மட்டக்களப்பு
கல்முனை பிரதான வீதி மருதமுனை எல்லைக்குட்பட்ட பாண்டிருப்புப் பகுதியில்
இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.30மணயளவில் சுமார் 5அடி நீளமான முதலை
குளமொன்றிலிருந்து வீடொன்றிக்குள் புகுந்ததையடுத்து அப்பகுதி மக்கள் ஒருவித
பீதியுடனும் அச்சத்துடனும் காணப்பட்டனர்.
பாண்டிருப்பு பிரதான
வீதியில் வீடுகள் அமைந்துள்ள பகுதிக்கு பின்னால் அமைந்துள்ள
குளமொன்றிலிருந்தே குறித்த முதலை வெளியாகி வீட்டிற்குள் உட்புகுந்துள்ளது. இதனையடுத்து குறித்த பகுதியில் மக்கள் கூட்டமாக ஒன்று திரண்டதுடன் அச்ச நிலையும் பீதி நிலையும் அப்பகுதியில் காணப்பட்டது.
குறித்த விடயம் தொர்பில் கல்முனைப் பொலிஸ் நிலையத்திற்கு
அறிவித்துள்ளதாகவும் இதற்கு முன்னர் இவ்வாறு முதலைகள் வரவில்லையெனவும்
தெரிவித்தனர்.
குறித்த முதலையை பார்வையிட கல்முனை,மருதமுனைப் பகுதிகளிலிருந்து பெருந்திரளான மக்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்: