தகவல் : Puvi Rahmathullah Kattankudy
கல்வி கற்க வந்த மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பாக்கீர் மாஸ்டர் குற்றத்தை ஒப்புக் கொண்டு ஒரு இலட்சம் ரூபா நஷ்டஈடு வழங்க முன்வந்தார்.
காத்தான்குடி நகர சபையின் ஆளுந்தரப்பு உறுப்பினரும், தனியார் வர்த்தக வகுப்பு நடாத்திவரும் ஆசிரியருமான எச்.எம்.எம். பாக்கீர், அவரிடம் கல்வி கற்கச் சென்ற மாணவியொருவரைக் காரில் அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியாக காத்தான்குடி பொலிசாரினால் தாக்கல் செய்யப்பட்டு நடைபெற்று வந்த வழக்கு, நேற்று (26.11.2013) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி அல்ஹாபிழ் என்.எம். அப்துழ்ழாஹ் அவர்களின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
சந்தேக நபராக இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பாக்கீர் மாஸ்டரின் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கண்ணன் அவர்கள் ஆஜரானார். பாதிக்கப்பட்ட மாணவியின் சார்பில் இளம் சட்டத்தரணி எஸ்.எச்.எம். ரிஸ்வி ஆஜரானார்.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு பொலிஸ் தரப்பு சாட்சியம் அளிக்கப்படவிருந்த சமயத்தில் சந்தேகநபரின் சட்டத்தரணி, சாட்சியமளிக்கும் நடவடிக்கைகளை நிறுத்தி சந்தேக நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டு பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஒரு இலட்சம் ரூபா நஷ்டஈடு வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
இதனை ஏற்றுக் கொள்ளாத மாணவியின் சட்டத்தரணி, நஷ்ட ஈடுhக இரண்டு இலட்சம் ரூபாவை வழங்க வேண்டுமெனக் கோரினார்.
இரண்டு இலட்சம் ரூபாய் வழங்குவதற்கு சந்தேக நபர் விருப்பம் தெரிவிக்காததையிட்டு மன்று விசாரணையைத் தொடருமாறு பணித்தது.
இதையடுத்து சம்பவ தினம் முறைப்பாட்டைப் பதிவு செய்த பெண் பொலிஸ் உத்தியோகத்தரும், குறித்த மாணவி காரை விட்டு இறங்கிய குருக்கள்மடம் பகுதிக்குச் சென்று பார்வையிட்ட பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் மன்றில் சாட்சியம் அளித்தனர்.
கடந்த தவணையின்போது, சந்தேக நபரின் சட்டத்தரணியிடம் நீதிபதி, வழக்கின் சாட்சியங்கள் தெளிவாகவும், பலமாகவும் இருப்பதனால் எதிரியைக் குற்றத்தை ஏற்றுக்கொண்டு வழக்கை முடித்துக் கொள்வது பற்றி அறிவுறுத்துமாறு ஆலோசனை வழங்கியிருந்ததும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.
இவ்வழக்கு மீண்டும் 2014 ஜனவரி மாதம் 29ம் திகதி அழைக்கப்படவுள்ளது.

0 கருத்துகள்: