இலங்கையில் 23 ஆண்டுகளுக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு இலக்கான காத்தான்குடி பள்ளிவாசல் புனரமைக்கப்பட்டாலும், அப்போது ஏற்பட்ட அழிவுகளின் அடையாளங்கள் தொடர்ந்து இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1990 ஆம் ஆண்டு இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான போர் நிறுத்தம் முறிவடைந்த காலத்தில், ஒகஸ்ட் மாதம் 3 திகதி இரவு காத்தான்குடி மீரா ஜும்மா பள்ளிவாசல் மீது விடுதலைப் புலிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது.

அந்தச் சம்பவத்தின் போது இந்தப் பள்ளிவாசலில் மட்டுமல்லாமால் அதை அண்மித்த பகுதியிலுள்ள மற்றொரு மசூதியிலும் தொழுகையில் ஈடுபட்டிருக் கொண்டிருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட சரமாரியான துப்பாக்கிச் சூட்டில் 103 பேர் கொல்லப்பட்டனர்.

சிறார்கள் உட்பட பலர் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டும் காயமுமடைந்தனர்.

தாக்குதலுக்கு இலக்கான பள்ளிவாசலில், அந்தச் சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில் தொழுகை மண்டபத்தின் சுவர்களில் துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுத் தாக்குதலின் தடயங்களும் அடையாளங்களும் இன்றளவும் காணப்படுகின்றன.

இந்தப் பள்ளிவாசலை செப்பனிடும் பணிகள் தொடங்கினாலும், 23 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற அந்தத் தாக்குதலை நினைவு கூறும் வகையிலான அடையாளங்களும், தடயங்களும் அப்படியே அழியாமல் இருக்கும் வகையிலேயே பணிகள் இடம்பெறும் என்று அந்த பள்ளிவாசலின் நிர்வாக சபையின் செயலர் ஏ ஜே அனீஸ் அஹ்மட் தெரிவித்தார்.

இலங்கையில் 30 வருடங்களாக நடைபெற்ற யுத்தத்தில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அழிவுகளையும், இழப்புகளையும் நினைவுபடுத்தும் வரலாற்றுச் சின்னமாகவே தாக்குதல் தடயங்களை தாங்கள் பாதுகாக்க விரும்புவதாகவும் அவர் கூறுகிறார்.

போர் முடிவடைந்த நிலையில் போர்க்காலத் தடயங்களையும், அடையாளங்களையும் பேணிக் காப்பது இனங்களிடையே நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வுக்கு குந்தகமாக அமையலாம் என்பதை ஏற்றுக் கொள்ளும் அவர், அத்தடயங்களை பாதுகாப்பது எவ்வகையிலும், எந்தவொரு இனத்தின் மீதும் முஸ்லிம் மக்களின் விரோத மனப்பான்மையை வெளிப்படுத்துவதாக பார்க்கபடாது எனும் நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறார்.

இந்தத் தாக்குதல் இலங்கையில் தமிழ் முஸ்லிம் மக்களிடையேயான உறவுகளில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இன்றளவும் ஒரு நெருடலாகவே இருந்து வருகிறது.

(பீபீசி)
திர்வரும் ஞாயிற்றுக்கிழமை கல்முனையிலும் அம்பாறையிலும் பொதுபல சேனா ஒன்றுகூடலை நடாத்துவதற்கு ஏற்கனவே திட்டமிட்டிருந்தது. சிங்களவர்களே இல்லாத, முஸ்லிம்கள் செறிந்து வாழும் கல்முனையில் இந்த ஒன்றுகூடலுக்கு எதிராக பலத்த எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன.

இந்நிலையில், கல்முனையில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழ் மக்களுடனான பொதுபல சேனாவின் ஒன்றுகூடல் அம்பாறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறித்த தமிழ் மக்களை அம்பாறைக்கு வருமாறு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.

கல்முனையில் காலை 9 மணிக்கும், அம்பாறையில் பிற்பகல் 2 மணிக்கும் இந்த ஒன்றுகூடல் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், கல்முனையில் பொதுபல சேனா ஒன்றுகூடலை நடத்தினால் பாரிய கலவரங்கள் வெடிக்கும் என்ற அச்சத்தினால் குறித்த தமிழ் மக்களுடனான ஒன்றுகூடல் அம்பாறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கல்முனை சுபத்ராம விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரருடன் தொடர்புகொண்டு இதுகுறித்து கேட்டபோது, கல்முனையில் பொதுபல சேனா கூட்டம் நடத்துவது பற்றி தனக்கு அறிவிக்கப்படவில்லையென்றும் அம்பாறையில்தான் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால், கல்முனையில் தமிழ் மக்களுடன் பொதுபல சேனா ஒன்றுகூடல் ஒன்றை நடாத்துவதற்கு திட்டமிட்டிருந்ததாகவும், அங்குள்ள தமிழ் மக்கள் அம்பாறையில் ஒன்றுகூடலை நடத்துமாறு கோரிக்கை விடுத்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அம்பாறையில் நடைபெறவுள்ள கூட்டத்திற்கே, குறித்த தமிழ் மக்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள். அம்பாறையில் நடைபெறும் பொதுபல சேனாவின் கூட்டம் ஒரு மாநாடு அல்ல என்றும், அது அம்பாறை மக்களுக்கு பொதுபல சேனாவின் செயற்பாடுகள் குறித்து விளக்கமளிக்கும் கொள்கை விளக்க கூட்டமென்றும் பொதுபல சேனா சார்பாக பேசக்கூடிய டிலந்த விதானகே தெரிவித்தார்.

இதுகுறித்து அம்பாறை மாவட்ட முப்படைகளின் கட்டளைத் தளபதி சார்பாக பேசக்கூடிய சார்ஜன்ட் அரபாத்துடன் தொடர்புகொண்டு கேட்டபோது, கல்முனையில் பொதுபல சேனா கூட்டம் நடத்துவது பற்றி அறியத்தரவில்லை என்று தெரிவித்தார். அத்துடன் கல்முனையில் எந்த இடத்தில், எத்தனை மணிக்கு கூட்டம் நடைபெறுமென தெரியவந்தால், அதுகுறித்து நடவடிக்கை எடுக்க முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கல்முனையில் பொதுபல சேனா கூட்டம் நடத்துவது தொடர்பில் அங்குள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் பலத்த எதிர்ப்பை வெளியிட்டுள்ள நிலையிலேயே குறித்த ஒன்றுகூடல் அம்பாறைக்கு மாற்றப்பட்டுள்ளது. சிங்களவர்களே இல்லாத கல்முனையில் தமிழர்களுடன் பொதுபல சேனா ஏன் ஒன்றுகூடலை நடத்தவேண்டுமென்ற புதிய கேள்வியும் தற்போது அங்குள்ள மத்தியில் எழுந்துள்ளது.

மறுமுனையில், கிழக்கில் முஸ்லிம்களுக்கு எதிராக “திராவிடன் சேனை” எனும் அமைப்பினால் துண்டுப்பிரசுரங்களும் வெளியிடப்பட்டிருந்தன. இந்நிலையிலேயே பொதுபல சேனா தமிழ் மக்களுடன் ஒன்றுகூடலை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.NM
- See more at: http://www.importmirror.com/2013/06/blog-post_3580.html#sthash.S1W8XFaD.dpuf

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய

Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts