Abu Dhabi, UAE: Landlords are being forced to introduce special deals and lower rates in order to attract tenants as new projects come on stream in the capital, a report has said. It also said that Abu Dhabi experienced a steady increase in unit introductions in 2011, which led to significant declines in rental rates especially in areas outside of the city such as Mohammad Bin Zayed City, which offered a bigger supply of new buildings.
நீங்கள் குடியிருக்கும் இடத்தில் வீட்டு வாடகை சமீபகாலமாக அதிகரிக்கிறதா, குறைகிறதா? வீடு மற்றும் அப்பார்ட்மென்ட் யூனிட்டுகளின் உரிமையாளர்கள் வாடகையை குறைத்து, குடியிருப்போரை வசீகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். எங்கேயென்றால், அபுதாபியில்!
ரியல் எஸ்டேட் அட்வைசரி அமைப்பான டஸ்வீக் எஸ்டேட் மார்க்கெட்டிங் நிறுவனம் தனது ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. தலைநகரில் வாடகை கீழ்நோக்கிச் செல்வதாகக் குறிப்பிடுகிறது இந்த ஆய்வு. காரணம், டிமான்டைவிட அதிகமாக கட்டப்படும் யூனிட்டுகள்தான்!

மொஹமட் பின் சையத் நகர்
பொதுவாகவே அபுதாபியில் 5 சதவீத வருடாந்த வாடகை அதிகரிப்பு அமலில் இருந்தது. தற்போது இந்த வாடகை அதிகரிப்பை தள்ளுபடி செய்துவிட வேண்டிய நிலையில் உள்ளனர் வீட்டு உரிமையாளர்கள். ஆனால் கடந்த சில மாதங்களாக, காலியாக உள்ள வீடுகளுக்கு குடியிருப்போரை கவர்வதற்கு அது மட்டும் போதுமானதாக இல்லை.
சில யூனிட்களில் வாடகையுடன் இலவச பர்னிச்சர்களையும் கொடுக்க வேண்டியுள்ளது. எலக்ட்ரிசிட்டி மற்றும் தண்ணீர் கட்டணங்கள் செலுத்தத் தேவையில்லை என்ற சலுகையை வழங்குகின்றனர் சில வீட்டு உரிமையாளர்கள். வேறு சிலரோ ஒருபடி மேலே போய், புதிதாக நீண்டகால வாடகை கன்ட்ராக்ட்களை கையொப்பம் இடுபவர்களுக்கு குறைந்தபட்சம் ஒருமாதம், அதிகபட்சம் இரண்டு மாதங்கள் இலவச வாடகை சலுகை கொடுக்கிறார்கள் என்கிறது டஸ்வீக் எஸ்டேட் ஆய்வு.
கடந்த 2011ம் ஆண்டு, அபுதாபியில் புதிதாகக் கட்டப்பட்ட யூனிட்டுகளின் எண்ணிக்கை ஏறுமுகத்தில் இருந்தது. முக்கியமாக புறநகரப் பகுதிகளில், உதாரணமாக மொஹமட் பின் சையத் நகர் போன்ற இடங்களில், கடந்த ஆண்டு புதிதாகக் கட்டப்பட்ட குடியிருப்பு யூனிட்டுகளின் எண்ணிக்கை வழமையைவிட அதிகம்.
அல்-ரீம் தீவு குடியிருப்பு பகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட குடியிருப்பு யூனிட்டுகளின் எண்ணிக்கை, அங்கு ஏற்கனவே உள்ள யூனிட்டுகளின் எண்ணிக்கையில் 10.5 சதவீதம். அதாவது ஒரு வருடத்தில், 10.5 சதவீத அதிக குடியிருப்புகள் தோன்றியுள்ளன. அல்-ரீம் தீவு வர்த்தக ரென்டல் இடங்களின் அதிகரிப்பு சதவீதம் இதைவிட அதிகம். 12.5 சதவீதத்தால் அந்த எண்ணிக்கை எகிறியுள்ளது.
கடந்த வருட இறுதியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கன்ஸ்ட்ரக்ஷன் வேலைகள் இன்னமும் தொடர்வதால் இந்தப் பகுதியில் இந்த ஆண்டு முதலாவது காலாண்டிலும் அதே போன்ற அதிகரிப்பை எதிர்பார்க்கலாம். அதன் அர்த்தம், வாடகை இன்னமும் குறையப் போகின்றது.
ஜோன்ஸ் லாங் லாசால் நிறுவனத்தின் டைரக்டர் கிரெய்க் ப்ளம்ப், “2012-ம் ஆண்டு அபுதாபியின்

அபுதாபி டவுன்-டவுன் ஏரியா
ரியல் எஸ்டேட் வர்த்தகத்தின் மிக மோசமான ஆண்டாக இருக்கப் போகின்றது. டிமான்ட் குறைவான காரணத்தால் வாடகை மட்டுமின்னி வீட்டு விலைகளிலும் பெரிய வீழ்ச்சியை எதிர்பார்க்கலாம். ரியல் எஸ்டேட் வர்த்தகத்துக்கு இரு மோசமான நிலை என்றாலும், புதிதாக வீடு வாங்க திட்டமிடும் ஆட்களுக்கு இதுதான் அற்புதமான காலப்பகுதி” என்கிறார்.
சமீபத்தைய ஆய்வு ஒன்று, புதிதாக வீடு வாங்கும் எண்ணம் உடையவர்கள், விலை குறைந்து செல்வதைப் பார்த்து, தமது வீடு வாங்கும் திட்டத்தை மாதாமாதம் பிற்போட்டுக்கொண்டு செல்கின்றார்கள் என்றும் சொல்கிறது. இதனால், மார்க்கெட்டில் லிஸ்ட் செய்யப்பட்ட வீடுகள் தேங்கத் தொடங்க, விலை மேலும் குறைகின்றது.
துபாயில் நிலைமை இரு வருடங்களுக்குமுன் கிட்டத்தட்ட இப்படித்தான் இருந்தது. வீட்டு விலைகளும், வாடகைகளும் குறைந்து செல்ல, புதிய யூனிட்டுகள் கட்டப்படுவதில் தேக்கம் ஏற்பட்டு, நிலைமை இப்போது ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. தற்போது விலை வீழ்ச்சி முன்புபோல இல்லாமல் குறைவாக உள்ளது.
துபாயின் த கிரீன்ஸ், அல்-பாஷா, துபாய் மரீனா மற்றும் டவுன்-டவுன் துபாயில் விலை வீழ்ச்சி கடந்த வருடம் வெறும் 5 சதவீதம்தான். ஆனால், துபாயின் வேறு சில பகுதிகளில் நிலைமை சீரடையவில்லை. உதாரணமாக, டிஸ்கவரி கார்டன்ஸ், ஜமேரியா லேக் டவர்ஸ், மற்றும் சிலிகன் ஓஆஸிஸ் பகுதிகளில் கடந்த வருட விலை வீழ்ச்சி 15 சதவீதம்வரை இருந்தது.
இந்தப் பகுதிகளில் குறைந்த விலைக்கு வீடுகளை வாங்கும் அளவில் இன்னமும் லிஸ்டிங்குகள் உள்ளன
0 கருத்துகள்: