திருகோணமலை மூதூர் சாபிநகரை பிறப்பிடமாகக் கொண்ட றிஸானா நபீக் சவூதி அரேபியாவில் மரண தண்டனை கடந்த ஐனவரி மாதம் 09ம் திகதி விதிக்கப்பட்ட விடயம் அனைவருக்கும் தெரிந்ததே! தான் வெளிநாடு சென்ற நோக்கம் தனது குடும்பம் வருமைக் கோட்டில் வாழ்வதை கட்டுப்படுத்தவும் தனது சகோரர்களான றிப்கா, றிப்கான், றிஸ்னா ஆகியோரின் கல்வியை தொடரவே சவூதி அரேபியாவுக்குச் சென்றதாகவும் தெரியவருகின்றது. சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிரைவேற்றப்பட்ட நேரம் இலங்கை நேரப்படி காலை 11.40 மணிமுதல் ஒரு மாத காலம் வரை பல அமைச்சர்களும்,அரசியல் வாதிகளும் றிசானாவின் உறவினர்ளை பார்வையிடுவதற்காக மூதூர் வந்ததை பல ஊடகங்களிலும் பார்த்தும், கேட்டும் இருக்கின்றோம்.

இருந்தபோதிலும் றிஸானா மரணித்து நான்கு மாதங்களாகி விட்டது. றிஸானாவின் மரணத்தின் பின்னர் தான் வெளிநாடு செல்லும்போது நினைத்த விடயங்ளை நிறைவேற்றி இருக்கின்றார்களா..?என்பதை விசாரிப்பதற்காக றிஸானாவின் தாய் தந்தையை சந்திப்பதற்காச் சென்றேன். அப்போது புதிய வீடு கட்டும் நடவடிக்கையில் இரானுவத்தினர் ஈடுபட்டிருப்பதை நான் நேரடியாக பார்வையிட்டேன்.

றிஸாவின் தாயாரிடம் என்னைப்பற்றி முதலில் அறிமுகம் செய்த வேளை தாய் முதலாவது கூறிய விடயம் யாரைப்பற்றி கதைத்தாலும் பரவாயில்லை சவூதி அரேபியாவைப்பற்றி என்னிடம் பேச வேண்டாம். 7 வருடம் தனது மகளை சிறையில் அடைத்து எப்போதாவது தம்மிடம் றிஸானா வந்தே சேருவார் என நினைத்துக்கொண்டிருந்த என்னையும் எனது மக்களையும் ஏமாற்றியவர்களைப்பற்றி பேசவே வேண்டாம். எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

பல அரசியல்வாதிகள் வீடு கட்டித்தருவதாக எழுத்து மூலமாக தெரிவித்தும் இதுவரையிலும் இரானுவத்தினர் மாத்திரமே வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருக்கின்றார்கள். எனவும் தெரிவித்த வேளை வீடு கட்டுவதற்கு யார் யார் உதவி செய்தார்கள், என கேள்வியாக கேட்டபோது யாரும் உதவி செய்யவில்லை. இரானுவத்தினர் மாத்திரமே எனவும் கூறியதாகவும் ஐனாதிபதி 10 இலட்சம் ரூபாய் பௌசி எம்.பியின் மகன் 2 இலட்சம் ரூபாய், நஜீப் அப்துல் மஜீட், ரஞ்சித் சியபலாபிடிய, ரவூப் ஹகீம் ஆகியோர்கள் 10 இலட்சத்தி ஐம்பது ஆயிரம் ரூபாயினையும் மற்றும் ஐனாதிபதியின் மனைவி உணவுப்பொருட்களை வழங்கியதாகவும் குறிப்பிட்டார்.அதேவேளை தேசிய வீடமைப்பு சபையினரும் வீடு கட்டித்தருவதாக கூறினார்கள் இதுவரை வேலைகள் ஆரம்பிக்கப்படவில்லையெனவும் றிஸானாவின் தாய் தெரிவித்தார்.

சவூதி அரசாங்கத்தினால் ஹிஸ்புல்லாவிடம் வழங்கப்பட்ட பணத்தை நீங்கள் பெற்றிருக்கலாம் தானே என வினவிய போது தனது பல கோடி ரூபாய் தந்தாலும் சவுதிக்காரனுடைய பணம் தேவையே இல்லை.இறக்கமில்லாதவர்களைப் பற்றி பேசவே வேண்டாம் எனக்கூறினார்.

றிஸானா நபீக்கின் தந்தையாகிய உங்களுக்கு தொழில் ரீதியாக யாரும் உதவிகள் செய்தார்களா? யாரும் தொழில் ரீதியாக உதவி செய்யவில்லை.நான் தற்போது நோயாளியாகி விட்டேன்.முன்னர் காட்டுக்குச்சென்று விறகு வெட்டி ஜீவியத்தை கழித்து வந்தேன். தொழில் ரீதியாக உதவி வழங்குவதாக சொல்லியிருக்கின்றார்கள். இதுவரையும் செய்து கொடுக்கப்படவில்லையெனவும் தெரிவித்தார்.

வெளிநாட்டுக்கு செல்கின்ற பிள்ளைகளை செல்ல விடாமல் அவர்களின் பிரச்சனைகளை இணங்கண்டு உதவி செய்வதற்குறிய பெண்கள் அமைப்பொன்றை உருவாக்க வேண்டும் என கூறியிருந்தீர்கள் அது பற்றி கூற முடியுமா? இலங்கையில் பெண்களுக்குறிய வேலைவாய்ப்புக்களை வழங்கினால் அவர்கள் வெளிநாடு செல்ல தேவையில்லை. எனது மகளின் ஞாபகமாக றிஸானா நபீக் ஞாபகார்த்த மன்றம் ஒன்றினை அமைத்து சவூதி அரேபியாவுக்கு செல்ல விடாமல் இலங்கையில் ஒரு தொழில் வாய்ப்பினை வழங்க இந்த அமைப்பின் ஊடாக முன்வர வேண்டும். தமது குடும்ப கஸ்டங்களை தாங்க முடியாமலேயே வெளிநாடு செல்கின்றனர். இனிவரும் காலங்களில் எனது மகளுக்கு நடந்த சம்பவம் மற்றவருக்கும் வரக்கூடாது. ஒவ்வொரு கிராமங்களிலும் இருக்கின்ற வசதி படைத்தவர்கள் ஏழைக்குடும்பங்களின் விடயத்தில் அக்கறையுடன் இருக்கவேண்டும். எனவும் ஆணின் துனையின்றி சவூதி போவதை தடுத்துக்கொள்ளுங்கள் எனவும் றிஸானாவின் தாய் கூறினார்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட நேரம் முதல் இன்று வரை உதவிய டொக்டர் கிபாயா இப்திகார்,எம்.மஹ்ரூப், ஜிஹாத் சேர், சாபிர், ஓடாவி ரபீக் நாநா ஆகியோரை வாழ்கையில் மறக்க முடியாதவர்கள் எனவும் இவர்களுக்கு நன்றிகளை தெரிவிப்பதாகவும் கூறினார்.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts