தொடர்ந்து உள்நாட்டு போர் நடைபெறுவதால் பசி கொடுமையால் சிரியா மக்கள்
சிங்கம் இறைச்சி சாப்பிடும் அவலம் ஏற்பட்டுள்ளதாக இங்கிலாந்து டெய்லி
மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.dailymail.co.uk/news/article-2515514/Starving-Syrians-butcher-zoos-LION-eat-worst-sign-desperate-civilians-food.html
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் போராடி வருகின்றனர். இதனால் ராணுவத்துக்கும், மக்கள் புரட்சி படைக்கும் இடையே தொடர்ந்து உள்நாட்டு போர் நடைபெறுகிறது.
அதில், இதுவரை சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். 25 லட்சம் பேர் அண்டை நாடுகளில் அகதிகளாக உள்ளனர். சிரியாவின் சில பகுதிகள் புரட்சிபடையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
எனவே, அவற்றை மீண்டும் தங்கள் வசப்படுத்த ராணுவம் தொடர்ந்து குண்டு வீசி தாக்கி வருகிறது. இதனால் அப்பகுதிகளில் உணவு பொருட்கள் கிடைக்காமல் மக்கள் கடும் பட்டினியால் அவதிப்படுகின்றனர்.
விவசாய பகுதியான சவுதா என்ற இடத்தில் பட்டினியால் வாடும் மக்கள் தங்கள் உயிரை காப்பாற்ற பூனை, நாய் மற்றும் கழுதை இறைச்சியை சாப்பிடலாம் என முஸ்லிம் மத குருமார்கள் அறிவித்ததாகவும், அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த அவலத்தில் இருந்து மக்களை காக்க உலக நாடுகள் உணவு பொருட்களை தந்து உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
இந்த நிலையில் தற்போது பசியால் வாடும் மக்கள் உணவு கிடைக்காமல் மிருக காட்சி சாலைகளில் புகுந்து மிருகங்களை கொன்று அவற்றின் இறைச்சியை சாப்பிட்டு வருகின்றனர்.எனவும் கிழக்கு சவுதாவில் அல்குயாரியா அல் ஷாமா மிருக காட்சி சாலை உள்ளது.
இங்கு இருந்த சிங்கத்தை கொன்று அதன் தலை மற்றும் உடலில் உள்ள இறைச்சியை 3 பேர் சாப்பிடுவது போன்ற போட்டோ சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோன்று பல மிருகங்களின் இறைச்சியை பசியால் வாடும் மக்கள் சாப்பிட்டு வருகின்றனர். எனவும் டெய்லி மெயில் மேலும் குறிப்பிட்டு உள்ளது.

1 கருத்துகள்:
Testing Msg