கண்டி
நகரில் அமைந்துள்ள சித்திலைப்பை மாவத்தையின் பெயர்ப் பலகையை மை பூசி
அழித்துள்ள இனந் தெரியாத நபர்கள், அதனை வித்யார்த்த மாவத்தை என
மாற்றியுள்ளனர். இச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. அதேபோன்று கண்டி
மீரா மக்காம் பள்ளிவாசலின் சுவரில் முஸ்லிம்களைப் புண்படுத்தும் விதமான
வாசகங்களும் மைகளால் அச்சிட்டு எழுதப்பட்டுள்ளன. "சரியாக இரு. இது சிங்கள
நாடு" எனும் வாசகமே அதில் எழுதப்பட்டுள்ளது. விஷமிகளின் இந்த
செயற்பாடுகள்...
