காத்தான்குடி
பிரதேசத்திலுள்ள பள்ளிவாசலொன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைகலப்பு
ஏற்பட்டுள்ளது. காத்தான்குடி முஹைதீன் மெத்தை பெரிய ஜும்ஆ பள்ளிவாசலிலேயே
இந்த கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
இந்த பள்ளிவாசலில் நேற்றிரவு ரமழான் மாதத்தின் 27 இரவு நேர தொழுகை போன்ற
வணக்க வழிபாடுகள் இடம்பெற்றன. இந்த இரவில் வழமை போன்று பள்ளிவாயல் சார்பில்
ஒருவர் நன்றி தெரிவித்து உரையாற்றுவது வழக்கமாகும்.
அதனடிப்படையில் நேற்றிரவும் இந்த பள்ளிவாசலின் தலைவர் மர்சூக் அகமட்லெவ்வை
உரையாற்றிக் கொண்டிருந்த போது அங்கு சென்ற இருவர் பள்ளிவாயல் தலைவரிடம்
கேள்வி கேட்க முற்பட்டதுடன் பேச வேண்டாம் என தடுக்கவும் முற்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பள்ளிவாசலில் அமைதி இன்மை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு
வாய்த்தர்க்கங்களும் கைகலப்பும் ஏற்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்த
ஜமாஅத்தினர் சமாதானப்படுத்தி நிலைமையை சமாளித்துள்ளனர். இதையடுத்து இங்கு
விரைந்த பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டதாக
காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இதே நேரம் இந்த பள்ளிவாயலில்
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலையும் நிருவாகிகள் சிலருக்கும் பள்ளிவாயல்
ஜமாஅத்தினரைச் சேர்ந்த ஒரு சிலருக்கு இடையில் பிரச்சினை ஒன்று
இடம்பெற்றுள்ளது. எனினும் இது தொடர்பில் இருசாராரையும் சமாதானப்படுத்தி
வைத்ததாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
0 கருத்துகள்: