பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தீவிரவாதி அப்சல்குருவின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார். கருணை மனு நிராகரித்ததை தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அப்சல் குரு தூக்கிலிடப்பட்டார்.
தண்டனை நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து திகார் சிறையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று காலை 7.56 மணிக்கு அப்சல் குருவுக்கு தண்டனையை நிறைவேற்றியதாக சிறை அதிகாரிகள் தகவல். ஆனால் அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட தகவலை மத்திய அரசு இன்னமும் உறுதிப்படுத்தவில்லை.
ஜனவரி இறுதியில் மனு நிராகரிக்கப்பட்ட தகவலை மத்திய அரசு இன்று வெளியிட்டது. நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 2001 டிசம்பர் 13-ல் நாடளுமன்றம் மீது நடந்த தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
காரில் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த 5 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் 5 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
தீவிரவாதிகளுக்கு உதவிய புகாரில் அடிப்படையில் அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதை தொடர்ந்து அவரது சொந்த மாநிலமான ஜம்மு காஷ்மீரில் ஊரடங்க
0 கருத்துகள்: