பயங்கரவாத
அச்சுறுத்தல் தொடர்பாக தமக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில்
யெமன் உட்பட பல நாடுகளில் உள்ள தமது தூதரகங்களை அமெரிக்கா இன்று
ஞாயிற்றுக்கிழமை மூடுவதாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சியம்,
ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளும் குறிப்பாக யெமனிலுள்ள தமது
தூதரகங்களை மூடுவதாக அறிவித்துள்ளன.
அல்கயீதா தொடர்பாடல் ஒன்றை இடையறுத்துக் கேட்டதன் விளைவாகவே குறித்த
எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அமெரிக்க தரப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்: