மக்கா:
இறந்து விட்டதாகக் கருதப்பட்ட சென்னை ஹஜ் பயணி உயிருடன் மீண்டதால் அவரது
குடும்பத்தினர் ஆனந்த அதிர்ச்சி அடைந்தனர். சென்னையைச் சேர்ந்த
பரக்கத்துல்லா (74), தனது மனைவி பத்ருன்னிஷாவுடன் ஹஜ் கடமையை நிறைவேற்ற
மக்கா சென்றார். ஹஜ்ஜின் முதல் நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மக்கள்
கூட்டத்தில் பரக்கத்துல்லா காணாமல் போய்விட்டார்.
இதனால்
தவித்துப் போன அவரது மனைவி பத்ருன்னிஷா இது குறித்து அங்குள்ள
அதிகாரிகளிடமும், பொலீசாரிடமும் முறையிட்டார். அவரை மக்கா பகுதி முழுக்க
சுமார் நான்கு நாட்களாக சுற்றிப் பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை.
மேலும் அவரது உடல் நிலையும் பாதிக்கப்பட்டு இருந்ததால் அவர் மௌத்தாகி
இருக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. இத்தகவல் சென்னையிலுள்ள அவரது
குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப்பட்டதால் அவர்கள் அனைவரும் கடும்
சோகத்தில் மூழ்கினர். மேலும் ஹஜ் பண்டிகை கொண்டாட்டங்களை தவிர்த்தனர்.
இந்த நிலையில், கடந்த செவ்வாயன்று அன்று மக்காவில் உள்ள மன்னர் அப்துல்லா
மருத்துவமனையின் திவிர சிகிச்சைப் பிரிவில் பரக்கத்துல்லாஹ் சிகிச்சைப்
பெற்று வருவதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து ஹஜ்ஜின் முக்கிய
தினமான அரஃபா தினத்தன்று தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த பரக்கத்துல்லாவை
மன்னர் அப்துல்லா மருத்துவமனை மருத்துவக் குழுவினர், அம்புலன்ஸ் மூலம்
அரஃபா மைதானத்திற்கு கொண்டு சென்று அவரது ஹஜ் கடமையை பூர்த்தி செய்தனர்.
0 கருத்துகள்: