தம்புள்ள
பள்ளிவாசலுக்கு அமெரிக்க அதிகாரிகள் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
பள்ளிவாசலுக்கு சென்றுள்ள அவர்கள் பள்ளிவாசல் பிரமுகர்களுடன்
கலந்துரையாடல்களில் பங்கேற்றுள்ளனர். இதன்போது பள்ளிவாசல் நிர்வாக
சபையினரால் பல விடயங்களும் அமெரிக்க அதிகாரிகளிடம்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பள்ளிவாசல் தொடர்பிலான தற்போதைய
நிலவரத்தை தெளிவாக அறிந்துகொள்ளும் நோக்குடனே தாம் வந்ததாக குறிப்பிட்டுள்ள
கொழும்பிலுள்ள அமெரிக்க அதிகாரிகள், இதுதொடர்பில் அமெரிக்கத் தூதுவருக்கு
விளக்கம் வழங்கப்படுமெனவும் அவரே தம்மை பள்ளிவாசல் நிலவரத்தை
பார்வையிடுமாறு அனுப்பிவைத்ததாகவும் தம்புள்ள பள்ளிவாசல் நிர்வாகிகளிடம்
குறிப்பிட்டுள்ளனர்.
0 கருத்துகள்: