(புல்மோட்டை) பண்டைய காலம் தொட்டு பல கண்டு பிடிப்புக்கள்
நிகழ்த்தப்பட்டு வந்தாலும் அதில் சில விடயங்கள் தான் நிலைத்து
நிற்கின்றன.இவ்வாறான சில அறிய கண்டுபிடிப்புக்கள்தான் இன்று உலகத்தை
கையளவில் கொண்டு வந்து சேர்த்திருக்கின்றன என்பதை யாராலும் மறுக்க
முடியாது. நவீன யுகத்துக்கேர்ப்ப இன்று உலகளாவிய ரீதியில்
நிகழ்த்தப்படுகின்ற கண்டுபிடிப்புக்களில் அநேகமானவை இலத்திரனியல்
இயக்கப்பாட்டுடன் தொடர்புபட்டதாகவே உள்ளன. இப்படிப்பட்ட கண்டு
பிடிப்பாளர்கள் நகர புறங்களில் மாத்திரமள்ள எமது சிரிய கிராமங்களிலும்
இருக்கின்றார்கள் என்பதற்கு மற்றுமொரு சான்றாக புல்மோட்டை முஸ்லிம் மத்திய
கல்லூரியின் தரம்-07 ச் சேர்ந்த மாணவன் சலாஹுதீன் சபீக் (புல்மோட்டை-02)
புதிய பல கண்டுபிடிப்புக்களை நிகழ்த்தி அனைவரையும் வியப்பில்
ஆழ்த்தியுள்ளார்.
இவரது கண்டுபிடிப்புக்களுள் ரிமோட் கொன்ரோல் மூலம் இயங்கும்
விளையாட்டுக் கார், LED டோர்ச் லைட் என்பன பலராலும் பெருமையாகப்
பேசப்படுகின்ற கண்டுபிடிப்புகளாகும். இதுபோன்ற கண்டுபிடிப்புகள் சர்வதேச
ரீதியில் ஏற்கனவே பாவனையில் உள்ளது என்றாலும் இலங்கை போன்ற நாடுகளுக்கு
அதுவும் புல்மோட்டை போன்ற பிரதேசங்களுக்கு இவை புதியவையாகும். அத்துடன் இது
சிரிய முயற்சியாக இருந்தாலும் இவரது வயதை பொறுத்தவரை இது பெரும் முயற்சி
என்றே சொல்ல வேண்டும். இவரது கண்டுபிடிப்புகளின் முக்கிய அம்சம்
என்னவென்றால் இவற்றை உருவாக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் எல்லாமே
ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு தூக்கிவீசப்பட்ட பழைய பொருட்களாகும்.
உதாரணமாக,
உடைந்த கணித உபகரணப் பெட்டியின் அடிப்பாகம், காட்போட் மட்டை, உடைந்த
விளையாட்டுக்காரிலிருந்து பெறப்பட்ட சில்லுகள், குப்பையில் வீசப்பட்ட
செல்போன் பற்றிகள், வயர்துண்டுகள், ஆணி, செப்புக் கம்பி என்பவற்றைக் கொண்டு
தயாரிக்கப்பட்ட ரிமோட் கொன்ரோல் மூலம் இயங்கும் விளையாட்டுக் கார்.
மற்றையது சிறுபிள்ளைகள் வாங்கி சாப்பிட்டுவிட்டு தூக்கிவீசும் POP IT
முட்டாசிப் போத்தலைக் கொண்டு தயாரித்த LED டோர்ச் லைட் என்பவற்றைச்
சொல்லலாம்.
நவீன தொழிநுட்ப உலகில் கழிவுப் பொருட்களை முகாமைத்துவம் செய்தல் என்பது
பெரிய சவாலாக உள்ள நிலையில் இவ்வாறு கழிவுப்பொருட்களை மீள்பயன்பாட்டிற்கு
உட்படுத்தும் இவ்வாறான கண்டுபிடிப்புக்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின்
கவனத்தை ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது.
அன்பு உறவுகளே...! இவ்வாறு இலைமறை காயாக எத்தனையோ சாதனையாளர்கள் எமது
கண்களுக்கு தென்படாமல் மறைந்து கிடக்கின்றார்கள் ...ஆர்வம் இருந்தும்
திறமையை வைத்தும் தங்களது முழுமையான வெளிப்பாட்டை வெளிக்கொண்டுவர
துடித்துக்கொண்டிருக்கும் எமது இளம் சமூகத்தின் உணர்வுக்கும்
ஊக்கத்துக்கும் மதிப்பளித்து பிள்ளைகளின் திறமைகளை இனங்கண்டு அவர்களின்
திறமைக்கு ஏற்றால் போல் அவர்களை வழிநடத்துவது நம் அனைவரினதும்
கடமையாகும்...எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்பானாக....ஆமீன்.....!
0 கருத்துகள்: