இந்த நாட்டில் புதிதாக தோற்றம்பெற்றுள்ள சில பௌத்த அமைப்புக்கள் இனங்களுக்கிடையில் பாரிய பிளவுகளை ஏற்படுத்துகின்றன. பொதுபலசேனாவின் தலைமை ஆமதுரு ஒருவர் அண்மையில் ஊடகங்களில் தெரிவித்த கருத்தை பார்க்கின்றபோது இந்த நாடு எங்கு நோக்கிச் செல்கின்றது? என கேள்வி எழுப்பிய முன்னாள் ஐனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க .
“முஸ்லிம் கடைகளில் சிங்கள மக்களை பொருட்கள் வாங்கவேண்டாம் .; என்றும் மேலும் முஸ்லிம்களது ஹோட்டலில் தேநீர் வாங்கிக் குடிக்கின்றீர்கள். அவர்கள் தேயிலைத் கிளாசுக்குள் மூன்று முறை துப்பிவிட்டுத்தான் உங்களுக்கு தேயிலையை தருகின்றார்கள் என பொதுபலசேன சிங்கள மக்களுக்கு ஊடகங்களிலும் வெப்தளங்களிலும் சொல்லி வருகின்றது.
இதை இந்த நாட்டில் பௌத்த தர்மத்தை பேசுகின்ற அந்த மஞ்ச சீலையை அணிந்தவர்கள் பேசுகின்றார்களே இதனை ஏனைய பௌத்த குருமார்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றிர்களா ? எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க அங்கு இருந்த தேரர்களைப் பார்த்து கேள்வியெழுப்பினார்.
இந்த அரசாங்கத்தின் ஆசீர்வாதாத்துடன் பொதுபலசோவை இயக்குகின்றனர். அதற்கான பாதுகாப்பு மற்றும் சகலதையும் அரசே வழங்கி வருகின்றது. அதே போன்று இந்த அரசின் பங்காலிக் கட்சியான விமல் வீரவன்ச ராவனா பலய என்ற இயக்கத்தை இயக்குகின்றார். பாட்டலி சம்பிக்க ரணவக்க சிகல உருமய கட்சியை பலப்படுத்துகின்றார் இவை அணைத்தும் அரசினாலே அவர்களது பௌத்த அரசியல் செல்வாக்கை செலுத்துவதற்கு இவ்வாறான இனவாத இயக்கங்களை இயக்கி வருகின்றனர். எனவும் அவர் தெரிவித்தார்.
அமரர் பண்டாரநயாக்காவின் நினைவு தினம் அவரது சிலை அமைந்துள்ள கொரகொல்லையில் நடைபெற்றது. இந் நிகழ்வின் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்தார்.
இந் நிகழ்வின்போது திகாரிய அங்கவீனர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க வினால் உதவிப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் பிரதமர் தி.மு. ஜயரட்ன, மேல்மாகாண ஆளுனர் அலவிமௌலானா முன்னாள் இரானுவத் தளபதி சரத்பொண்சேகாவும் கலந்து கொண்டார். பெருந்தொகையான் பௌத்த மதகுருக்களும் கலந்து கொண்டனர்.
- See more at: http://madawalanews.com/news/srilanka/8367#sthash.BBUoIvLZ.dpuf
0 கருத்துகள்: