
எப்படி இருந்த நான்… இப்படி ஆயிட்டேன்!” _ சினிமா நகைச்சுவைக்
காட்சியன்றில் எய்ட்ஸ் விளம்பரத்தில் நடிக்கும் நடிகர் விவேக், இப்படி
சிரிப்பைச் சிந்த விடுவார். அந்த வசனம், ஒரு சினிமா நடிகைக்கு மிகச்
சரியாகப் பொருந்தி விட்டது.
நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் தர்கா அருகே ஈ, எறும்பு மொய்க்கக் கிடந்த
அவரை, யாரும் சரியாக அடையாளம் கண்டுகொள்ளவில்லை.
அப்படியே ஆறுநாட்கள்
அனாதையாகக் கிடந்தார் அந்த நடிகை. எய்ட்ஸ் நோய் அவரது இளமையை உருக்குலைத்து
விட்ட நிலையில், கேட்க ஆளின்றிக் கிடந்த அந்த நடிகை நிஷா என்கிற
நூருன்னிசா.
‘இளமை இதோ இதோ’, ‘முயலுக்கு மூனுகால்,’ ‘மானாமதுரை மல்லி’, ‘எனக்காகக்
காத்திரு’ போன்ற பல படங்களில் ஹீரோயினாக நடித்த நிஷாவின் பிறந்த ஊரே
நாகூர்தான் என்பது