
ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் கற்கை நெறியை பயின்றுவிட்டு சான்றிதழை வாங்கும் பொழுது அல்லாஹு அக்பர் என்று கூறுவதை நாம் பார்த்தோம். உண்மையில் இதனைக் கூறுவதற்கு சிறந்த ஒரு இடம் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் பதவிகளை எடுக்கின்ற போது அவ்விடத்தில் அல்லாஹு அக்பர் என்று ஒருவர்தானும் குரல் எழுப்பக் கூடியவர்களாக இருந்தால் அந்தப் பதவியைப் பெறுபவர்களுக்குத் தெரியும் தற்பொழுது அல்லாஹ் எனக்கு ஒரு பொறுப்பை ஒப்படைத்திருக்கின்றான் இப் பொறுப்பை நான் நேர்மையாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு உள்ளத்தில் உதிக்கும் என பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜே.சிறிரங்கா ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கற்கை நெறியில் பங்குகொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசுகையில் இக்கருத்தைத் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சிறிரங்கா இங்கு மேலும் பேசுகையில் கூறியதாவது,
இஸ்லாத்தில் மன்னர் என்பது இல்லை. பிரதிநிதிகள் என்றுதான் கூறுவார்கள். பிரதிநிதிகளிடம் மக்களின் பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாத்தில் பாராளுமன்றம் என்று இல்லை ஆலோசனைக் குழு என்றுதான் சொல்லுவார்கள். ஆனால் துரதிஸ்டவசமாக தேர்தல்களுக்குச் செல்கின்ற சில அமைச்சர்கள் இஸ்லாத்திலே பல விடயங்களை அழகாகக் கூறப்பட்டிருக்கிறது. அவ்விடயங்களை அப்படியே பின்பற்றுவார்களாயின் ஒரு மனிதன் வழி தவறுவதற்கு சந்தர்ப்பமே இல்லை. இவ்வாறு அவர் அவர் கூறினார்.
0 கருத்துகள்: