
கீழ் நீதிமன்றம் ஒன்று இந்த வார்த்தையை கிறித்தவர்கள் பயன்படுத்தலாம் என்ற தீர்ப்பை இது தள்ளுபடி செய்கிறது.
இந்த வார்த்தை கிறித்தவ மதத்தில் இல்லை என்று கூறிய நீதிமன்றம், முஸ்லீம்கள் அல்லாதோர் இந்த வார்த்தையை பயன்படுத்த அனுமதிப்பது சமூகத்தில் குழப்பத்தை விளைவிக்கும் என்று கூறியது.
மலேசிய கிறித்தவர்கள் இந்த 'அல்லாஹ்' என்ற அரபு வார்த்தை இஸ்லாத்துக்கு முந்தையது என்றும் இதை தாங்கள் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர் என்றும் , இந்தத் தீர்ப்பை எதிர்த்துத் தாங்கள் மேல் முறையீடு செய்யப்போவதாகவும் கூறியிருக்கின்றனர்.
பழமைவாத முஸ்லீம் குழுக்கள் இந்த தீர்ப்பை வரவேற்றிருக்கின்றன.
மலேசிய அரசு, இந்த 'அல்லாஹ்' என்ற வார்த்தையை முஸ்லீம்களல்லாதோர் பயன்படுத்துவதை முன்னர் தடை செய்திருந்தது.
இந்தப் பிரச்சினை நாட்டில் மத ரீதியான பதற்றங்களை அதிகப்படுத்தியிருந்தது.
0 கருத்துகள்: