
தாய்லாந்தில் ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்ததால், அந்நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக பிரதமர் சினவத்ரா அறிவித்துள்ளார். தாய்லாந்தில் பெண் பிரதமர் சினவத்ரா தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது.
கடந்த 2006ம் ஆண்டு பிரதமராக இருந்த அவரது சகோதரர் தக்ஷின் சினவத்ராவை வலுக்கட்டாயமாக பதவியில் இருந்து தூக்கி வீசிவிட்டு ஆட்சியை பிடித்தார் சினவத்ரா. அவரும், அவரது குடும்பத்தினரும் ஆட்சியை தங்கள் குடும்ப வசம் வைத்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
சினவத்ராவுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அரசியல் குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கும் சட்ட மசோதாவை, சமீபத்தில் சினவத்ரா கொண்டு வந்தார். ஊழல் வழக்கில் தண்டனை பெற்று நாட்டை விட்டு வெளியேறிய தனது சகோதரரை காப்பாற்றவே, இந்த பொது மன்னிப்பு வழங்கும் சட்டத்தை கொண்டு வருவதாக கூறி, எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், பிரதமர் பதவி விலகக் கோரியும் ஆயிரக்கணக்கானோர், தலைநகர் பாங்காக் நகரில் பேரணியாக நேற்று முன்தினம் திரண்டனர்.
அவர்கள் விவசாயம், போக்குவரத்து, விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சக அலுவலங்களில் நுழைந்து, வாயில் கதவுகளை உடைத்து நொறுக்கினர். ஊழியர்களை தாக்கினர்.
அதோடு, நிதியமைச்சகம் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகம் முன்பாக திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு, அலுவலகங்களில் பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர்களை வெளியேற்றினர். மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புகளை துண்டித்தனர். பிரதமர் சினவத்ரா அமைச்சரவையில் இருந்து வெளியேறிய 2 அமைச்சர்களும், மக்களுக்கு ஆதராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து, நாடு முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், Ôசட்டம் ஒழுங்கை மதித்து பொதுமக்கள் நடக்க வேண்டும் என்று சினவத்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார். எனினும், நிலைமை மோசமானதை தொடர்ந்து நாடு முழுவதும் அவசர நிலையையும், உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தையும் பிரதமர் சினவத்ரா பிரகடனப்படுத்தி உத்தரவிட்டுள்ளார்.
இதனால், அந்நாட்டில் அரசு நிர்வாகம் முடங்கியதோடு மட்டுமல்லாமல், அத்தியாவசிய பணிகளும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தாய்லாந்து அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
0 கருத்துகள்: