ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்சவின் நடவடிக்கையின் பேரில் 54 முஸ்லீம் நாடுகள் உட்பட
சர்வதேச நாடுகளுக்கு முஸ்லீம் - பௌத்த நல்லுறவு மற்றும் இலங்கையில்
இனங்களுக்கிடையே ஜக்கியம் சம்பந்தமான வெப்தளமொன்று ஆரம்பிக்கப்பட உள்ளது.
மேற்படி விடயமாக கடந்த மாதம் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் தீர்மாணத்தின் படி முஸ்லீம் பௌத்த ஜக்கிய நல்லுரவு அமைப்பின் தலைவரும் சப்றகமுவ பல்கலைக்கழகத்தின் வேந்தருமான பேராசிரியர் கும்புருகமுவே வஜிர தேரர் தலைமையில் உயர்மட்டக் கூட்டம்மொன்று கொழும்பில் நேற்று(17) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஜனாதிபதியின் மத்திய கிழக்குநாடுகள் சம்பந்தமான ஆலோசகர் அப்துல் காதர் மசூர் மௌலானா அவர்களை ஜனாதிபதி இப்வெப்தளத்தினை அரபு மற்றும் ஆங்கில மொழிகளில் இலங்கை, மற்றும் பௌத்த - முஸ்லீம்கள் இன நல்லுறவு பற்றிய சரியான தகவல்களை மத்திய நாடுகளுக்கு வழங்குவதற்கு உதவுமாறு பணித்ததின் பேரில் இக் கூட்டம் மௌலானாவின் இல்லத்தில் நடைபெற்றது.
இக் கலந்துறையாடலில் ஐனாதிபதியின் பௌத்த மதவிவகார ஆலோசகரும் மேல்மாகாண சபையின் உறுப்பினருமான சாலிந்த விஜயசுந்தர மற்றும் இவ் விடயத்திற்காக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இக் கூட்டம் பற்றி கருத்து தெரிவித்த பேராசிரியர் கும்புருகமுவே வஜிர தேரர் -
இலங்கையில் பண்நெடுங்காலமாக பௌத்த- முஸ்லீம்களுக்கிடையே நல்லுறவு நிகழ்ந்து வருகின்றது. கடந்த 30 வருட கால யுத்தத்தின் பிறகு எமது நாட்டில் சில அதி தீவிர போக்குடைய பௌத்த குழுக்கள் முஸ்லீம்களிடையே இன நல்லுறவை சீர்குலைத்து வருகின்றனர். இவ்வாறன சீர்குலைவுகளை முற்றுப் புள்ளிவைக்குமுகமாக கிராம மட்டத்தில் இருந்து பௌத்த முஸ்லீம் நல்லுறவை மேலும் கட்டியெழுப்புவதே எனது பணியாகும். ஆதற்காகவே நான் பாடுபட்டு வருகின்றேன்.
இவ்விடயம் சம்பந்தமாக கடந்த மாதம் ஜனாதிபதியின் தலைமையில் கூட்டமொன்று நடைபெற்றது. அதன் இரண்டாம் கட்டமாகவே எமது குழு காலாநிதி மசுர்மௌலாவைச் அவரது இல்லத்தில் சந்தித்தோம். அரபு நாடுகளுக்கு சரியான தகவல்களை வழங்குவதற்கும் அதற்காக அரபு ஆங்கில மொழிகளில் வெப் தளமொன்றை ஏற்படுத்துதல். இலங்கை உள்ள முஸ்லீம் நாடுகளின் தூதுவர்களை அழைத்து முஸ்லீம் -பௌத்த நல்லுறவு பற்றியதும் இலங்கை பற்றிய சந்திப்புக்களை எதிர்காலத்தில் ஏற்படுத்துதல்.
இந்த நாட்டில் முஸ்லீம்கள் பரம்பரை பரம்பரையாக ஜக்கியமாகவும் சகோதரத்துவமாகவும் வாழ்ந்து வருகின்றனர். அவர்களும் இந்த நாட்டுப் பிரஜை பௌத்தர்களுக்கு உள்ள சகல உரிமைகளும் முஸ்லீம்களுக்கும் உண்டு. அவர்களது மதம், வியாபாரம், கலாச்சாரம் உணவு, உடை போன்ற சகலதையும் அனுபவிக்க அவர்களுக்கு உரிமை உண்டு. அண்மைக்காலமாக எம் மத்தியில் உள்ள சில பௌத்த அமைப்புக்கள் சேர்ந்து அவர்களது உரிமைகளுக்கு தவறான இனரீதியான பிரச்சாரங்களையும் கூட்டங்களையும் நடாத்தி விமர்சித்து வருகின்றனர். இது தவிர்க்கப்படல் வேண்டும். இதற்காக மகா சங்கத்தினர் அக் குழுக்களை நிறுத்த வேண்டும்.
இச் சிறு சிறு சம்பவங்கள் சரவதேச மட்டத்திற்கு செல்கின்றது. குறிப்பாக அரபு நாடுகளில் இலங்கை பற்றியும் இங்கு வாழும் முஸ்லீம்களுக்கு மத விவகாரங்களில் பௌத்தர்கள் இம்சைப்படுத்துவதாக பிழையான தகவல்கள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன.
உதாரணமாக கடந்த ஜூன் மாதம் சவுதியிலிருந்து வெளிவந்த உலக முஸ்லீம் லீக் பத்திரிகையில் 11 பக்கத்தில் 'றுழநள ழக ஆரளடiஅள in னiஎனைநன ளுசi டுயமெய' என்ற தலைப்பில் தவறான செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இப் பத்திரிகையை நான் ஜனாதிபதியிடம் காண்பித்தேன். அதற்காக மறுப்பு அறிக்கையும் அப் பத்திரிகைக்கு அனுப்பப்பட்டது.
இதுபோன்ற பிரச்சினைகளை கையாழ்வதற்கே நாங்கள் இங்கு ஒன்று கூடினோம். ஐனாதிபதியின் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பொறுப்பான ஆலோசகர் அப்துல் காதர் மசுர் மௌலானாவை இங்கு சந்தித்து மேற்படி விடயங்கள் பற்றி கலந்துரையாடினோம். அவர் அரபு மொழியில் எழுதவும் வாசிக்கவும் டைப்பண்ணக் கூடியவர். ஆவரிடம் மத்திய கிழக்கு நாடுகளில் நல்ல உறவுகளை வளர்த்து வருகின்றார். அவர் ஊடகாவே இவ் வெப்தளமொன்றை ஆரம்பிக்க உள்ளோம். உலகில் உள்ள 54 முஸ்லீம் நாடுகளுடன் எமது ஜானதிபதிக்கும இலங்கைக்கும் பண்நெடுங்காலமாக நல்லுறவுகள் இருந்து வருகின்றது. அந்த நாட்டில் எமது நாட்டவர்கள் சென்று தொழில் செய்கின்றனர். அந்த நாடுகள் எமது நாட்டுக்கு பல்வேறு வழிகளில் உதவி வருகி;ன்றனர். என தேரர் தெரிவித்தார்.
அப்துல் காதர் மசூர் மௌலானா – கிராம மட்டத்தில் முஸ்லிம் பௌத்த மக்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட முன்னர் ஜனாதிபதியின் பிரநிதியாக அப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஒருவரை நியமிக்கும் படி ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். இந்த நாட்டில் முஸ்லீம்களுக்கொன்று சரியானதொரு தலைமைத்துவம் இல்லாமையால் முஸ்லீம்களது பிரச்சினைகளை அடிமட்டத்தில் இருந்து தீர்ப்பதற்கும் அறபு நாடுகளில் நன்கு அறபு பரிச்சியமான ஒருவரை நியமிக்கும்படியும் வேண்டுகோள் விடுத்திருந்தேன். இவ் விடயம் சம்பந்தமாக ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நானும் கலந்து கொண்டதாகவும் அதன் இரண்டாம் கட்ட நடவடிக்கையின் பேரில் இக் கூட்டம் நடைபெறுவதாகவும் மௌலானா தெரிவித்தார்.

0 கருத்துகள்: