![]() ஈராக்கில் சதாம் உசேன் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்ட பிறகு, ஷியா முஸ்லிம்கள் அதிகளவில் அரசியல் அதிகாரத்திற்கு வந்தனர். இதனால் சன்னி முஸ்லிம் இனத்தவர்களுக்கும், ஷியா முஸ்லிம் இனத்தவர்களுக்கும் இடையே அவ்வப்போது தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகின்றது. எனவே அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் அங்கு தங்கியிருந்து ஈராக்கின் பாதுகாப்பை உறுதி செய்தன. இந்நிலையில் கடந்தாண்டு டிசம்பர் மாதத்தோடு ஈராக்கில் இருந்த அமெரிக்க படைகள் முழுவதுமாக, சொந்த நாட்டிற்கு அழைத்து கொள்ளப்பட்டதால் தற்போது ஈராக்கில் 2 முஸ்லீம் பிரிவினர் இடையே தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் ஈராக்கின் பஸ்ரா நகரின் தென்மேற்கு பகுதியில் உள்ள சுபயர் நகரில் இன்று இரங்கல் கூட்டம் ஒன்று நடந்தது. இதில் அதிகளவில் ஷியா முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். ![]() இந்த கூட்டத்திற்குள் நுழைந்த ஒரு நபர் தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்ததில் 30க்கும் மேற்பட்டோர் பலியாகினர், 90க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறை அதிகாரிகளும், மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து பஸ்ரா மாநகர செய்தித் தொடர்பாளர் அயத் அல் இமாரா கூறியதாவது, வெடிகுண்டு சம்பவம் குறித்த தெளிவான காரணம் எதுவும் தெரியவில்லை. தற்கொலை படையை சேர்ந்த நபரால் வெடிகுண்டு வெடித்ததா அல்லது குறிப்பிட்ட இடத்தில் இருந்த வெடிகுண்டு வெடித்தா என்பது குறித்து விசாரணை நடந்து வருகின்றது. இந்த சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றார். ![]() ![]() ![]() |
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(Atom)
0 கருத்துகள்: