புத்தளம், தில்லையடி பிரதேசத்திலுள்ள ஜூம்ஆ பள்ளிவாசயலில் நேற்று சனிக்கிழமை உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் மூன்று சிறுவர்கள் புத்தளம் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
15 வயதுக்கு உட்பட்ட இந்த மூன்று சிறுவர்களும் நேற்று இரவு தில்லையடி பள்ளிவாயசலில் புகுந்து அங்கிருந்த உண்டிலை உடைத்து பணம் திருடிய வேளை ஊர் மக்களினால் பிடிக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் அவர்களின் பெற்றோர்களுக்கு அதுபற்றி தெரிவிக்கப்பட்டது. எனினும் குறித்த மூன்று சிறுவர்களின் பெற்றோர்களும் தமது பிள்ளைகளை பொறுப்பேற்க மறுத்ததினால் அவர்கள் புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸாரிடம் ஒப்படைக்கப்ப்பட்ட மூன்று சிறுவர்களிடமும் 2,500 ரூபா பணம் கையில் இருந்ததாக குறித்த ஜூம்ஆப் பள்ளி நிருவாக சபை உறுப்பினர் ஒருவர் கூறினார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்: