
இந்த பெண் யார்
என்று தெரிகிறதா? மலாலா மலாலா என்று தினமும் செய்திகளை வெளியிடும் எந்த ஒரு
அமெரிக்க சார்பு ஊடகங்களாவது இவரை பற்றி செய்திகளை வெளியிட்டிருக்குமா?
இவரது பெயர் நபிலா பாகிஸ்தானின் வர்ஜிச்தான் மாகாணத்தை
சேர்ந்தவர்.அமெரிக்காவின் கோரமான தாக்குதலுக்கு எதிராக விவரித்தவர்.
மலாலாவை போலத்தான் ஆனால் என்ன மலாலாவை
தூக்கி பிடிக்கும் எந்த ஒரு மீடியாவும் இவரை பற்றிய எந்த ஒரு செய்தியையும்
வெளியிடுவதே கிடையாது. காரணம் மலாலாவின் குற்றசாட்டுக்கள் அனைத்தும்
அமெரிக்க எதிரியான தாலிபான்களை பற்றியது. அதில் கூட பல சர்சைகள் உள்ளன
இருந்தும் அதை பற்றி எந்த ஒரு ஊடகமும் கண்டுகொள்வதில்லை ஆனால் இவரின்
குற்றசாட்டுக்கள் அமெரிக்காவின் கோரமான தாக்குதலால் கொல்லப்பட்ட
அமெரிக்காவுக்கு எதிரான செய்திகள்.
அக்டோபர் 2012 ஆம் ஆண்டு ஊடகங்களில்
வெளிவந்த செய்தி அமெரிக்காவின் ஆளில்லா விமாங்கள் மூலம் 4 தீவிரவாதிகள்
கொல்லப்பட்டனர் என்பது. ஆனால் இந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில்
மூன்று பேர் பெண்கள். இதில் இவரது குடும்பத்தினரும் அடக்கம்.. வழக்கம் போல
எந்த ஒரு ஊடகமும் இந்த செய்தியை வெளியிடவே இல்லை. ஊடகங்கள் என்றைக்கும்
அவர்களின் எஜமானனுக்கு ஆதரவான செய்திகளை மட்டும் தான் வெளியிடும். இது தான்
இன்று நடந்து வருகிறது.
உலகின் பெருமான்மை ஊடகங்களை
கட்டுப்படுத்துவது அமேரிக்கா தான்.. அப்படி இருக்கும் போது எப்படி இந்த
ஊடகங்கள் அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு எதிரான செய்திகளை மக்கள்
மன்றத்தில் வெளியிடும். இதனால் தான் அமெரிக்க ஆதரவு ஊடகங்கள் தலிபான்களை
பென்னடிமைவாதிகள், தீவிராவதிகள் என்ற பொய்யை மீண்டும் மீண்டும்
வெளியிட்டுவருகிரார்கள்.. அப்பொழுது தானே மக்களும் தலிபான்கள் கொல்லப்பட
வேண்டியவர்கள் என்ற மனநிலைக்கு வருவார்கள்..
அங்கு கொல்லப்பட்ட இலட்சக்கணகான பெண்கள்
குழந்தைகளை பற்றி கொஞ்சம் கூட வருத்தப்பட மாட்டார்கள்.. இது தான் இன்று
நடந்து வரும் எதார்த்த உண்மையும் கூட.. இதை பற்றியெல்லாம் நாம்
என்றைக்காவது சிந்தித்து இருப்போமா? இல்லை என்பதே உண்மை..
ஊடகங்கள் நம்மை சிந்திக்கவும்
விடப்போவதில்லை என்பதே உண்மையும் கூட. உலகின் மிகப்பெரிய முட்டாள் யார்
என்றால் ஊடகங்களில் வரும் செய்திகளை அப்படியே எந்த வித சிந்தனையும்
இல்லாமல் நம்புபவன் தான்.
0 கருத்துகள்: