ஹலால் சான்றிதழுக்கு எதிராக மீண்டும் போராட்டங்கள் நடத்தப்படவுள்ளதாக பொதுபல சேனா அமைப்பு அறிவித்துள்ளது.
ஹலால் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட போதிலும் இதுவரையில் தீர்வு வழங்கப்படவில்லை. எனவே ஹலால் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் 22ம் திகதி மீண்டும் போராட்டம் நடத்த இருப்பதாக பொதுபல சேனா அமைப்பு அறிவித்துள்ளது.
கிருலப்பணையில் அமைந்துள்ள பொதுபல சேனா அமைப்பின் தலைமைக் காரியாலயத்தின் எதிரிலிருந்து கண்டி சிறிதலாதா மாளிகை வரையில் பாத யாத்திரையொன்று நடத்தப்பட உள்ளது. தலதா மாளிகையில் அதிஸ்டான பூஜையொன்று நடத்தப்பட உள்ளது. ஹலால் சான்றிதழ் குறித்த பிரச்சினைக்கு எவரது மனதும் வலிக்காத வகையில் தீர்வு காண முயற்சிக்கப்பட்டது என பொதுபல சேனா அமைப்பின் தேசிய அமைப்பாளர் விதான்தெனியே ந்நத தேரர் தெரிவித்துள்ளார்.
எனினும், இதனால் பௌத்த மக்களின் மனங்களே பாதிக்கப்பட்டுள்ளன. ஹலால் பண்டங்கள் தொடர்ந்தும் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார். எனவே இந்தப் பிரச்சினைக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்: