்திவரும் முஸ்லிம் பெண்மணி   கடைக்கு கொள்ளையடிக்க வந்த கருப்பினத்தவனை கோடலியால் தாக்கி ஓட ஓட விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இரவு நேரம். கடையில் வாடிக்கையாளர்கள் இல்லை . cashier ஆக இருப்பதும் ஒரு பெண். அதட்டினால் பணத்தை தந்து விடுவாள் என்று தப்புக்கணக்கு போட்ட கொள்ளையனுக்கு என்ன நடந்தது என்று நீங்களும் பாருங்களேன் ..
நன்றி http://www.madawalanews.com 


பாகிஸ்தானிய இராணுவ வீரர்கள் 15 பேரை மோசமாகப் படுகொலை செய்யும் காணொளிக் காட்சியை தலிபான்கள் வெளியிட்டுள்ள சம்பவமானது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 2.38 நிமிடங்கள் ஓடக்கூடிய இக்காணொளியில் கடத்திச் செல்லப்பட்ட இராணுவ வீரர்களின் கண்களைக் கட்டி தலிபான்கள் அவர்களை வரிசையாக நிற்க வைத்துள்ளனர்.

பின்னர் அவர்களின் பின்னால் நின்று தலிபான்கள் ஒவ்வொரு உறுப்பினராக சுட்டு வீழ்த்துகின்றனர்.

தமது இயக்க உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்டமைக்கே, இவர்களைக் கொன்றதாகவும் அக்காணொளியில் தலிபான் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

தலிபான் இயக்க உறுப்பினர்கள் கொலைசெய்யப்பட்டால் இத்தகைய கொலைகள் மேலும் தொடரும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். 

இவ்வாறு கொல்லப்பட்ட இராணுவ வீரர்கள் வட மேற்கு பாகிஸ்தானில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி கடத்திச் செல்லப்பட்டிருந்தனர்.

பின்னர் அவர்களின் சடலங்கள் இம்மாத ஆரம்பத்தில் மீட்கப்பட்டன.மேலும் இக்காணொளியில் கடத்திச் செல்லப்பட்ட இராணுவ வீரர் ஒருவர் இக்கடத்தல் சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது என்பதனை விளக்கும் பகுதியொன்றும் இடம்பெற்றுள்ளது.

 தலிபான் அமைப்பு இக்கொலைகளுக்கு உரிமைகோரியிருந்தது.  


பிரான்ஸ் நாட்டு பத்திரிகையில் ஆபாசமான முறையில் புகைப்படத்திற்கு நின்ற ஈரான் நாட்டு நடிகைக்கு நாடு திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரானைச் சேர்ந்த நடிகை  Golshifteh Farahani  (28) லியானோடோ டிகேப்ரியோவின் பாடி ஆப் லைஸ் படத்தில் நடித்துள்ளார்.
மேலும், பல இதழ்களுக்கு புகைப்படத்திற்கு நின்று வருகிறார். சமீத்தில் பிரான்ஸ் இதழ் ஒன்றுக்கு ஆபாசமான புகைப்படத்திற்கு நின்றார்.
அத்துடன் அந்த படத்தை பேஸ்புக்கிலும் வெளியிட்டதால் அதை உலகில் ஏராளமானோர் பார்த்தனர். இதற்கு ஈரானில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தற்போது பிரான்சில் வசிக்கும் பராஹனி கூறுகையில், ஈரான் அரசு அதிகாரிகள் என்னை தொடர்பு கொண்டு, தாய்நாட்டுக்கு வரவேண்டாம் என்று கூறினர் என்று பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார்.
இதுகுறித்து வேறு எந்த தகவலையும் பராஹனி கூறவில்லை. ஆனால் ஈரானில் மத பழமைவாதத்தை எதிர்த்து குரல் கொடுக்க போவதாக நடிகை கூறியுள்ளார்

சம்மாந்துறையை சேர்ந்த ஏ.சீ.எம்.புஹாரி மௌலவி உள்ளிட்ட ஆறு பேர் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் சென்னை விமான நிலையத்தில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 1.5 கோடி இந்திய ரூபா பெறுமதியான 6.5 கிலோ கிராம் போதைப்பொருட்களை சென்னை விமான நிலையத்திலிருந்து கோலாம்பூரிற்கு கடத்த முற்பட்ட போதே, சுமார் 70 வயதான புஹாரி மௌலவி உள்ளிட்ட ஆறு பேர் கடந்த நவம்பர் மாதம் கைது செய்யபப்ட்டதாக இந்தியாவின் "த ஹிந்து" நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
இதனையடுத்து புஹாரி மௌலவிக்கு சொந்தமான சம்மாந்துறை வீடு அண்மையில் பொலிஸாரினால் சோதனையிடப்பட்டதாக, லிஸ் ஊடக பேச்சாளர் எஸ்.பி.அஜித் ரோஹன தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தனர்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் தலைமையகத்தின் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அறிவிறுத்தலையமுடுத்து, நீதிமன்றத்தின் உத்தரவுடனேயே இத்தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கு இடமான எந்தவித பொருட்களை கைப்பற்ற முடியவில்லை. குறித்த வீடு வாடகைக்கு விடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
புஹாரி மௌலவி இந்தியாவில் கைது செய்யப்பட்டமையையடுத்தே, அவரிற்கு சொந்தமான  சம்மாந்துறை வீட்டை சோதனையிட குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் தலைமையகத்தினால் உத்தரவு வந்திருக்கலாம் என எதிர்பார்ப்பதாக சம்மாந்துறை பொலிஸ் நிலைய உயர் அதிகாரி தெரிவித்தார்.
சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.பி தஹாயக்க மற்றும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பெருங்குற்ற பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.இப்றாஹீம் தலைமையிலான குழுவினரே இத்தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் ஜெட் எயார்வேஸ் நிறுவனத்தின் பஸ் ஒன்றின் சாரதியான பாலகுமார் என்பவர் 1.5 கோடி இந்திய ரூபா பெறுமதியான எபிடரின் எனும் போதைப்பொருளை கடத்த முற்பட்டபோது கைது செய்யப்பட்டதாக "த ஹிந்து" பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கோலாலம்பூருக்குச் செல்விருந்த மூன்று பயணிகளிடம் ஒப்படைப்பதற்காக இப்போதைப்பொருளை அவர் கொண்டுசென்றதாகவும் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.
இலங்கையைச் சேர்ந்த மஹ்மூத் புஹாரி அப்துல் காதர், கோடம்பாக்கத்தைச் சேர்ந்த பெண்ணான குலாம் அப்துல் ரஹ்மான் கத்ரியா, ராமநாதபுரம் எஸ்.வி. பட்டிணத்தைச் சேர்ந்த மொஹமட் யூஸுப் மர்சூக் ஆகிய 3 பயணிகள் பாலகுமார் இயக்கிய பஸ்ஸில் ஏறியதாகவும் அந்த பஸ்ஸில் போதைப்பொருள் பொதிகள் வைக்கப்பட்டிருக்கும் இடம் அவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்ததாகவும் "த ஹிந்து" பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அப்பொதிகளை ஸ்கேன் சோதனையிடப்பட்ட பைகளுக்குள் போட முயன்ற போது  அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாகவும் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.
இப்போதைப்பொருட்களை விமான நிலையத்திற்கு கொண்டுவந்ததாக கூறப்படும் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஜாகிர் ஹுஸைன் மற்றும் பல்லவரத்தைச் சேர்ந்த மணிகண்டான் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts