எகிப்தில் இராணுவத்தால் கைது செய்யப்பட்ட அதிபர் முர்ஸி முதன்முறையாக தனது குடும்ப உறுப்பினர்களுடன் தொலைபேசியில் பேசினார். இதனை முர்ஸியின் வழக்கறிஞர் முஸ்தபா அட்டாயாஹ் தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து முஸ்தபா அட்டாயாஹ் மேலும் கூறியதாவது; முஹம்மது முர்ஸி தொலைபேசியில் அவருடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் கடந்த வாரம் பேசினார். அடுத்த இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அவர்களுடன் பேசினார் என்றும் தெரிவித்துள்ளார்.
62 வயதான முர்ஸி நல்ல உடல் நலத்துடன் இருக்கின்றார் என்றும் வழக்கறிஞர் முஸ்தபா அட்டாயாஹ் கூறினார்.
கடந்த ஜூலை 3 ல் முர்ஸியின் ஆட்சியை ராணுவ புரட்சியின் மூலம் அகற்றி இடைக்கால அரசை நியமித்த ராணுவம், முர்ஸியை கைது செய்து மறைவான இடத்தில் வைத்திருந்தது. மேலும் முர்ஸியுடன் எவரும் தொடர்புகொள்ள முடியாத வகையில் ராணுவம் தடுத்து வைத்திருந்தது.
முன்னதாக கைது செய்யப்பட்ட முர்ஸியை ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கை செயலர் மற்றும் ஆப்பிரிக்க யூனியன் பிரதிநிதிகள் சந்தித்திருந்தனர். இருப்பினும் முர்ஸியின் இருப்பிடம் குறித்து ராணுவம் எந்த தகவலையும் அளிக்கவில்லை. இதற்கெதிராக மக்கள் மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், அவரை விடுதலை செய்யாமல் தொடர்ந்து மறைவிடத்திலேயே ரகசியமாக வைத்துள்ளது.
முர்ஸி மீது எதிர்ப்பாளர்களை கொலை செய்ய முயன்றதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

0 கருத்துகள்: