December 11, 2011.... AL-IHZAN World News

ஸ்டாக்ஹோம்: டோன்னா எல்ஜம்மால் என்கிற 26  வயது பெண்மணியே ஸ்வீடனில் ஹிஜாப் அணிந்து பணி புரியும் முதல் பெண் காவலதிகாரி என்று மெட்ரோ சே என்னும் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. அவர் ஹிஜாப் அணிவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே காவல்துறையில் தாம் இணைய விருப்பப்பட்டார் என்றும் அப்பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து டோன்னா எல்ஜம்மால் தாம் சிறுவயது முதலே மக்களுக்கு சேவை செய்ய ஆர்வம் கொண்டுள்ளதாகவும் கணினி முன் அமர்ந்து பொழுது போக்க தாம் விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் நீண்ட விவாதங்களுக்கு பின்னர் சில வருடங்களுக்கு முன்புதான் போலிஸ் சீருடையின் ஒரு பகுதியாக ஹிஜாப் அணிய தனக்கு வாய்ப்பு கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.



அவரை பொறுத்தவரையில் ஸ்வீடன் ஒரு பன்முக கலாச்சாரத்தை கொண்ட நாடு எனவும் அனைத்து துறைகளிலும் பல்வேறுபட்ட மக்கள் பணிபுரிந்தால்தான் அறிவும் புரிதலும் வளரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

டோன்னா எல்ஜம்மால் சிறுவயது முதலே மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க கூடியவர். மேலும் அவரின் குடும்பம் வெளிநாட்டிலிருந்து ஸ்வீடனில் போய் குடியேறியவர்கள். அவர் சிறைத்துறையில் பணிபுரியும்போதே ஹிஜாப் அணியும் பழக்கம் உடையவர் ஆவார். மேலும் முன்னதாக ஹிஜாப் பற்றி பலரும் விமர்சனம் செய்தனர் என்றும் பின்னர் தன்னை நன்றாக புரிந்துகொண்டதன் விளைவாக விமர்சனங்கள் நின்று போனது என்றும் அவர் கூறியுள்ளார்.


மேலும் ஹிஜாப் எந்த வகையிலும் தனது பணிக்கு இடையூறாக இல்லை என்றும் அது தனது உடலில் ஒரு பகுதி என அவர் கருதுவதாகவும் மற்றும் ஹிஜாப் அணிந்து கொண்டே அணைத்து பணிகளையும் சிறப்பாக செய்ய முடிகிறது என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் வெளிநாட்டவர்கள் இரண்டு பேரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோட் அப்டு அருகில் உள்ள குவாசிம் பெலா நகரில் இரண்டு பேரை அடையாளம் தெரியாத மர்ம கும்பல் துப்பாக்கி முனையில் கார் மூலம் கடத்தி சென்றனர்.
கடத்திச் சென்றவர்களில் ஜேர்மனியை சேர்ந்தவர் பர்ன்ட்(45), இத்தாலியை சேர்ந்தவர் கியோவான்னி(38) என்றும் தொண்டு நிறுவனத்தில் திட்ட இயக்குநர் மற்றும் நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்ததாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 2010ம் ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருவரும் பணிபுரிந்து வருவதாகவும், இவர்கள் கோட் அப்டு பகுதியில் நடைபெறும் பணிகளை பார்வையிட சென்ற போது அவர்களை மர்ம நபர்கள் கடத்தி சென்றதாகவும் பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் கூறினார்.
தாரிக் இ தலிபான் என்ற பாகிஸ்தானி தலிபான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹக்கீமுல்லா மெசூத், அமெரிக்க ஆளில்லா விமானங்களின் தாக்குதலில் பலியானார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் அதை அந்த அமைப்பு மறுத்துள்ளது. பாகிஸ்தானின் பாதுகாப்புக்கு மிகப் பெரும் சவாலாக விளங்கும் பாகிஸ்தானி தலிபான் அமைப்பின் தலைவர் ஹக்கீமுல்லா மெசூத், கடந்த 12ம் திகதி, வடக்கு வஜீரிஸ்தானின் டட்டாகெல் என்ற பகுதியில் நடந்த அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் பலியானார் என அமெரிக்க அதிகாரிகள் சிலர் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தனர்.
ஆப்கன் எல்லையை ஒட்டிய அப்பகுதிக்கு அவர் வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்த போது கொல்லப்பட்டதாக, தலிபான் அமைப்பினர் தந்தியில்லா வானொலி மூலம் பேசிக் கொண்டதை, இடைமறித்து ஒட்டுக் கேட்டதாக அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.
ஆனால், இதுகுறித்து பாகிஸ்தான் தரப்பில் அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், பாகிஸ்தானி தலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் எசனுல்லா எசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் மெசூத் பலியானதாக வெளியான செய்தி தவறானது.
அவர் எங்கிருக்கிறார் என்பதைக் கண்டறிய கிளப்பி விடப்பட்ட புரளிகள் இவை எனத் தெரிவித்தார். டட்டாகெல் பகுதியில் நடந்த ஆளில்லா விமானத் தாக்குதலில் ஒன்பது பேர் பலியானதாகவும் அவர்களில் ஹக்கீமுல்லா இல்லை எனவும் தலிபான் அமைப்பினைச் சேர்ந்தவர்கள் ஒரு பத்திரிகைக்கு தெரிவித்துள்ளனர்.
கடந்த 2009ல் அந்த அமைப்பின் தலைவராக இருந்த பைதுல்லா மெசூத், ஆளில்லா விமானத் தாக்குதலில் பலியான பின், ஹக்கீமுல்லா தலைவரானார். 2010, ஜனவரியில், தெற்கு வஜீரிஸ்தானில் அவர் ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக வெளியான செய்தியை அடுத்து, தனது குரல் பதிவுச் செய்திகளை வெளியிட்டுத் தான் உயிரோடு இருப்பதை வெளியுலகுக்கு நிரூபித்தார் ஹக்கீமுல்லா
அமெரிக்காவின் ஜனாதிபதி மாளிகையான வெள்ளை மாளிகையில் திடீரென புகை கிளம்பியதால் மாளிகை மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த புகை வெள்ளை மாளிகை சுற்றுச்சுவர் அருகேயிருந்து கிளம்பியது, எனவே குண்டு வீசப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளை மாளிக்கைக்கு வெளியே ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்கள் ஏதேனும் வீசியிருப்பார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன
ஈரானால் சுட்டுவீழ்த்தப்பட்ட விமானத்தை போன்று அமெரிக்காவுக்கு பொம்மை விமானத்தை அனுப்பி வைக்க ஈரான் முடிவு செய்துள்ளது.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் 5ம் திகதியன்று ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியை ஒட்டிவுள்ள ஈரான் இராணுவ முகாம்களை உளவு பார்க்க அமெரிக்கா அனுப்பிய ஆர்.-க்யூ-170 என்ற ஆளில்லா உளவு விமானம் ஈரான் இராணுவத்தினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது.
தற்பொழுது அந்த விமானம் தற்போது ஈரான் வசம் உள்ளது. இதையறிந்த அமெரிக்கா அந்த விமானத்தை திருப்பிதருமாறு ஈரானுக்கு கோரிக்கை விடுத்தது.
இதுகுறித்து ஈரான் வானொலி வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்க திருப்பி கேட்ட உளவு விமானத்திற்கு பதிலாக ‌அதே போன்ற பொம்மை விமானம் ஒன்றை தயாரித்துள்ளோம்.
இந்த விமானம் 30 செ.மீ நீளமும், 14 செ.மீ. அகலும் கொண்டது, 70 ஆயிரம் ரியால்(6 டொலர்) மதிப்புடையது. எதிர்வரும் பிப்ரவரி மாதம் 5ம் திகதி ஈரான் நாட்டின் இஸ்லாமிய குடியரசு தோன்றியதன் 34-ம் ஆண்டு விழா கொண்டாடப்படவுள்ளது. அந்த நிகழ்வின் போது இந்த விமானத்தை அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கவுள்ளோம்
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் நடந்து வருகின்றது.
இந்நிலையில் தெற்கு ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று வானில் பறந்து சென்று கொண்டிருந்த போது திடீரென தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது.
இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 6 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் எப்படி நடந்தது என தெரியவில்லை.
ஏனெனில் விபத்து நடந்த போது தெற்கு ஆப்கானிஸ்தான் பகுதிகளில் தீவிரவாதிகள் நடமாட்டம் எதுவும் இல்லை. எனவே ஹெலிகாப்டர் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு இல்லாததால் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதே போன்று கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் கிழக்கு ஆப்கானிஸ்தானில் நேட்டோ படை வீரர்களுடன் சென்ற ஹெலிகாப்டர் நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 22 நேவிசீல் கமாண்டர்கள் உட்பட 30 வீரர்கள் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சுதந்திர தினத்தன்று நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
எனவே, குறித்த காலம் வரையில் எந்தவொரு போராட்டத்தையும் நடத்தக் கூடாது என சரத் பொன்சேகா ஆதரவாளர்களிடம் டிரான் அலஸ் கோரியுள்ளார்.
சரத் பொன்சேகாவை விடுதலை செய்யும் நோக்கில் பல அமைப்புக்கள் பாரியளவில் போராட்டங்களை நடத்தத் திட்டமிட்டிருந்தன.
எனினும், எதிர்வரும் பெப்பரவரி மாதம் 4ம் திகதி வரையில் எந்தவொரு போராட்டத்தையும் நடத்தாது அமைதியை பேணுமாறு டிரான் அலஸ், சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கோரியுள்ளார்.
சுதந்திர தினத்தன்று சரத் பொன்சேகா நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படாவிட்டால் மறு தினமே பாரியளவில் போராட்டங்களை நடத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்

இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ள,தென்னாசியாவிலே மிக உயரமான பல்தொழிற்பாட்டு தொலைத்தொடர்புக் கோபுரத்திற்கு இன்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ அடிக்கல் நாட்டவுள்ளார்.
“கொழும்பு லோட்டஸ் ரவர்” என பெயரிடப்பட்ட நான்கு தட்டு மேடைகளை கொண்ட இந்த 350 மீட்டர் உயரமுடைய கோபுரமானது கொழும்பு டாக்டர். விஜேவர்த்தன மாவத்தையில் 3.06 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் கட்டிடக்கலை பீடத்திலிருந்து இக்கோபுர நிர்மாணிப்புக்கான தொழில்நுட்ப உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், இக்கட்டடத்திற்காக இலங்கை தொலைத்தொடர்பு ஆணையத்தால் 104.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டிருப்பதுடன் நிர்மாணப்பணிகளை 30 மாதங்களில் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இக்கோபுரத்திலிருந்து ஐம்பது வரையான ஔிபரப்பு, ஒலிபரப்பு சேவைகள் வழங்கப்பட இருப்பதுடன் தொலைத்தொடர்பு துறையில் இருபது வரையான சேவைகளை வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு காலி வீதி - மவுன்ட்லெவனியாவில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 9 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர். 

வாகன விபத்தை அடுத்து மவுன்ட்லெவனியா பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். 

தனியார் பஸ் ஒன்றுடன் பாடசாலை வான் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் காயமடைந்தவர்களில் ஒரு மாணவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் ஆறு மாணவர்கள் களுபோவில வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு இருவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 

விபத்து இடம்பெற்றமைக்கு வானின் சாரதியே முழுமையான காரணம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார். 

தற்சமயம் வானின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கல்கிஸ்ஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

Abu Dhabi, UAE: Landlords are being forced to introduce special deals and lower rates in order to attract tenants as new projects come on stream in the capital, a report has said. It also said that Abu Dhabi experienced a steady increase in unit introductions in 2011, which led to significant declines in rental rates especially in areas outside of the city such as Mohammad Bin Zayed City, which offered a bigger supply of new buildings.

நீங்கள் குடியிருக்கும் இடத்தில் வீட்டு வாடகை சமீபகாலமாக அதிகரிக்கிறதா, குறைகிறதா? வீடு மற்றும் அப்பார்ட்மென்ட் யூனிட்டுகளின் உரிமையாளர்கள் வாடகையை குறைத்து, குடியிருப்போரை வசீகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். எங்கேயென்றால், அபுதாபியில்!
ரியல் எஸ்டேட் அட்வைசரி அமைப்பான டஸ்வீக் எஸ்டேட் மார்க்கெட்டிங் நிறுவனம் தனது ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. தலைநகரில் வாடகை கீழ்நோக்கிச் செல்வதாகக் குறிப்பிடுகிறது இந்த ஆய்வு. காரணம், டிமான்டைவிட அதிகமாக கட்டப்படும் யூனிட்டுகள்தான்!
மொஹமட் பின் சையத் நகர்
பொதுவாகவே அபுதாபியில் 5 சதவீத வருடாந்த வாடகை அதிகரிப்பு அமலில் இருந்தது. தற்போது இந்த வாடகை அதிகரிப்பை தள்ளுபடி செய்துவிட வேண்டிய நிலையில் உள்ளனர் வீட்டு உரிமையாளர்கள். ஆனால் கடந்த சில மாதங்களாக, காலியாக உள்ள வீடுகளுக்கு குடியிருப்போரை கவர்வதற்கு அது மட்டும் போதுமானதாக இல்லை.
சில யூனிட்களில் வாடகையுடன் இலவச பர்னிச்சர்களையும் கொடுக்க வேண்டியுள்ளது. எலக்ட்ரிசிட்டி மற்றும் தண்ணீர் கட்டணங்கள் செலுத்தத் தேவையில்லை என்ற சலுகையை வழங்குகின்றனர் சில வீட்டு உரிமையாளர்கள். வேறு சிலரோ ஒருபடி மேலே போய், புதிதாக நீண்டகால வாடகை கன்ட்ராக்ட்களை கையொப்பம் இடுபவர்களுக்கு குறைந்தபட்சம் ஒருமாதம், அதிகபட்சம் இரண்டு மாதங்கள் இலவச வாடகை சலுகை கொடுக்கிறார்கள் என்கிறது டஸ்வீக் எஸ்டேட் ஆய்வு.
கடந்த 2011ம் ஆண்டு, அபுதாபியில் புதிதாகக் கட்டப்பட்ட யூனிட்டுகளின் எண்ணிக்கை ஏறுமுகத்தில் இருந்தது. முக்கியமாக புறநகரப் பகுதிகளில், உதாரணமாக மொஹமட் பின் சையத் நகர் போன்ற இடங்களில், கடந்த ஆண்டு புதிதாகக் கட்டப்பட்ட குடியிருப்பு யூனிட்டுகளின் எண்ணிக்கை வழமையைவிட அதிகம்.
அல்-ரீம் தீவு குடியிருப்பு பகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட குடியிருப்பு யூனிட்டுகளின் எண்ணிக்கை, அங்கு ஏற்கனவே உள்ள யூனிட்டுகளின் எண்ணிக்கையில் 10.5 சதவீதம். அதாவது ஒரு வருடத்தில், 10.5 சதவீத அதிக குடியிருப்புகள் தோன்றியுள்ளன. அல்-ரீம் தீவு வர்த்தக ரென்டல் இடங்களின் அதிகரிப்பு சதவீதம் இதைவிட அதிகம். 12.5 சதவீதத்தால் அந்த எண்ணிக்கை எகிறியுள்ளது.
கடந்த வருட இறுதியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கன்ஸ்ட்ரக்ஷன் வேலைகள் இன்னமும் தொடர்வதால் இந்தப் பகுதியில் இந்த ஆண்டு முதலாவது காலாண்டிலும் அதே போன்ற அதிகரிப்பை எதிர்பார்க்கலாம். அதன் அர்த்தம், வாடகை இன்னமும் குறையப் போகின்றது.
ஜோன்ஸ் லாங் லாசால் நிறுவனத்தின் டைரக்டர் கிரெய்க் ப்ளம்ப், “2012-ம் ஆண்டு அபுதாபியின்
அபுதாபி டவுன்-டவுன் ஏரியா
ரியல் எஸ்டேட் வர்த்தகத்தின் மிக மோசமான ஆண்டாக இருக்கப் போகின்றது. டிமான்ட் குறைவான காரணத்தால் வாடகை மட்டுமின்னி வீட்டு விலைகளிலும் பெரிய வீழ்ச்சியை எதிர்பார்க்கலாம். ரியல் எஸ்டேட் வர்த்தகத்துக்கு இரு மோசமான நிலை என்றாலும், புதிதாக வீடு வாங்க திட்டமிடும் ஆட்களுக்கு இதுதான் அற்புதமான காலப்பகுதி” என்கிறார்.
சமீபத்தைய ஆய்வு ஒன்று, புதிதாக வீடு வாங்கும் எண்ணம் உடையவர்கள், விலை குறைந்து செல்வதைப் பார்த்து, தமது வீடு வாங்கும் திட்டத்தை மாதாமாதம் பிற்போட்டுக்கொண்டு செல்கின்றார்கள் என்றும் சொல்கிறது. இதனால், மார்க்கெட்டில் லிஸ்ட் செய்யப்பட்ட வீடுகள் தேங்கத் தொடங்க, விலை மேலும் குறைகின்றது.
துபாயில் நிலைமை இரு வருடங்களுக்குமுன் கிட்டத்தட்ட இப்படித்தான் இருந்தது. வீட்டு விலைகளும், வாடகைகளும் குறைந்து செல்ல, புதிய யூனிட்டுகள் கட்டப்படுவதில் தேக்கம் ஏற்பட்டு, நிலைமை இப்போது ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. தற்போது விலை வீழ்ச்சி முன்புபோல இல்லாமல் குறைவாக உள்ளது.
துபாயின் த கிரீன்ஸ், அல்-பாஷா, துபாய் மரீனா மற்றும் டவுன்-டவுன் துபாயில் விலை வீழ்ச்சி கடந்த வருடம் வெறும் 5 சதவீதம்தான். ஆனால், துபாயின் வேறு சில பகுதிகளில் நிலைமை சீரடையவில்லை. உதாரணமாக, டிஸ்கவரி கார்டன்ஸ், ஜமேரியா லேக் டவர்ஸ், மற்றும் சிலிகன் ஓஆஸிஸ் பகுதிகளில் கடந்த வருட விலை வீழ்ச்சி 15 சதவீதம்வரை இருந்தது.
இந்தப் பகுதிகளில் குறைந்த விலைக்கு வீடுகளை வாங்கும் அளவில் இன்னமும் லிஸ்டிங்குகள் உள்ளன

Giglio, Italy: The captain of the Costa Concordia was ordered by the coastguard to return to the stricken ship after claiming that the evacuation was almost complete when it had scarcely begun, according to transcripts of radio calls and telephone conversations published today (Tuesday).

The transcripts indicate that the captain, Francesco Schettino, said he was going to return to the vessel. But two Italian newspapers, which published the transcripts, said that he instead walked from the rocks where the liner had come to rest to the port of Giglio.

நடுக்கடலில் கவிழ்ந்த கோஸ்டா கான்கோடியா கப்பலின் கேப்டன், பயணிகளை ஆபத்தில் விட்டுவிட்டு, கப்பலை விட்டு வெளியேறிய தகவலை இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ளன இரு இத்தாலியப் பத்திரிகைகள். கப்பலில் இருந்து வெளியேறி பாறைகளில் நின்றிருந்த கேப்டனை மீண்டும் கப்பலுக்கு செல்லுமாறு கடையோரக் காவற்படையினர் உத்தரவு கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.
அதிர்ச்சி அளிக்கும் இந்த உரையாடல்களை வெளியிட்டுள்ள இத்தாலியப் பத்திரிகைகள், இந்த உரையாடல்களின் ஒலிப்பதிவு தமக்கு எப்படிக் கிடைத்தது என தெரிவிக்கவில்லை. மீடியாவுக்கு தகவல் கிடைக்கும் சோர்ஸ் எது என்பதை வெளியிடத் தேவையில்லை என்பது இத்தாலியச் சட்டம்.
பயணிகள் வெளியேறியபோது சக பயணி ஒருவர் எடுத்த போட்டோ
கப்பலின் கேப்டன் பிரான்செஸ்கோ ஷீட்டினோ தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.
‘கப்பலை கைவிடும்’ உத்தரவை கேப்டன்தான் கொடுத்திருக்கிறார். ‘கைவிடும் உத்தரவு’ (order to abandon) என்பது, இனி கப்பலை காப்பாற்ற முடியாது என்ற நிலை வரும்போது கேப்டனால் கொடுக்கப்படுவது. இந்த உத்தரவு கொடுக்கப்பட்டால், மாலுமிகள் அதன்பின் கப்பலை பாதுகாக்கும் நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டு, பயணிகளை வெளியேற்றும் பணியில் ஈடுபடவேண்டும்.
கோஸ்டா கான்கோடியா கப்பல் விஷயத்தில் இதிலும் ஏதோ மர்மம் இருப்பதாக எழுதியுள்ளது இத்தாலியப் பத்திரிகை Corriere della Sera.
அந்தப் பத்திரிகைக்கு கிடைத்த தகவலின்படி, ‘கைவிடும் உத்தரவு’ கேப்டனால் கொடுக்கப்படுவதற்கு 13 நிமிடங்களுக்கு முன்னரே, பயணிகளை வெளியேற்ற லைஃப்-போட்கள் கடலில் இறக்கப்படத் தொடங்கிவிட்டன. “இது எப்படிச் சாத்தியம்?” என்று கேள்வி எழுப்பும் பத்திரிகை, இதில் ஏதோ மர்மம் உள்ளது என்கிறது.
பலரது சந்தேகம், கப்பலைக் கைவிடும் உத்தரவை கேப்டன் கப்பலில் இருந்து கொடுக்கவில்லை என்பதே. கப்பல் மூழ்கப் போகின்றது என்று தெரிந்தவுடன் கேப்டன் தாம் தப்புவதற்காக ஒரு லைஃப்-போட்டை கடலில் இறக்கியிருக்கலாம். அதைப் பார்த்துவிட்டு மாலுமிகள் சிலர் மற்றைய லைஃப்-போட்களை கடலில் இறக்கத் தொடங்கியிருக்கலாம் என ஊகிக்கப்படுகின்றது.
படகில் ஏறித் தப்பி கடற்கரையோரமாக உள்ள பாறைகளில் பாதுகாப்பாக நின்றவாறே “கப்பலை கைவிட்டுவிட்டு பயணிகளை வெளியேற்றுங்கள்”  என்ற உத்தரவை கேப்டன் கொடுத்திருக்க வேண்டும். கப்பலில் இருந்த ஆயிரக் கணக்கான பயணிகளும் உயிர்தப்ப ஒரே நேரத்தில் முயற்சி செய்யும்போது தமக்கு ஒரு படகு கிடைக்காது போய்விடலாம் என நினைத்தே, கேப்டன் இவ்வாறு செய்திருக்கலாம்.
மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல்
அப்படித்தான் நடந்திருக்க வேண்டும் என்று ஊகிக்கும் விதத்தில் கடலோரக் காவல்படை அதிகாரி ஒருவர் கேப்டனுடன் பேசிய ஒலிப்பதிவுகளை வெளியிட்டுள்ளது மற்றொரு இத்தாலியப் பத்திரிகை Il Fatto.
லிவோர்னோ என்ற இடத்திலுள்ள கடலோரக் காவல்படையின் கமான்டிங் அதிகாரி, கப்பலோடு ரேடியோ தொடர்புகளை மேற்கொள்ள செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. காரணம், கப்பலின் கம்யூனிகேஷன் ரூமில் ரேடியோவை ஆபரேட் பண்ண யாரும் இல்லை. கடலோரக் காவல்படை அதிகாரி, கப்பல் நிறுவனத்தை தொடர்பு கொண்டு, கேப்டனின் செல்போன் இலக்கத்தை பெற்று, அதில் தொடர்பு கொள்ள முயற்சித்தார்.
கப்பலின் மேல்தளத்திலுள்ள ஸ்விம்மிங்-பூல் கவிழ்ந்த நிலையில்..
00.32 மணிக்கு கேப்டன் தனது செல்போனில் பதிலளித்தார். அந்த விநாடியில் இருந்து அவரது உரையாடல் லிவோர்னோ கடலோரக் காவல்படை அலுவலகத்தில் பதிவாகியுள்ளது.
“கேப்டன்.. இன்னமும் எத்தனை பயணிகள் கப்பலில் உள்ளார்கள்?”
“200 அல்லது 300 பேர் இருக்கலாம்”
“பயணிகள் அளைவரும் பத்திரமாக உள்ளார்களா? உயிரிழப்புகள் உண்டா?”
“சரியாகத் தெரியவில்லை. நான் கப்பல் உரிமையாளர்களுடன் போனில் பேசினேன். 40 பயணிகளைக் காணவில்லை என்று அவர்கள் சொன்னார்கள்”
“உங்களுக்கே சரியாகத் தெரியவில்லை, ஆனால் தரையில் உள்ள கப்பல் உரிமையாளர்களுககு தகவல் தெரிகிறதா? இது எப்படி சாத்தியம்?”
பதில் இல்ல.
“கேப்டன்.. நீங்கள் கப்பலில்தானே உள்ளீர்கள்?”
“இல்லை.. இல்லை.. நான் கப்பலில் இல்லை. கப்பலை கைவிடும் உத்தரவு கொடுக்கப்பட்டு விட்டது.”
“என்ன? கப்பலில் நீங்கள் இல்லாமல் கப்பலை கைவிடும் உத்தரவு கொடுத்தீர்களா?”
“நான் உத்தரவு கொடுத்தேனா? இல்லை.. இல்லை.. ம்.. நான் இங்கே இருக்கிறேன்”
“இங்கே என்றால் எங்கே? கப்பலிலா?”
கேப்டன் கப்பலில் இருந்தபோதும், தரையில் கைது செய்யப்பட்ட போதும்...
“இல்லை. வெளியே.. கடலில்.. பாறையில்..” அத்துடன் கேப்டன் தொடர்பை துண்டித்தார்.
மீண்டும் பல தடவைகள் அவரை தொடர்பு கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, ஒரு வழியாக மீண்டும் ஒரு தடவை செல்போனை ஆன்ஸர் பண்ணினார். அப்போது நேரம், அதிகாலை 1.46
“நான் கப்பலின் கேப்டனுடன்தானே பேசுகிறேன்?”
“ஆம். கேப்டன்தான் பேசுகிறேன்”
“நீங்கள் இப்போது கப்பலில் இல்லை என்பது உண்மைதானே?”
“ஆம். கப்பலில் இல்லை. கப்பலை நான்…”
கேப்டனின் பேச்சை இடைவெட்டினார் கடலோரக் காவல்படை அதிகாரி. “கேப்டன் நான் சொல்வதை கவனமாக கேளுங்கள். நீங்கள் இப்போது கப்பலுக்கு திரும்பிச் செல்ல வேண்டும். கப்பலில் இருந்து தொங்கும் கயிற்று ஏணி வழியாக மேலே ஏறிச் செல்லுங்கள். அங்கே நின்று மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வை செய்யுங்கள்”
கேப்டனிடம் இருந்து பதில் இல்லை.
“அங்கே சென்று அங்கிருந்து எம்மை தொடர்புகொண்டு சரியாக எத்தனை பேர் கப்பலில் உள்ளனர் என்பதை எமக்கு தெரிவிக்க வேண்டும். எத்தனை ஆண்கள், எத்தனை பெண்கள், எத்தனை குழந்தைகள் என்ற தெளிவான பிரேக்-டவுன் தரவேண்டும்”
ஹெலிகாப்டர் மூலம் மீட்பு நடவடிக்கைகள்
“ஆனால் நான்.. நான்.. கப்பலுக்கு செல்வது..“
மீண்டும் இடைவெட்டினார் கடலோரக் காவல்படை அதிகாரி. “கேப்டன்.. கவனமாகக் கேளுங்கள்.. இது வேண்டுகோள் அல்ல.. கட்டளை. கப்பல் கைவிடப்படும் உத்தரவை கொடுத்து விட்டீர்கள். இப்போது நான்தான் கமாண்டர். நான் உத்தரவிடுகிறேன். உடனடியாக கப்பலுக்கு திரும்பிச் செல்லுங்கள். அங்கே ஏற்கனவே சில பயணிகள் இறந்துவிட்டார்கள்”
“எத்தனை பேர் இறந்து விட்டார்கள்?”
“ஹா! நீங்கள் எமக்கு சொல்ல வேண்டும் அதை! கப்பல் கேப்டனுக்கு உங்கள் கப்பலில் எத்தனைபேர் இறந்தார்கள் என்ற விபரத்தை நாம் சொல்ல வேண்டியிருக்கிறது. உடனடியாக கப்பலுக்கு திரும்புங்கள். எத்தனை பேர் அஙற்தார்கள் என்று பார்த்துவிட்டு எங்களுக்கும் சொல்லுங்கள்.”
பதில் இல்லை.
“கேப்டன்.. என்ன பதிலில்லை? என்ன செய்வதாக உத்தேசம்? இப்படியே வீடு செல்வதாக திட்டமா? உங்கள் கப்பலுக்கு திரும்புங்கள். உத்தரவை மீறினால் கடுமையான தண்டனைக்கு உள்ளாக நேரிடும். என்ன.. கப்பலுக்கு திரும்புகிறீர்களா?
“சரி.. சரி.. கப்பலுக்கு திரும்புகிறேன். அங்கிருந்து உங்களை தொடர்பு கொள்கிறேன்”
இத்துடன் உரையாடல் முடிகிறது. ஆனால், கேப்டன் கடைசிவரை கப்பலுக்கு திரும்பவில்லை.

-கிக்லியோ, இத்தாலியில் இருந்து பிராங் கைரைவின் குறிப்புகளுடன், ரிஷி


Washington, USA: The Wall Street Journal yesterdat (Saturday) reported that the U.S. has stepped up contingency planning in case Israel launches a military strike on Iran’s nuclear facilities. According to the report, U.S. defense officials are becoming increasingly concerned that Israel is preparing to carry out such a strike.

Tension has mounted between Israel and the West as a senior Israeli government official has called “absolute nonsense” a Friday report in Foreign Policy that Mossad agents posed as CIA officers in order to recruit members of a Pakistani terror group to carry out assassinations and attacks against the regime in Iran.



ஒரு முக்கோண பிரச்னை காரணமாக, ஈரான்மீது இஸ்ரேல் திடீர் தாக்குல் ஒன்றை நடத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. முக்கோணத்தின் ஒரு முனையில் வாஷிங்டனும், மற்றைய முனைகளில் டெஹ்ரான் மற்றும் டெல்-அவிவ் நகரங்கள் உள்ளன. யாரும் எதிர்பாராத விதமாக அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் ஒரு முறுகல்நிலை தோன்றி, நிலைமையை சிக்கலாக்கி உள்ளது.
மறுபுறமாக ஈரானை இந்த இரு நாடுகளும் தனித்தனியாக குறிவைத்துள்ளன.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நேற்று (சனிக்கிழமை) வெளியிட்ட செய்தி ஒன்றில், இஸ்ரேல் திடீரென ஈரானிய அணு உலைமீது தாக்குதல் நடத்தினால், அமெரிக்கா என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து திட்டம் ஒன்று தயாராக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இஸ்ரேல் தாக்குதலுக்கு ரெடியான உள்ளதாகத் தெரிகிறது.
நிலைமை கவலைக்கிடமாகவே உள்ளது.
ஈரானுக்கு இந்த அச்சுறுத்தல் தவிர மற்றொரு சிக்கலும் உள்ளது. அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் ஈரானின் எண்ணை ஏற்றுமதி தொடர்பாக பொருளாதாரத் தடை ஒன்றைக் கொண்டுவரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. ஈரானின் பொருளாதாரமே, அவர்களது எண்ணை ஏற்றுமதியில்தான் தங்கியுள்ளது.
இதே விவகாரத்தின் தொடர்ச்சியாக, உலகம் முழுவதையும் பாதிக்கக்கூடிய சிக்கல் ஒன்றும் ஏற்படவுள்ளது.
ஒருவேளை ஈரானிய எண்ணை ஏற்றுமதி மீது இவர்களது பொருளாதாரத் தடை கொண்டுவரப்பட்டால், உலக எண்ணை டிமான்டுக்கு ஏற்ற சப்ளை இல்லாத நிலை ஏற்படும். அதன் விளைவாக, எண்ணை விலை எகிறும். (ஈரானிய சப்ளை முழுமையாக நிறுத்தப்பட்டால், எண்ணை விலை தற்போது உள்ளதைவிட இருமடங்காகி விடும் என்று ஒரு கணிப்பு உண்டு!)
அமெரிக்க இஸ்ரேலிய முறுகல், நேற்று முன்தினம் வெளியாக செய்தியின் அடிப்படையில் தொடங்கியது. இஸ்ரேலிய உளவுத்துறை சி.ஐ.ஏ.-யின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தியது என்பதே அந்தச் செய்தி. (இங்கே கிளிக் செய்யவும்)
அமெரிக்கா அதிகாரபூர்வமாக இந்தச் செய்தியை இதுவரை மறுக்காத நிலையில், இஸ்ரேல் தனது மறுப்பை திட்டவட்டமான தெரிவித்துள்ளது. “மொசாத் உளவாளிகள் சி.ஐ.ஏ.-யின் பெயரைப் பயன்படுத்தினர் என்று சொல்வது வடிகட்டிய முட்டாள்தனமான கூற்று” என்பது இஸ்ரேலின் இன்றைய அறிக்கை. இந்த அறிக்கை வாஷிங்டனை கோபமடையச் செய்யும் என எதிர்பார்க்கலாம்.
வாஷிங்டனின் கோபம் இஸ்ரேலிய அறிக்கை வெளியான சில மணி நேரத்திலேயே வெளியே தெரியவந்து விட்டது. ‘டைம்’ சஞ்சிகை அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளை மேற்கோள்காட்டி வெளியிட்டுள்ள செய்தி, “ஈரானிய விஞ்ஞானியைக் கொலை செய்ததன் பின்னணியில் இருப்பது மொசாத் மட்டும்தான்” என்கிறது.
அதாவது, ஈரான் அமெரிக்க உளவுத்துறையைக் குற்றம்சாட்ட, அமெரிக்கா இஸ்ரேலிய உளவுத்துறையைக் குற்றம் சாட்டிவிட்டது. எல்லாமே ஒரு கொலை தொடர்பாகத்தான்!
இப்போது புரிகிறதா இதிலுள்ள முக்கோணப் பிரச்னை?

நன்றி http://viruvirupu.com


"உள்நின்று உடற்றும் பசிப்பிணியால் உலகில் வாடும் மக்கள்தொகை எண்ணி முடியாது" உலகின் பசிப்பிணி போக்க நம்மால் என்ன செய்யமுடியும் என்று யோசித்த ஒரு உண(ர்)வகத்தைப் பற்றிய செய்தி இது:

எந்தவிதமான நிபந்தனையுமில்லை. இவ்வுலகின் பொல்லாப் பிணிகளான ஏழ்மையும் வறுமையும் பீடித்த யாரும் வந்து முற்றிலும் இலவசமாக வயிறார உண்ணலாம் என்று சவூதி அரேபியாவின் உணவகம் ஒன்று அறிவித்துள்ளது.

உணவுக்குப் பணம் கொடுக்க இயலாதவர்களும் இலவசமாக எங்கள் உணவகத்தில் வந்து உண்டு செல்வதற்காக எங்கள் கதவுகளைத் திறந்தே வைத்துள்ளோம் என்று தாயிஃப் நகரிலுள்ள அந்த உணவக உரிமையாளர் அறிவித்துள்ளார். தனது பெயரையும் குறிப்பிட அவர் விரும்பவில்லை.
இச்செய்தியை சவூதி அரேபியாவின் பிரசித்திப் பெற்ற ஓகாஸ் அரபு நாளேடு தெரிவித்துள்ளது.

நண்பகலிலிருந்து மதியம் 2 மணி வரை யாரும் வந்து உணவுண்டு செல்லலாம் என்று அந்த உரிமையாளர் அறிவித்துள்ளார்,

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து.  இலவச உணவகங்களை நடத்த அனுமதி கோரி அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனராம்

நன்றி yarlmuslim



"அல்லாஹ் பெயரால் பதவி பிரமாணம் எடுத்தது அரசியல் சட்டப்படி செல்லும்" என அதற்கு எதிராக தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. வழக்கு தொடுத்தவர்மீது 1 லட்சம் அபராதமும் உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது.

2011 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4ம் தேதி ஜார்கண்ட் மாநில ஆளுநராக சையதுஅஹ்மது "அல்லாஹ் கே நாம் பர்" (அல்லாஹ் வின் திருப்பெயரால்) என்று கூறி பதவிபிரமாணம் செய்தார். அரசியல் சட்டப் பிரிவு 159ன் கீழ் அல்லாஹ் பெயரால் அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டது செல்லாது என்று அறிவிக்கக் கோரி கமல் நாயன் பிரபாகர் என்ற மாணவர் ஜார்கண்ட் மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவை ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வழக்கு தொடுத்த அந்த மாணவர் சமூகங்களில் வேற்றுமையை ஏற்படுத்த முனைகிறார் என்றும் ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் குற்றம் சாட்டியது. ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மாணவர் கமல் நாயன் பிரபாகர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி மற்றும் எஸ்.ஜே. முகோ பாத்தியாயா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மேல் முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர்.

அவர்களுடைய தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

"அரசியல் சட்டப் பிரிவு 159, ஒரு ஆளுநர் கடவுளின் பெயரால் அல்லது உளமாற உறுதி அளிக்கிறேன் என்று கூறிபதவிப் பிரமாணம் செய்ய வேண்டும் என்று அறிவிக்கிறது. ஜார்கண்ட் கவர்னராக சையது அஹ்மது 'அல்லாஹ் பெயரால்' பதவி பிரமாணம் ஏற்றுக் கொண்டிருக்கிறார். அவரது செயல் அரசியல் சட்டப் பிரிவு 159-ன் கீழ் எதிரானது அல்ல. அல்லாஹ் பெயரால் ஆளுநர் பதவி ஏற்றுக்கொண்டது அரசியல் சட்டப்படி செல்லத் தக்கதாகும்.

வழக்கு தொடர்ந்திருப்பவர் தீய எண்ணத்தோடு இந்த வழக்கைத் தொடர்ந்திருப்பதாக கருத இடம் இருக்கிறது. உலகம் முழுவதும் கடவுள் உருவமற்றவராகவே கருதப்படுகிறவர். அப்படி இருக்கும் போது ஒரு குறிப்பிட்ட உருவத்தின் பெயரால் ஆளுநர் பதவிப் பிரமாணம் ஏற்றிருக்க வேண்டும் என்று கூறுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. 159-வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள கடவுள் என்ற வார்த்தை ஒரு குறிப்பிட்ட கடவுள் வடிவங்களை மட்டும் கட்டுப்படுத்தாது. கடவுள் என்ற வார்த்தை அரசியல் சட்டப் பிரிவு 159-ல் மதசார்பற்ற முறையிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது.

வழக்கு தொடர்ந்திருப்பவர் கடவுள் என்ற வார்த்தையை ஒரு குறிப்பிட்ட கடவுள் அல்லது உருவத்துக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று விவாதிப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. எனவே, இந்த வழக்கைத் தள்ளுபடி செய்கிறோம். கெட்ட நோக்கத்தோடு வழக்கு தொடரப்பட்டிருப்பதால் வழக்குதொடர்ந்திருப்பவர் 1லட்ச ரூபாய் செலவுத் தொகையாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடுகிறோம்."

இவ்வாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.


சவூதி அரேபியாவின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனங்களுள் ஒன்று பின்லேடன் நிறுவனம். பாக்கிஸ்தானின் அபோதாபாதில் அமெரிக்கப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட அல்காய்தா தலைவர் ஒஸாமா பின்லேடன் இந்நிறுவனத்தலைவரின் மகன்களுள் ஒருவரே.

அமெரிக்காவில் 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற 9/11 எனப்படும் இரட்டைக் கோபுரத் தகர்ப்பு சம்பவத்தில் இந்நிறுவனமும் உடந்தையாக இருந்ததாக அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பலரும் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்நிறுவனம் மீது ஆறு வழக்குகள் பதியப்பட்டிருந்தன.

அந்த வழக்குகள் அனைத்தும் போதிய ஆதாரங்கள் இல்லாமல் இருப்பதாகக் கூறி மன்ஹாட்டன் கூட்டாளுமை நீதிமன்றத்தில் விலக்கம் செய்யப்பட்டுள்ளன. "1993ல் குடும்பத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்ட ஒஸாமாவுக்கு குடும்பத்தினர் 1993க்கு முன் ஆதரவாக இருந்தமை இவ்வழக்குகளை நிரூபிக்கப் போதுமானவையல்ல" என்று நீதிபதி தெரிவித்தார்

முன்னதாக, அமெரிக்க மாவட்ட நீதிபதி ரிச்சர்ட் கேஸி என்பவர், 2005 ஆம் ஆண்டு இந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்ய கோரிய பின்லேடன் நிறுவன மனுவுக்கு மறுப்பு தெரிவித்திருந்தார். அதேவேளை, சவூதி அரேபியாவின் மற்ற சில தரும அறக்கட்டளைகளுக்கு எதிரான வழக்குகளை அவர் தள்ளுபடி செய்திருந்தார்.
thanks to yarlmuslim and inneram.com

ஈராக்கில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் சுமார் 30 ஷியா இனத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் பலியாகினர், 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஈராக்கில் சதாம் உசேன் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்ட பிறகு, ஷியா முஸ்லிம்கள் அதிகளவில் அரசியல் அதிகாரத்திற்கு வந்தனர்.
இதனால் சன்னி முஸ்லிம் இனத்தவர்களுக்கும், ஷியா முஸ்லிம் இனத்தவர்களுக்கும் இடையே அவ்வப்போது தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகின்றது.
எனவே அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் அங்கு தங்கியிருந்து ஈராக்கின் பாதுகாப்பை உறுதி செய்தன. இந்நிலையில் கடந்தாண்டு டிசம்பர் மாதத்தோடு ஈராக்கில் இருந்த அமெரிக்க படைகள் முழுவதுமாக, சொந்த நாட்டிற்கு அழைத்து கொள்ளப்பட்டதால் தற்போது ஈராக்கில் 2 முஸ்லீம் பிரிவினர் இடையே தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் ஈராக்கின் பஸ்ரா நகரின் தென்மேற்கு பகுதியில் உள்ள சுபயர் நகரில் இன்று இரங்கல் கூட்டம் ஒன்று நடந்தது. இதில் அதிகளவில் ஷியா முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்திற்குள் நுழைந்த ஒரு நபர் தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்ததில் 30க்கும் மேற்பட்டோர் பலியாகினர், 90க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறை அதிகாரிகளும், மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து பஸ்ரா மாநகர செய்தித் தொடர்பாளர் அயத் அல் இமாரா கூறியதாவது, வெடிகுண்டு சம்பவம் குறித்த தெளிவான காரணம் எதுவும் தெரியவில்லை. தற்கொலை படையை சேர்ந்த நபரால் வெடிகுண்டு வெடித்ததா அல்லது குறிப்பிட்ட இடத்தில் இருந்த வெடிகுண்டு வெடித்தா என்பது குறித்து விசாரணை நடந்து வருகின்றது. இந்த சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றார்.


சிரயா தலைவர் பஷர் அல் அசாத்துக்கு எதிராகப் போராடும் அந்நாட்டு மக்கள் மீது சிரிய இராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை 3,500 பேர் கொல்லப்பட்டிருப்பதாக ஐ.நா. மன்றத்தின்  மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
சபஷர் அல் அசாத்துக்கு எதிரான மக்கள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் விதத்தில், அரபு லீக் ஒரு ஒப்பந்தத்தைத் தயாரித்தது. அதன்படி, சிரிய அரசு கைது செய்துள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்.
சிரிய தெருக்களில் உள்ள இராணுவம் திரும்பப் பெறப்பட வேண்டும். இதற்கு சம்மதித்து அதிபர் அசாத், கடந்த 2-ம் தேதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.தொடர்ந்து, கடந்த 5-ம் தேதி, 550 கைதிகள் விடுவிக்கப்பட்டதாகவும் அறிவித்தார். ஆனால், இராணுவம் திரும்பப் பெறப்படவில்லை.
மாறாக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்கள் மீதான இராணுவத் தாக்குதல் தொடர்கிறது. இந்நிலையில், நேற்று ஐ.நா., மனித உரிமை அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இதுவரை சிரிய போராட்டத்தில், இராணுவத்தின் தாக்குதலுக்கு 3,500 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

சிரிய குடியரசுத் தலைவர் பஷர் அல் அசாத், பதவி விலக முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும், எதிர்ப்புகளை இரும்புக் கரம் கொண்டு அடக்கப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிரியாவில் அசாத்திற்கு எதிரான போராட்டங்கள் தொடரும் நிலையில், அங்கு அரபு லீக்கின் 165 பிரதிநிதிகள் அடங்கிய குழு நிலவரத்தை நேரில் பார்வையிட்டு வருகிறது. நாட்டின் வடபகுதியில் உள்ள லடாகியா நகரில், அக்குழு மீது நேற்று சிலர் தாக்குதல் நடத்தினர். அதில் குவைத் அதிகாரிகள் இருவர் காயம் அடைந்தனர். எனினும், அக்குழு மீது பலதரப்பிலும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், கடந்தாண்டு ஜூன் மாதத்திற்குப் பின் நேற்று முதன் முதலாக, டமாஸ்கஸ் பல்கலைக்கழகத்தில் சிரிய குடியரசுத் தலைவர் அசாத் பேசினார். அவரது இரண்டு மணி நேரப் பேச்சில் கூறியதாவது:
“பாதுகாப்பு தான் சிரியாவின் தற்போதைய முன்னுரிமை. அதை நிறுவுவதற்காக, பயங்கரவாதிகளை இரும்புக் கரம் கொண்டு அரசு ஒடுக்கும். நமக்கு எதிரான அந்நியச் சதிகளால் நாம் வீழ்ந்துவிடப் போவதில்லை. அரபு லீக், கடந்த 60 ஆண்டுகளாக அரபுநாடுகளின் நலன்களைப் பாதுகாப்பதில் தோல்வியடைந்துவிட்டது. அரபு லீக்கில் இருந்து சிரியா வெளியேறும் பட்சத்தில் அந்த அமைப்பே குலைந்துவிடும். நாம் விரைவில் வெற்றியை அறிவிப்போம். மக்கள் விரும்பினால் நான் பதவி விலகத் தயார்” இவ்வாறு அசாத் தெரிவித்தார்

சீனச் சிறுவனின் அபாரமான திறமையைப் பாருங்கள். இவன் ஒரு காலத்தில் பல கலைகளிலும் விண்ணனாக நிச்சயம் விளங்குவான். நான்கு போத்தல்களை நிமிர்த்தி வைத்து விட்டு அதன் மேல் இருந்து push up செய்கிறான்.
இந்த உடற்பயிற்சியில் கரணம் தப்பினால் கடும் காயங்கள் ஏற்படும். பொறுமையும் நிதானமும் ரொம்பவே முக்கியம். ஒன்று இரண்டு தடவைகள் அல்ல பல தடவைகள் உடற்பயிற்சி செய்கிறான்.
இவ்வகையான செயல்களை செய்யும் சிறுவனின் சாகசத்தை காணொளியில் காணலாம்.
நன்றி http://www.manithan.com

பேஸ்புக்கில் இருக்கும் சில விடயங்கள் படிப்பவர்களை மிகவும் பிரமிக்க வைக்கிறது. சவுதி அரேபியாவை சேர்ந்த சவுத் பின் நாசர் அல் ஷாஹ்ரி என்பவர் பேஸ்புக்கில் தனது மகனை விற்க விளம்பரப்படுத்தி இருப்பதாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது.
உலக அளவில் உள்ள தொழில் நுட்பங்களில் கூட பண நெருக்கடி விளையாடுகிறது. அப்படி பண நெருக்கடி ஏற்பட்டதால் இவர் தனது மகனை விற்க முடிவெடுத்தாக கூறி இருக்கிறார்.
மேலும் இவரது மகனின் விலை 20 மில்லியன் டொலர் என்று பேஸ்புக்கில் கூறி இருக்கிறார். இது போன்று திகைக்க வைக்கும் சில வி்டயங்கள் பேஸ்புக்கில் வெளியாகின்றன.
ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் தனது சொந்த வாழ்கை பற்றி பகிர்ந்து கொள்ள நினைப்பவர்கள் என்று பேஸ்புக்கில் வெளியாகும் செய்திகள் ஒவ்வொன்றும் ஒரு விதம்.
வீடு இல்லாத ஒரு பெண் மணி தனது வாழ்க்கை சூழலை பகிர்ந்து கொண்டதன் விளைவாக அவருக்கு பேஸ்புக் மூலம் நிறைய உதவிகள் கிடைத்ததால் அது பெரிய அளவில் பேசப்பட்டது.
அதற்கு அடுத்தபடியாக சவுதி அரேபியா மனிதர் தனது மகனை விற்க தயாராக இருக்கும் இந்த செய்தி படிப்பவர்களை ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கும்.
இப்படி சமூக ஊடகம் பயன்பாடு தினம் தினம் வித்தியாசப்படுகிறது. மக்கள் இதன் மூலம் நிறைய பயனடைவார்கள் என்று பெரிதும் எதிர் பார்க்கப்படுகிறது.

நன்றி  http://www.manithan.com

எதிரிகள் பிரிந்து இருந்தால் பரவாயில்லை.. ஒன்று கூடினால் என்ன நடக்கும்? பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்...
ஆம், கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் முன்னாள் கியூப அதிபரான பிடல் காஸ்ட்ரோவும்,
அமெரிக்கர்களின் புதிய எதிரி என வர்ணிக்கப்படும் ஈரான் அதிபர் முகமட் அஹமது நியாதுக்கும் இடையிலான சந்திப்பே அது.
அமெரிக்காவின் இரண்டு பெரிய பகைவர்களின் சந்திப்பு அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இரண்டு சிங்கங்களின் சந்திப்பும் இந்த வாரம் கரிபியன் நாட்டில் தான் இடம்பெற்றுள்ளது
அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ஈரானில் அணு ஆயுத திட்டங்களை முன்னெடுத்து வரும் ஈரான் அதிபர் முகமட் அஹமது நியாத் கியூப முன்னாள் அதிபரான பிடல் காஸ்ரோ உடனான சந்திப்பு குறித்து கருத்துத் தெரிவிக்கையில்,
இரண்டு மணி நேரங்கள் இடம்பெற்ற சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
ஈரான் மற்றும் கியூபா உடனான நட்புறவு ஆரம்பத்திலிருந்து சிறப்பாக உள்ளன.
உண்மையில் நாங்கள் ஒரே நோக்கத்துக்காக தொடர்ந்தும் போராடுவோம். நாங்கள் ஏராளமான விடயங்கள் பற்றி கலந்துரையாடினோம். சந்திப்பு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது
நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். எப்போதும் அதே நட்புணர்வுடன் இருப்போம்.
கியூபாவின் தற்போதைய அதிபரான பிடல் கஸ்ரோவின் சகோதரரான ராகுல் காஸ்ரோவையும் ஈரான் அதிபர் சந்தித்து கலந்துரையாடினார்.
இவர்களின் சந்திப்பு அமெரிக்காவை கவலை கொள்ள வைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
நன்றி http://www.manithan.com/

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts