தம்புள்ளை பள்ளிவாசலோடு இணைந்ததாக உள்ள இமாமின் அறைக்கு வெளியே ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் பன்றி இறைச்சிப் பொதி
வீசப்பட்டுள்ளதுடன், பட்டாசுகளும் கொளுத்தி எறியப்பட்டுள்ளது.
பள்ளிவாசலுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள்
கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பன்றி இறைச்சிப் பொதியை தம்புள்ளை பொலிஸார் விசாரணைகளுக்காக
எடுத்துச் சென்றுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மாத்தளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் மஹியங்கனை நகர் மஸ்ஜித்தை மூடுவதற்கு முன்னர் மஹியங்கனை மஸ்ஜித்
மீதும் இதே போன்ற கீழ்த்தரமான தாக்குதல் நடாத்தப் பட்டமை
குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்: