
பிரான்ஸ் நாட்டு பத்திரிகையில் ஆபாசமான முறையில் புகைப்படத்திற்கு நின்ற ஈரான் நாட்டு நடிகைக்கு நாடு திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரானைச் சேர்ந்த நடிகை Golshifteh Farahani (28) லியானோடோ டிகேப்ரியோவின் பாடி ஆப் லைஸ் படத்தில் நடித்துள்ளார்.
மேலும், பல இதழ்களுக்கு புகைப்படத்திற்கு நின்று வருகிறார். சமீத்தில் பிரான்ஸ் இதழ் ஒன்றுக்கு ஆபாசமான புகைப்படத்திற்கு நின்றார்.
அத்துடன் அந்த படத்தை பேஸ்புக்கிலும் வெளியிட்டதால் அதை உலகில் ஏராளமானோர் பார்த்தனர். இதற்கு ஈரானில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தற்போது பிரான்சில் வசிக்கும் பராஹனி கூறுகையில், ஈரான் அரசு அதிகாரிகள் என்னை தொடர்பு கொண்டு, தாய்நாட்டுக்கு வரவேண்டாம் என்று கூறினர் என்று பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார்.
இதுகுறித்து வேறு எந்த தகவலையும் பராஹனி கூறவில்லை. ஆனால் ஈரானில் மத பழமைவாதத்தை எதிர்த்து குரல் கொடுக்க போவதாக நடிகை கூறியுள்ளார்
0 கருத்துகள்: