பம்பலப்பிட்டியில்
வைத்து வர்த்தகர் ஒருவர் கொலைச்செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார்
மூவர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வு
பிரிவினராலேயே இவர்கள் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் சிவிலியன்கள் என்றும் ஒருவர் சப்-இன்ஸ்பெக்டர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.சிவிலியன்கள் இருவரும் பெண்கள் என்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தொம்பே பகுதியில் வைத்து கடந்த 22 ஆம் திகதி கடத்தப்பட்ட வர்த்தகர்
பம்பலப்பிட்டி பகுதியில் வைத்து கொலைச் செய்யப்பட்ட சம்பவத்துடன்
தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இந்த ஐவரும் கைது
செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் அறிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தொம்பே பகுதியில் வைத்து கடந்த 22 ஆம் திகதி கடத்தப்பட்ட வர்த்தகர் பம்பலப்பிட்டி பகுதியில் வைத்து கொலைச் செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இந்த ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் அறிவித்துள்ளனர்.
0 கருத்துகள்: