ஏலக்காய்க்குள்
மிகவும் சூட்சுமமான முறையில் ஹெரோயின் போதைப்பொருளை மறைத்துவைத்து,
கொழும்பு மெகசின் சிறைச்சாலைக்குள் எடுத்துச்சென்ற நபர்
கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் ஹெரோயின் போதைப்பொருள் அடங்கிய ஏலக்காயை சீனிச் சம்பலுக்குள் கலந்திருந்ததாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்ரரத்ன பல்லேகம குறிப்பிட்டார்.
குறித்த நபர் மீது எழுந்த சந்தேகத்தினைத் தொடர்ந்து, சிறைச்சாலை பொலிஸ் உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட சோதனையின்போது, இவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, கொழும்பு புதிய சிறைச்சாலைக்குள் கோழி இறைச்சியின் எலும்புகளில் ஹெரோயின் போதைப்பொருளை மறைத்துச்சென்ற நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பால் பக்கற்றுக்குள், பாலை அகற்றி அதனுள் மதுபானத்தை எடுத்துச்சென்ற ஒருவர் கடந்த வாரம் கைதுசெய்யப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்ரரத்ன பல்லேகம மேலும் கூறினார்.

0 கருத்துகள்: