மதமாற்ற
தடைச்சட்டத்தை உடனடியாக பாராளுமன்றத்தில் நிறைவேற்றுமாறும்,
புத்தசாசன அமைச்சரை மாற்றுமாறும் வலியுறுத்தி இன்று
வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு கொழும்பிலுள்ள புத்தசாசன
அமைச்சில் சுற்றிவளைப்புப் போராட்டமொன்றை பொது பலசேனா
நடத்தவுள்ளதாக அதன் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்
தெரிவித்துள்ளார். புத்தசாசன அமைச்சின் சேவைகள் நாட்டுக்கு சரியாகக் கிடைப்பதில்லையென்றும் தேரர் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஞானசார தேரர் மேலும் தெரிவிக்கையில்,
புத்தசாசன அமைச்சராகப் பிரதமர் பதவி வகிக்கின்றார். ஆனால்,இவ்
அமைச்சு தொடர்பான செயற்பாடுகள் எதுவும் இடம்பெறுவதில்லை.
எனவே, உடனடியாக புத்தசாசன அமைச்சரை மாற்றவேண்டும். புதிய
செயற்பாட்டுத் திறன்கொண்ட ஒருவரை நியமிக்க வேண்டுமென்பதே எமது
பிரதான கோரிக்கையாகும்.
எனவே,
உடனடியாக மதமாற்ற தடைச்சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற
வேண்டும் என்ற பிரதான கோரிக்கைகளோடும். பெளத்த மதத்தைப்
பாதுகாப்பதற்கான வேறு பல கோரிக்கைகளையும் முன்வைத்தே இன்றைய
சுற்றிவளைப்புப் போராட்டம் நடைபெறவுள்ளதாகவும் ஞானசார தேரர் தெரிவித்தார்.
இந்தப் போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பெளத்த குருமார் கலந்துகொள்ளவுள்ளனர்.
0 கருத்துகள்: