அமெரிக்காவுக்கு எதிராக சவுதி அரேபியாவின் இளவரசர் வெளியிட்டுள்ள
கருத்துக்களினால் மத்திய கிழக்கு அரசியலில் மாற்றம் வரும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
சவுதி
அரேபியாவின் இளவரசராக இருப்பவர் பந்தர் பின் சுல்தான். இவர்
புலனாய்வுத்துறையின் தலைவராகவும் இருந்து வருகிறார். ஐரோப்பியப்
பிரதிநிதிகளைச் சந்தித்த பந்தர் பின் சுல்தான், ”அமெரிக்காவுடனான தொடர்பில்
மிகப் பெரிய மாற்றம் ஒன்று ஏற்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார். சிரியாவில்
நடைபெற்று வரும் போரில் அமெரிக்கா எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல்
இருப்பது மற்றும் ஈரானுடன் அமெரிக்கா தற்போது நெருக்கம் காட்டி வருவதும்
இந்த மாற்றத்திற்கான காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தவிர
2011 ஆம் ஆண்டு பஹ்ரைன் ஆட்சிக்கெதிராக போராடியவர்களை சவுதி அரேபியா
கட்டுப்படுத்திய போது, அதற்கு உறுதுணையாக அமெரிக்கா நிற்காததும் ஒரு காரணம்
எனத் தெரிய வருகிறது. இளவரசரின் இந்த உரை, சவுதி அரேபிய மன்னரின்
ஒப்புதலுடன் பேசப்பட்ட ஒன்றா எனத் தெரியவில்லை.
மாறி வரும்
அரசியல் சூழலில், அமெரிக்காவை மட்டும் சார்ந்து நிற்பது சவுதி
அரேபியாவிற்கு உகந்ததாக இருக்காது என்பதால் அமெரிக்காவுடனான உறவில் சற்று
விரிசல் போக்கினை அந்த அரசுக் கைக்கொள்ளலாம் என அரசியல் வல்லுனர்கள்
தெரிவித்துள்ளனர்.
சிரியாவுடன் போர் ஏற்பட்டால், சவுதியின்
எண்ணெய் வளங்களை தங்களால் பாதுகாக்க இயலாது என்று அண்மையில் அமெரிக்கா
தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்: