Washington, USA: The Wall Street Journal yesterdat (Saturday) reported that the U.S. has stepped up contingency planning in case Israel launches a military strike on Iran’s nuclear facilities. According to the report, U.S. defense officials are becoming increasingly concerned that Israel is preparing to carry out such a strike.
Tension has mounted between Israel and the West as a senior Israeli government official has called “absolute nonsense” a Friday report in Foreign Policy that Mossad agents posed as CIA officers in order to recruit members of a Pakistani terror group to carry out assassinations and attacks against the regime in Iran.
ஒரு முக்கோண பிரச்னை காரணமாக, ஈரான்மீது இஸ்ரேல் திடீர் தாக்குல் ஒன்றை நடத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. முக்கோணத்தின் ஒரு முனையில் வாஷிங்டனும், மற்றைய முனைகளில் டெஹ்ரான் மற்றும் டெல்-அவிவ் நகரங்கள் உள்ளன. யாரும் எதிர்பாராத விதமாக அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் ஒரு முறுகல்நிலை தோன்றி, நிலைமையை சிக்கலாக்கி உள்ளது.
மறுபுறமாக ஈரானை இந்த இரு நாடுகளும் தனித்தனியாக குறிவைத்துள்ளன.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நேற்று (சனிக்கிழமை) வெளியிட்ட செய்தி ஒன்றில், இஸ்ரேல் திடீரென ஈரானிய அணு உலைமீது தாக்குதல் நடத்தினால், அமெரிக்கா என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து திட்டம் ஒன்று தயாராக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இஸ்ரேல் தாக்குதலுக்கு ரெடியான உள்ளதாகத் தெரிகிறது.
நிலைமை கவலைக்கிடமாகவே உள்ளது.
ஈரானுக்கு இந்த அச்சுறுத்தல் தவிர மற்றொரு சிக்கலும் உள்ளது. அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் ஈரானின் எண்ணை ஏற்றுமதி தொடர்பாக பொருளாதாரத் தடை ஒன்றைக் கொண்டுவரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. ஈரானின் பொருளாதாரமே, அவர்களது எண்ணை ஏற்றுமதியில்தான் தங்கியுள்ளது.
இதே விவகாரத்தின் தொடர்ச்சியாக, உலகம் முழுவதையும் பாதிக்கக்கூடிய சிக்கல் ஒன்றும் ஏற்படவுள்ளது.
ஒருவேளை ஈரானிய எண்ணை ஏற்றுமதி மீது இவர்களது பொருளாதாரத் தடை கொண்டுவரப்பட்டால், உலக எண்ணை டிமான்டுக்கு ஏற்ற சப்ளை இல்லாத நிலை ஏற்படும். அதன் விளைவாக, எண்ணை விலை எகிறும். (ஈரானிய சப்ளை முழுமையாக நிறுத்தப்பட்டால், எண்ணை விலை தற்போது உள்ளதைவிட இருமடங்காகி விடும் என்று ஒரு கணிப்பு உண்டு!)
அமெரிக்க இஸ்ரேலிய முறுகல், நேற்று முன்தினம் வெளியாக செய்தியின் அடிப்படையில் தொடங்கியது. இஸ்ரேலிய உளவுத்துறை சி.ஐ.ஏ.-யின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தியது என்பதே அந்தச் செய்தி. (இங்கே கிளிக் செய்யவும்)
அமெரிக்கா அதிகாரபூர்வமாக இந்தச் செய்தியை இதுவரை மறுக்காத நிலையில், இஸ்ரேல் தனது மறுப்பை திட்டவட்டமான தெரிவித்துள்ளது. “மொசாத் உளவாளிகள் சி.ஐ.ஏ.-யின் பெயரைப் பயன்படுத்தினர் என்று சொல்வது வடிகட்டிய முட்டாள்தனமான கூற்று” என்பது இஸ்ரேலின் இன்றைய அறிக்கை. இந்த அறிக்கை வாஷிங்டனை கோபமடையச் செய்யும் என எதிர்பார்க்கலாம்.
வாஷிங்டனின் கோபம் இஸ்ரேலிய அறிக்கை வெளியான சில மணி நேரத்திலேயே வெளியே தெரியவந்து விட்டது. ‘டைம்’ சஞ்சிகை அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளை மேற்கோள்காட்டி வெளியிட்டுள்ள செய்தி, “ஈரானிய விஞ்ஞானியைக் கொலை செய்ததன் பின்னணியில் இருப்பது மொசாத் மட்டும்தான்” என்கிறது.
அதாவது, ஈரான் அமெரிக்க உளவுத்துறையைக் குற்றம்சாட்ட, அமெரிக்கா இஸ்ரேலிய உளவுத்துறையைக் குற்றம் சாட்டிவிட்டது. எல்லாமே ஒரு கொலை தொடர்பாகத்தான்!
இப்போது புரிகிறதா இதிலுள்ள முக்கோணப் பிரச்னை?
நன்றி http://viruvirupu.com
0 கருத்துகள்: