.jpg)
சம்மாந்துறையை சேர்ந்த ஏ.சீ.எம்.புஹாரி மௌலவி உள்ளிட்ட ஆறு பேர் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் சென்னை விமான நிலையத்தில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 1.5 கோடி இந்திய ரூபா பெறுமதியான 6.5 கிலோ கிராம் போதைப்பொருட்களை சென்னை விமான நிலையத்திலிருந்து கோலாம்பூரிற்கு கடத்த முற்பட்ட போதே, சுமார் 70 வயதான புஹாரி மௌலவி உள்ளிட்ட ஆறு பேர் கடந்த நவம்பர் மாதம் கைது செய்யபப்ட்டதாக இந்தியாவின் "த ஹிந்து" நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
இதனையடுத்து புஹாரி மௌலவிக்கு சொந்தமான சம்மாந்துறை வீடு அண்மையில் பொலிஸாரினால் சோதனையிடப்பட்டதாக, லிஸ் ஊடக பேச்சாளர் எஸ்.பி.அஜித் ரோஹன தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தனர்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் தலைமையகத்தின் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அறிவிறுத்தலையமுடுத்து, நீதிமன்றத்தின் உத்தரவுடனேயே இத்தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கு இடமான எந்தவித பொருட்களை கைப்பற்ற முடியவில்லை. குறித்த வீடு வாடகைக்கு விடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
புஹாரி மௌலவி இந்தியாவில் கைது செய்யப்பட்டமையையடுத்தே, அவரிற்கு சொந்தமான சம்மாந்துறை வீட்டை சோதனையிட குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் தலைமையகத்தினால் உத்தரவு வந்திருக்கலாம் என எதிர்பார்ப்பதாக சம்மாந்துறை பொலிஸ் நிலைய உயர் அதிகாரி தெரிவித்தார்.
சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.பி தஹாயக்க மற்றும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பெருங்குற்ற பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.இப்றாஹீம் தலைமையிலான குழுவினரே இத்தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் ஜெட் எயார்வேஸ் நிறுவனத்தின் பஸ் ஒன்றின் சாரதியான பாலகுமார் என்பவர் 1.5 கோடி இந்திய ரூபா பெறுமதியான எபிடரின் எனும் போதைப்பொருளை கடத்த முற்பட்டபோது கைது செய்யப்பட்டதாக "த ஹிந்து" பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கோலாலம்பூருக்குச் செல்விருந்த மூன்று பயணிகளிடம் ஒப்படைப்பதற்காக இப்போதைப்பொருளை அவர் கொண்டுசென்றதாகவும் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.
இலங்கையைச் சேர்ந்த மஹ்மூத் புஹாரி அப்துல் காதர், கோடம்பாக்கத்தைச் சேர்ந்த பெண்ணான குலாம் அப்துல் ரஹ்மான் கத்ரியா, ராமநாதபுரம் எஸ்.வி. பட்டிணத்தைச் சேர்ந்த மொஹமட் யூஸுப் மர்சூக் ஆகிய 3 பயணிகள் பாலகுமார் இயக்கிய பஸ்ஸில் ஏறியதாகவும் அந்த பஸ்ஸில் போதைப்பொருள் பொதிகள் வைக்கப்பட்டிருக்கும் இடம் அவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்ததாகவும் "த ஹிந்து" பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அப்பொதிகளை ஸ்கேன் சோதனையிடப்பட்ட பைகளுக்குள் போட முயன்ற போது அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாகவும் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.
இப்போதைப்பொருட்களை விமான நிலையத்திற்கு கொண்டுவந்ததாக கூறப்படும் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஜாகிர் ஹுஸைன் மற்றும் பல்லவரத்தைச் சேர்ந்த மணிகண்டான் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
0 கருத்துகள்: