
இவர்கள் ஆர்ப்பாட்ட நேரங்களில் வன்முறை செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்
. கைது செய்து அடைத்து வைக்கப்பட்ட இவர்கள் இன்று விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர் . இவர்கள் அனைவரும் வெள்ளை உடை அணிந்து நீதிமன்றம் முன் தோன்றியது கண்ணைக்கவரும் காட்சியாக இருந்தது .
அது மட்டுமல்லாமல் இந்த மாணவிகள் எந்த சலனமோ ,பயமோ, தயக்கமோ இன்றி விசாரணையின் போது சிரித்த வண்ணம் காணப்பட்டனர் . ஆனால் இவர்கள் ஒட்டுமொத்தமாக சிறைக்கூண்டில் இருந்தத காட்சி அனைவரின் உள்ளத்தில் ஒரு வித கலக்கத்தையும் ஏற்படுத்தி இருந்தது .
அது மட்டுமல்லாமல் பலரும் இந்த இராணுவத்தின் செயலுக்கு பல விதத்திலும் பலவித கண்டனங்களையும் தெரிவித்து இருந்தனர் . இன்னும் இவ்வாறு பல்கலைகழக மாணவிகளை நடத்தியதை இட்டு பலரும் மனம் வருந்தினர் .ஏனென்றல் இது அவர்களின் வருங்காலத்தை பாதிக்கும் என்பதால் .
இன்னும் அனைவரின் மனதையும் உருக்கிய விடயம் என்னவென்றால் இந்த 14 மாணவிகளுக்கும் மொத்தம் 11 வருடங்கள் சிறை தண்டனை என தீர்ப்பளித்தது தான் அனைவரையும் ஒரு கணம் ஆட வைத்தது
இது மூன்றாவது முறையான நீதிமன்ற அமர்வாகும் . முதல் முறை அமர்வு எகிப்தின் பதவி நீக்கப்பட்ட ஜனாதிபதி முஹம்மது முர்சிக்கும், இரண்டாவது அமர்வு ஹாசிம் சலாஹ் அபு இஸ்மாயீல் அவர்களுக்கும் , மூன்றாவது அமர்வு இந்த மாணவிகளுக்காகவும் அமைந்து இருந்தது .
ஜாஸாக் அல்லாஹ் : ஒன்லைன் பாயிஸ்







0 கருத்துகள்: