அட்டாளைச்சேனை கடைகளுக்குள் நுழைந்து மாட்டிறைச்சியை ஜீப்பில் ஏற்றிய பொலிஸார் ; பொதுமக்கள் வாக்குவாதம்... அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள மாட்டிறைச்சிக் கடைகளில் இறைச்சி விற்பதற்கு அக்கரைப்பற்று பொலிஸார் தடை விதித்துள்ளனர்.
இன்று (27) காலை 9.30 மணியளவில் அட்டாளைச்சேனை மார்க்கட் சதுக்கத்தில் அமைந்துள்ள மாட்டிறைச்சிக் கடைக்கு வந்த பொலிஸார் மாட்டிறைச்சிகளை பொலிஸ் வண்டியில் ஏற்றியதுடன் கடை உரிமையாளரையும் விசாரணைக்காக ஜீப் வண்டியில் ஏறுமாறு உத்தரவிட்டனர்.
சம்பவ இடத்தில் ஒன்று கூடிய பொதுமக்கள் பிரதேச சபை மாடு அறுப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளதால் மாட்டிறைச்சியைப்
பொலிஸ் வண்டியிலிருந்து இறக்குமாறும், உரிமையாளரையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல முடியாது எனவும் பொதுமக்கள் கூறியதுடன் தவிசாளர் சம்பவ இடத்துக்கு வரும்வரை பொலிஸார் எந்த நடவடிக்கைகளையும் எடுக்க முடியாது எனவும் கூறினர்.
இதேநேரம் சம்பவ இடத்துக்கு வருகை தந்த உதவித் தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா பொலிஸாருடன் நடந்த விடயம் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அறுத்த மாட்டிறைச்சியை விற்பதற்கான அனுமதியை பெற்றுக்கொண்டார். இதனால் பொலிஸ் வண்டியில் ஏற்றப்பட்ட இறைச்சி இறக்கப்பட்டதுடன் தற்போது கடை திறக்கப்பட்டு இறைச்சி விற்பனை செய்யப்படுகின்றது.
இருந்தும் இறைச்சிக்கடை உரிமையாளரிடம் பொலிஸார் வாக்கு மூலத்தையும் பெற்றுக் கொண்டனர். அதுமட்டுமல்ல மாடு அறுப்பதற்கும், விற்பதற்கும் இதுவரை எந்தத் தடை உத்தரவும் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குக் கிடைக்காததால் நாம் எமது பிரதேசத்தில் மாடு அறுப்பதற்கும் விற்பதற்கும் அனுமதி வழங்கியுள்ளோம்'' என்றார்

0 கருத்துகள்: