Plane 2இலங்கையில் முதல் முறையாக ஆளில்லா உளவு விமானமொன்று தயாரிக்கப்பட்ட குழுவுக்கு பதுளையை பிறப்பிடமாக கொண்ட   மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட இறுதியாண்டு மாணவரான ஆபித் ருஷ்டி தலைமைதாங்கியுள்ளதுடன், அனுருத்த தென்னகோன், அசோக் அரவிந்த , பசிந்து மதுசங்க, ஹோமேஷ் வத்சலய ஆகிய பொறியியல் பீட நான்கு மாணவர்களும்
புத்த மதத்தைப் பற்றி ஆராயப் புகுமுன் ஒரு விஷயத்தை மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். புத்தர் என்ன தான் போதித்தார் என்று நாம் தெளிவாக அறிந்துக் கொள்ள எத்தகைய வழிமுறையும் இல்லை. தன் வாழ்நாளில் புத்தர் நூல் எதனையும் எழுதவில்லை. தன்னுடைய வழிமுறையை விளக்கிக் கூறும் வண்ணம் தன்னுடைய போதனைகளைத் திரட்டித் தொகுக்கும் பணியை அவர் ஊக்குவிக்கவில்லை.
அவரைப் பின்பற்றியவர்களும் அவருடைய வாழ்நாளிலோ அல்லது அதனை அடுத்து வந்த காலகட்டத்திலோ

மொஸ்கோ விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய விமானமொன்றில், பயணச்சீட்டு வாங்காமல் திருட்டுத்தனமாக பயணம் செய்த நபர் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.

இத்தாலியின் ரிமினி நகரில் இருந்து ஐ-ப்ளை விமான நிறுவனத்தின் ஏ-330 பயணிகள் விமானம் நேற்று அதிகாலை ரஷ்யாவின் மொஸ்கோ விமான நிலையத்திற்கு வந்து இறங்கியது.

அந்த விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கி சென்ற பிறகு, விமானத்தின் சக்கரங்களை அதிகாரிகள் பரிசோதனை
பொசன் விஷேட தினம் முதல் அனுராதபுர மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் மாடுகள் அறுக்கப்படுவதை தடை செய்யும் விதமாக அனுராதபுர மாநகர சபையினால் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

அனுராதபுரம் மாநகர சபையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கொண்டுவந்த தீர்மானமே எதிர்கட்சியின் ஆதரவுடன் இவ்வாறு நிறைவேற்றப்பட்டுள்ளது.
குழந்தைகள், பெண்கள் உள்பட 16 அப்பாவி ஆப்கானியர்களை அநியாயமாக கூட்டுப்படுகொலைச் செய்த சம்பவத்தில் அமெரிக்க ராணுவ வீரர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளான். மரணத் தண்டனையில் இருந்து தப்பவே 39 வயதான அமெரிக்க ராணுவ வீரர் ராபர்ட் பெயில்ஸ் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக அவனுடைய வழக்குரைஞர்
அநுராதபுர மாவட்டத்தில் பலாகல பிரதேச செயலாளர் அலுவலகத்தில் பணியாற்றும் முஸ்லிம் பெண்கள் காரியாலய தினமான திங்கள் மற்றும் புதன் ஆகிய தினங்களில் ஹபாயா அணியக்கூடாது என பலாகல பிரேதேச செயலாளர் கே.பீ.எஸ்.பீ. கழுவாராய்ச்சி கட்டளையிட்டுள்ளார்.
அப்பிரேதச சபையில் 9 பெண் முஸ்லிம் உத்தியோகத்தர்கள் பணி புரிவதாகவும்
BBS எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கல்முனையிலும் அம்பாறையிலும் பொதுபல சேனா ஒன்றுகூடலை நடாத்துவதற்கு ஏற்கனவே திட்டமிட்டிருந்தது. சிங்களவர்களே இல்லாத, முஸ்லிம்கள் செறிந்து வாழும் கல்முனையில் இந்த ஒன்றுகூடலுக்கு எதிராக பலத்த எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன.

இந்நிலையில், கல்முனையில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழ் மக்களுடனான பொதுபல சேனாவின் ஒன்றுகூடல் அம்பாறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறித்த தமிழ் மக்களை
இலங்கையில் 23 ஆண்டுகளுக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு இலக்கான காத்தான்குடி பள்ளிவாசல் புனரமைக்கப்பட்டாலும், அப்போது ஏற்பட்ட அழிவுகளின் அடையாளங்கள் தொடர்ந்து இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1990 ஆம் ஆண்டு இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான போர் நிறுத்தம் முறிவடைந்த காலத்தில், ஒகஸ்ட் மாதம் 3 திகதி இரவு காத்தான்குடி மீரா ஜும்மா பள்ளிவாசல் மீது விடுதலைப் புலிகளால் தாக்குதல்
வவுனியா நெடுங்கேணியில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சந்தேக நபரை, பாதிக்கப்பட்ட சிறுமி வெள்ளியன்று நீதிமன்றத்தில் அடையாளம் காட்டியுள்ளதாகப் பொலிசார் தெரிவத்துள்ளனர்.

கடந்த மாதம் 14 ஆம் திகதி நெடுங்கேணி சேனைப்பிலவில் பாடசாலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பக் காத்திருந்த இந்தச் சிறுமி அடையாளம் தெரியாத ஒருவரால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளாள்.

பின்னர், பாழடைந்த கிணறு ஒன்றுக்கருகில் உள்ள பற்றைக்குள்ளிருந்து
பம்பலப்பிட்டியில் வைத்து வர்த்தகர் ஒருவர் கொலைச்செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் மூவர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வு பிரிவினராலேயே இவர்கள் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இருவர் சிவிலியன்கள் என்றும்
புதுடெல்லி:
சுதந்திரத்திற்கு முன்பு பாகிஸ்தானின் ஸ்தாபகர் முஹம்மது அலி ஜின்னா ஆற்றிய இரண்டு உரைகளை ஆல் இந்தியா ரேடியோ வெளியிட வேண்டும் என்று மத்திய தகவல் உரிமை ஆணையம்(சி.ஐ.சி) மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த உரைகளை வெளியிடாமல் தடுத்துவைப்பதற்கான காரணத்தை விளக்கவும் சி.ஏ.சி வலியுறுத்தியுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கு மேலாக கடந்த சூழலில்சுதந்திரத்திற்கு முந்தைய காரியங்களை மக்களுக்கு கிடைக்க
பெண்கள் வீட்டுப் பணிப்பெண்களாக வெளிநாடு செல்வதை தடுத்து நிறுத்துமாறு கோரி கிழக்கு மாகாணம் தழுவிய வகையில் ஒரு இலட்சம்பேரிடம்; கையொப்பங்களை பெற்று அரசுத்தலைவர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சருக்கு அனுப்பவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத்தின் தலைவர் வி.கமலதாஸ் தெரிவித்தார்.

இலங்கையிலிருந்து வெளிநாட்டுக்காக செல்லும் பணிப்பெண்கள் பலதரப்பட்ட பிரச்சினைகளை அங்கு

பலஸ்தீனத்தில் நடைபெறும் சர்வதேச இஸ்லாமிய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை காரணமாக அவசரமாக நாடு திரும்புவதாக முஸ்லிம் காங்கிரஸின் ஊடகப்பிரிவு
பம்பலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் வர்த்தகரான சியாமின் படுகொலைக்கு 21 கோடி ரூபா கடன் விவகாரமே காரணம் என தற்போது விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இக் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரான நண்பர், கொலையுண்ட வர்த்தகருக்கு 21 கோடி ரூபா கடன் கொடுக்க வேண்டும் எனவும் அதனைக் கொடுக்க முடியாத நிலையிலேயே அவரைக் கொலை செய்வதற்கு திட்டமிட்டதாகவும் பொலிஸ் விசாரணைகளிலிலிருந்து
சிங்கள கடும்போக்குவாத அமைப்பான பொது பல சேனா கல்முனையில் ஊடுருவ மேற்கொள்ளும் முயற்சியானது முஸ்லிம்களை சீண்டி கலவரத்திற்கு வழியேற்படுத்தும் சதித் திட்டமாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத்தலைவருமான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து அவர் வெளியிட்டுள்ள
இரு வேறு கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இரு சவுதி பிரஜைகளுக்கு நேற்றைய தினம் மரண தண்டணை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சவுதி அரேபிய உள்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

மொஹமட் அல் அம்ரி எனும் தனது உறவுக்காரரை காரை ஏற்றிக் கொன்ற

சிரியாவில் அரச படைகளால் முற்றுகையிடப்பட்ட நிலையில் உள்ள குஸெயர் நகரின் நிலைமை மோசமடைந்துள்ளது.
அங்கு அவசர நிவாரண உதவிகளைக் கொண்டுசெல்ல சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அனுமதி கோரியுள்ளது. ஆனால் இராணுவ நடவடிக்கைகள் முடிந்த பின்னரே அனுமதி கிடைக்கும் என்பதற்கான அறிகுறிகளே தெரிகின்றன.

அங்கு சிரியாவின் அரச படைகளுடன் லெபனான் ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லாவும் இணைந்துகொண்டுள்ளது.கிளர்ச்சிப் படையினரின் கட்டுப்பாட்டிலிருந்த கேந்திர முக்கியத்துவம்
மட்டக்களப்பு பிள்ளையாரடியில் புத்தர் சிலை நிர்மாணிப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என பொது பல சேனாவின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதியில் உரிய அனுமதியின்றி புத்தர் சிலை நிர்மாணிப்பது தவறான அணுகுமுறையாகும். அப்பகுதி மக்களுடன் கலந்து பேசிய பின்னரே இதுபற்றி இறுதித் தீர்மானத்திற்கு வரவேண்டும். மட்டக்களப்பு மங்களாராம விகாராதிபதியின் இந்த முன்னெடுப்பு வீணான பிரச்சினைகளுக்கே வழிவகுக்கும்.

இந்த விடயம் தொடர்பில் பொது பல சேனாவினதும் சிங்கள ராவயவினதும் உதவியைப் பெற்றுக் கொள்ளப் போவதாக மட்டக்களப்பு மங்காராம விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார். இருப்பினும்

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts