புனே
வாரியர்ஸ் அணியின் கிரிக்கெட் வீரர் "ரசூல் பர்வேஸ்" மதுபான கம்பெனியின்
லோகோவுடன் கூடிய "ஜெர்சி" அணிந்து விளையாட முடியாது என தெரிவித்து
விட்டார்.
இதையடுத்து, அந்த லோகோவின் மீது "டேப் ஒட்டி மறைத்து"விட்டு, அவர் போட்டியில் கலந்துக் கொண்டார். சனிக்கிழமை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான விளையாட்டின் போது, இந்த சம்பவம் நடந்தேறியது.
IPL போட்டியின் ஸ்பானசரான அந்த மதுபான கம்பெனியின் லோகோ குறித்து தெரிந்தவுடன் இந்த முடிவை அவர் எடுத்ததாக தெரிவித்தார்.
தற்போது, பயிற்சி ஆட்டங்களிலும் குறிப்பிட்ட அந்த லோகோ உள்ள "ஜெர்சி" அணியமுடியாது என தெரிவித்து விட்டார்,ரசூல்.
இது குறித்து, IPL ன் நிர்வாகத்துக்கு முறையாக தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும், மேலும் தெரிவித்தார், ரசூல் பர்வேஸ்.
நான் முதலில் ஒரு முஸ்லிம், பிறகு தான் கிரிக்கெட் வீரர்,
கிரிக்கெட்டுக்காக எனது இஸ்லாமிய கொள்கைகளை விட்டுக் கொடுக்க முடியாது
என்றார்,அவர்.
காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த 24 வயது
கிரிக்கெட் வீரர் ரசூலுக்கு, ரோல் மாடலாக திகழும் பிரபல கிரிக்கெட் வீரர்
"ஹாஷிம் ஆம்லா" மதுபான கம்பெனி ஸ்பான்சர் செய்யும் எந்த போட்டிகளிலும்
கலந்துக் கொள்வதில்லை என்பதை கொள்கையாக செயல்படுத்தி வருகிறார்.
0 கருத்துகள்: