உலக
அழகி போட்டிகளை இல்லாமல் செய்ய வேண்டும் என்று கொடி பிடித்தவர்கள் இப்போது
இஸ்லாமிய அழகி போட்டி (முஸ்லிமா வேர்ல்ட்) என்ற ஒரு அழகி போட்டியை நடாத்தி
உள்ளனர் .
இது இந்துநேசியாவில் நடத்தப்பட்டுள்ளது . இதில்
பெண்கள் பல உடை அலங்காரத்துடன் கலந்து கொண்டனர் .இஸ்லாமிய அழகு ராணி போட்டி
என்று பெயர் சூட்டியதால் சில இஸ்லாமிய கேள்விகளும் அதில் கேட்கப்பட்டதாம்
.இதில் நைஜீரியாவை சேர்ந்த பெண்ணே வெற்றி பெற்றுள்ளார் . இந்த போட்டியை
பார்வையிட பெண்கள் மட்டும் தான் வரவேண்டும் ஆண்கள் யாரும் வரக்கூடாது
என்று நிபந்தனையும் இட்டுள்ளார்கள் .
நிபந்தனை இட்ட அவர்களே அதை வீடியோ எடுத்து ,போட்டோ எடுத்து வெளியிட்டும்
உள்ளனர் . அப்ப எதற்கு இந்த ஆண்கள் நுழைய தடை என்ற நிபந்தனை ? இரண்டும்
ஓன்று தானே ?
உலக அரங்கில் நிறைய இஸ்லாமிய விரோத செயற்பாடு
இவ்வாறு தான் தோன்றியது . ஒரு தவறை தடுக்க வேண்டும் என்று நினைத்து வேறு
ஒரு தவறை உருவாக்கி விடுவது .
0 கருத்துகள்: