குழந்தைகள்,
பெண்கள் உள்பட 16 அப்பாவி ஆப்கானியர்களை அநியாயமாக கூட்டுப்படுகொலைச்
செய்த சம்பவத்தில் அமெரிக்க ராணுவ வீரர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளான்.
மரணத் தண்டனையில் இருந்து தப்பவே 39 வயதான அமெரிக்க ராணுவ வீரர் ராபர்ட்
பெயில்ஸ் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக அவனுடைய வழக்குரைஞர் கூறுகிறார். தான்
செய்த கொலை பாதகங்களை ஒவ்வொன்றாக விவரித்து வாஷிங்டனில் உள்ள ராணுவ
நீதிமன்றத்தில் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை அளித்துள்ளான் ராபர்ட்
பெயில்ஸ். கடந்த ஆண்டு மார்ச்
மாதம் உலக மக்களின் மனசாட்சியை அதிரவைக்கும் மனித குலத்திற்கு எதிரான
மாபாதக செயலை நிகழ்த்தினான். காந்தஹார் மாகாணத்தில் உள்ள ராணுவ மையத்தில்
இருந்து தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் வெளியே வந்தான் ராபர்ட் பெயில்ஸ்.
இரண்டு கிராமங்களைச் சார்ந்த அப்பாவிகளான 16 பேரை இந்த கொடூரன் படுகொலைச்
செய்தான். இதில் ஒன்பது குழந்தைகள் ஆவர். இந்த கொடூர சம்பவத்தில்
ஆறுபேருக்கு கடுமையான காயம் ஏற்பட்டது.
0 கருத்துகள்: