ஐ.எம்.எஃப் என்று சொல்லப்படும் பன்னாட்டு நிதியத்திடமிருந்து (இன்டர்நேஷனல் மானிடரி ஃபண்ட்) வாங்கிய கடன் முழுவதையும் துருக்கி திருப்பிச் செலுத்திவிட்டது.
ஒரு காசு பாக்கி இல்லாமல் முழுமையாக அடைத்துவிட்டதன் மூலம் துருக்கி மேலும் விரைவாக வளர்ச்சி அடையும் என்று துருக்கி பிரதமர் ரஜப் தையிப் எர்துகான் கூறினார்.
1958-இல் பல்வேறு தேவைகளுக்காக துருக்கி ஐ.எம்.எஃப் பிடமிருந்து கடன் வாங்கியிருந்தது எந்த அரசாலும் அந்தக் கடனைக் கட்ட முடியவில்லை.
எர்துகான் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு ஆட்சியில் ஊழல்களும் முறைகேடுகளும் வீண்செலவுகளும்
முற்றாக ஒழிக்கப்பட்டன. ஊழல்களுக்கும் ஆடம்பரங்களுக்கும் பகரமாக வளர்ச்சித் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து நாட்டை முன்னேற்றப் பாதையில் வழிநடத்தினார். புதிய முதலீடுகளும் குவிந்தன.
பன்னாட்டு நிதியத்தின் பணிகளுக்காக துருக்கி சார்பாக 50 இலட்சம் டாலர் உதவித் தொகை ஐ.எம்.எஃப்புக்கு வழங்கவும் தயாராக இருக்கிறோம் என்று துருக்கி துணைப் பிரதமர் அலீ பாபகான் அதிரடியாக அறிவித்துள்ளார்.
ஆஹா....! இதுவன்றோ நல்லாட்சி....!
சதா சர்வ காலமும் பன்னாட்டு நிதியத்திடம் பிச்சைக்காரர்களைப் போல் கையேந்திக் கொண்டிருக்கும் நாடுகள் துருக்கி வழியில் நடைபோடலாமே?
ஆட்சியை எப்படி நடத்தவேண்டும் என்று துருக்கி அதிபர் எர்துகானிடமிருந்து மற்ற ஆட்சியாளர்கள் பாடம் படிக்கலாமே?

0 கருத்துகள்: