பாகம் -2



இஸ்லாம் – கேள்விபதில்கள் : அல்-குர்ஆன் 


Q1) குர்ஆன் என்பதற்கு என்ன பொருள்?

A) ஓதுதல்! (that which is recited; or that which is dictated in memory form)

Q2) குர்ஆன் யாரால் அருளப்பட்டது?
A) அகிலங்கள் அனைத்தையும் படைத்த அல்லாஹ்வால் அருளப்பட்டது

Q3) குர்ஆன் எந்த இரவில் அருளப்பட்டது?
A) லைலத்துல் கத்ர் 
இரவில்



Q4) குர்ஆன் யார் மூலமாக அருளப்பட்டது
A) கண்ணியமிக்க வானவர் ஜிப்ரயீல் (அலைஅவர்களின் மூலமாக.

Q5) குர்ஆன் எந்த தூதருக்கு அருளப்பட்டது?
A) இறுதி தூதர் முஹம்மது (ஸல்அவர்களுக்கு.

Q6) முதன் முதலாக குர்ஆன் எந்த இடத்தில் வைத்து அருளப்பட்டது?
A) மக்காவிலுள்ள ஹிரா குகையில் அருளப்பட்டது

Q7) எந்த கலிபாவின் ஆட்சிக் காலத்தில் குர்ஆன் எழுத்து வடிவில் தொகுக்கப்பட்டது?
A) அபூபக்கர் (ரலிஅவர்களின்ஆட்சிக்காலத்தில்

Q8) எந்த கலிபாவின் ஆட்சிக் காலத்தில் குர்ஆன் முதன் முதலாக பிரதியெடுக்கப்பட்டது?
A) உதுமான் (ரலிஅவர்களின் ஆட்சிக் காலத்தில்.

Q9) கலிபா உதுமான் அவர்களின் காலத்தில் பிரதியெடுக்கப்பட்ட குர்ஆன் தற்போது எங்கிருக்கிறது?
A) ஒன்று தாஸ்கண்டிலும்மற்றொன்று துர்கியின் இஸ்தான்புல் அருங்காட்சியகத்தில் உள்ளது.

Q10) அல்லாஹ்விடத்தில் உயர்ந்த அந்தஸ்து உடையவர்கள் யார் என குர்ஆன் கூறுகிறது?
A) தக்வா (இறையச்சம்உடையவர்கள்

Q11) குர்ஆனில் மிகப்பெரிய அத்தியாயம் எது?
A) சூரத்துல் பகரா (இரண்டாவது அத்தியாயம்)

Q13) குர்ஆனில் மிகச் சிறிய அத்தியாயம் எது?
A) சூரத்துல் கவ்ஸர் (108 வது அத்தியாயம்)

Q14) குர்ஆனை பாதுகாப்பது யார் பொறுப்பில் உள்ளது?
A) அதை இறக்கிய இறைவனே அதன் பாதுகாவலன் ஆவான்.

Q15) நபி (ஸல்அவர்களின் எத்தனையாவது வயதில் முதன் முதலாக குர்ஆன் அருளப்பட்டது?
A) 40 ஆவது வயதில்

Q16) குர்ஆனுக்கு இருக்கும் மற்ற பெயர்களில் சிலவற்றைக் கூறுக:
A) அல்-ஃபுர்கான்அல்-கிதாப்அத்-திக்ர்அல்-நூர்அல்-ஹூதா

Q17) இறைவன் நம்மோடு இருக்கிறான் என கூறிய நபி யார்?
A) முஹம்மது  (ஸல்அத் தவ்பா(9:40)

Q18) ஜின்களுக்கு மறைவான விஷயங்கள் தெரியுமா?
A) ஜின்களுக்கு மறைவான விஷயங்கள் தெரியாதுஅஸ் ஸபா(34:14) மற்றும் அல் ஜின்னு(72:10)

Q19) குர்ஆனில் மூன்றில் ஒரு பகுதி என சிறப்பித்துக் கூறப்பட்ட சூரா எது?
A) சூரத்துல் இக்லாஸ் (112 வது அத்தியாயம்)

Q20) குர்ஆனில் எத்தனை அத்தியாயங்கள் இருக்கிறது?
A) 114 அத்தியாயங்கள்

Q21) நபி முஸா (அலைஅவர்களோடு இறைவன் பேசிய பள்ளத்தாக்கின் பெயர் என்ன?
A) துவா பள்ளத்தாக்குஅந் நாஜிஆத்(79:16), தாஹா(20:12). இது தூர் மலையின் அடிவாரத்தில் உள்ளது. (19:52)

Q22) அல்-குர்ஆனை மனனம் செய்த முதல் மனிதர் யார்?
A) முஹம்மது நபி (ஸல்அவர்கள்

Q23) நபி (ஸல்அவர்களின் பெயர்கள் குர்ஆனில் எத்தனை முறை இடம் பெற்றுள்ளது?
A) முஹம்மது (ஸல்என நான்கு முறையும்அஹ்மது என ஒரு முறையும் இடம் பெற்றுள்ளது.

Q24) இறைவனை வணங்குவதற்காக கட்டப்பட்ட முதல் இறையில்லம் எது என குர்ஆன் கூறுகிறது?
A) கஃபா

Q25) எதிர்கால சந்ததியினருக்கு அத்தாட்சியாக விட்டு வைக்கப்பட்டுள்ளவற்றில் இரண்டைக் கூறுக:
A) நூஹ் (அலைஅவர்களின் கப்பல் (54:15), மற்றும் பிர்அவ்னின் உடல் (10:92)

Q26) நூஹ் நபியின் கப்பல் எங்கு ஒதுங்கியது என குர்ஆன் கூறுகிறது?
A)  ஜூதி மலையில் (11:44 )

Q27) குர்ஆனில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஒரே ஒரு ஸஹாபியின் பெயர் என்ன?
A) ஜைத் பின் ஹாரித் (ரலி)  அஹ்ஜாப் (33:37)

Q28) ஷைத்தான் எந்த இனத்தைச் சேர்ந்தவன் என குர்ஆன் குறிப்பிடுகிறது?
A) ஜின் இனம்

Q29) இஸ்ராயிலின் வழித்தோன்றல்களுக்கு கடமையாக்கப்பட்ட வணக்கங்கள் என குர்ஆன் குறிப்பிடுபவை எவைகளை?
A) தொழுகை மற்றும் ஜக்காத்

Q30) ‘பிஸ்மில்லாஹ்’ கூறி ஆரம்பம் செய்யப்படாத சூரா எது?
A) சூரத்துத் தவ்பா

Q31) ‘பிஸ்மில்லாஹ்’ இரண்டு முறை வரும் சூரா எது?
A)  சூரத்துந் நம்ல் -எறும்புகள் (27:30)

Q32) குர்ஆன் முழுவதுவதுமாக இறக்கியருளப்பட எத்தனை வருடங்கள் ஆனது?
A) 23 வருடங்கள்

Q33) தொழுகையில் அவசியம் ஓதப்பட வேண்டிய சூரா எது?
A) அல்-பாத்திஹா

Q34) துஆ (பிரார்த்தனைஎன குறிப்பிடப்படும் சூரா எது?
A) அல்-பாத்திஹா

Q35) திருமறையின் தோற்றுவாய் என குறிப்பிடப்படும் சூரா எது?
A) அல்-பாத்திஹா

Q36) குர்ஆனில் பெயர் குறிப்பிடப்பட்ட ஒரே ஒரு பெண்மணி யார்?
A) மர்யம் (அலை)

Q37) நபிமார்களின் பெயரால் எத்தனை சூராக்கள் இருக்கின்றன?
A) 6 சூராக்கள் (யூனுஸ்ஹூத்யூசுப்இப்ராஹீம்நூஹ்முஹம்மது (ஸல்))

Q38) ஆயத்துல் குர்ஸி குர்ஆனில் எந்த பாகத்தில்சூராவில் உள்ளது?
A)  மூன்றாவாது பாகத்தின் ஆரம்பத்தில்இரண்டாவது அத்தியாயத்தின் 255 ஆவது வசனம்.

Q39) அல்-குர்ஆனில் இறைவனின் திருநாமங்களாக எத்தனை பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது?
A) 99 பெயர்கள்

Q40) மதினா வேறெந்த பெயரில் குர்ஆனில் குறிப்பிடப்படுகிறது?
A) யத்ரிப் (33:13)

Q41) பனி இஸ்ராயில் என யாரை குர்ஆன் குறிப்பிடுகிறது?
A) யாகூப் (அலைஅவர்களின் சந்ததியினர்களை

Q42) ஈமான் கொணடவர்களுக்கு  உதாரணமாக அல்லாஹ் தன் திருமறையில் கூறும் இரு பெணமணிகள் யாவர்?
A) பிர்அவ்னின் மனைவி (66:11), இம்ரானின் புதல்வி மர்யம் (அலை) (66:12)

Q43) காபிர்களுக்கு உதாரணமாக இறைவன் தன் திருமறையில் கூறும்  இரு பெண்கள் யாவர்?
A) நூஹ் (அலைஅவாகளின் மனைவி (66:10), லூத் (அலைஅவர்களின் மனைவி (66:10)
அல்லாஹ் நூஹ்  நபியின் மனைவியை காபிர் என்று கூறியிருக்கநம்மவர்கள் திருமண துஆக்களில் நூஹ் நபியின் மனைவி போல் வாழ்க என்று வாழ்த்துகிறார்கள்நூஹ்  நபிக்கு பாரிஸா என்று நல்ல மனைவியும் இருந்ததாக இதற்கு ஒரு கடடுக் கதையையும் கூறுகிறார்கள்இது குர்ஆனிலோஹதீஸிலோ ஆதாரமில்லாத வெறும் யூதக் கடடுக்கதைகளாகும்.

Q44) உள்ளங்கள் எவ்வாறு அமைதி பெறுகிறது என அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்?
A) அல்லாஹ்வை நினைவு கூறுவதன் முலம் உள்ளங்கள் அமைதி பெறுகின்றன. (13:28)

Q45) நபி ஈஸா (அலைஅவாகள் செய்ததாக இறைவன் குறிப்பிடும் அற்புதங்கள் யாவை?
A) 1) குழந்தையில் பேசியது, 2) களிமண்ணினால் பறவையை செய்துஇறைவனின் அனுமதியைக் கொண்டு  உயிர் கொடுத்தல், 3) பிறவிக் குருடனுக்குப் பார்வையளித்தல், 4) வெண்குஷ்ட ரோகியைக் குணப்படுத்துதல், 5) இறந்தவரை அல்லாஹ்வின் உத்தரவு கொண்டு உயிர் பெறச் செய்தல் (5:110), 6) பிறா உண்பதை வீடடில் உள்ளவற்றை பார்க்காமலே அறிவித்தல் (3:49)

Q46) சுவனத்தில் இருக்காது என்று இறைவன் குறிப்பிடுவது எவை?
A) 1) பசி, 2) நிர்வானம், 3) தாகம், 4) வெயில் (20:118,119)

Q47) வீரமுள்ள செயல் என குர்ஆன் எதைக் கூறுகிறது?
A) எவரேனும் (பிறர் செய்யும் தீங்கைபொறுத்துக் கொண்டு மன்னித்து விடடால் அது மிக உறுதியான (வீரமுள்ளசெயலாகும். (42:43), (31:17), (3:186)

Q48) நபி முஸா (அலைஅவர்கள் கற்பாறையில் அடித்த போது எத்தனை நீர் ஊற்றுக்கள் பீறிட்டு எழுந்ததாக இறைவன் கூறுகிறான்?
A) பன்னிரணடு நீர் ஊற்றுகள் பீறிடடு எழுந்தது. (2:60) & (7:160)

Q49) தொழாதவர்களுக்காக இறைவன் சித்தப்படுத்தி வைத்திருப்பதாகக் கூறும் நரகத்தின் பெயர் என்ன?
A) ஸகர் என்ற நரகம்அல் முத்தஸ்ஸிர்(74:41,42,43)

Q50) இறைவன் என்னோடு இருக்கிறான் என்று கூறிய நபி யார்?
A) முஸா (அலைஅஷ் ஷுஃரா(26:62)

1 கருத்துகள்:

Unknown சொன்னது…

இஸ்லாமிய மார்க்கத்தை எத்தி வைக்கும் ஒரு நல்ல விஷயம் masa Allah

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts