இரண்டாம் உலகப்போரின் போது, ஜப்பான் தலைநகர் ஹிரோஷிமா மீது 1945, ஆக., 6ம் தேதி, அமெரிக்கா அணுகுண்டு வீசி தாக்கியது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகினர். இதன் தாக்கம் இன்றும் தொடர்கிறது. பலியான மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், உலகில் அமைதி நிலவ வேண்டியும், ஆண்டுதோறும் ஆக., 6ம் தேதி, ஹிரோஷிமா நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இரண்டாம் உலகப்போரின் இறுதிக்கட்டத்தின் போது, ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ஆகிய நகரங்கள் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது. இதுவே உலகின் முதலும், கடைசியுமான அணுகுண்டு தாக்குதல்.

அணுகுண்டின் ஆரம்பம்:

உலக வரலாற்றில் அமெரிக்கா, முதன் முதலாக அணுகுண்டு தாக்குதலை தொடங்கியது. “லிட்டில்பாய்' எனும் 60 கிலோ எடையுள்ள அணுகுண்டை சுமந்து வந்த "பி-29 ரக எனோலாகெய்' என்ற அமெரிக்க விமானம், ஹிரோஷிமா நகரின் மையப்பகுதியில், உலகின் முதல் அணுகுண்டை வீசியது. இது அப்பகுதியில் 11 கி.மீ., சுற்றளவுக்கு அழிவை ஏற்படுத்தியது. அப்போது ஹிரோஷிமாவின் மொத்த மக்கள்தொகை 3 லட்சத்து 50 ஆயிரம் பேர். ஏறத்தாழ 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் இதில் இறந்தனர். கதிர்வீச்சால் பல்லாயிரக்கணக்கானோர் நோய்வாய்ப்பட்டனர் (இதன் பாதிப்பு இன்னும் தொடர்கிறது). குண்டு வீசப்பட்டு 16 மணி நேரம் கழித்து அமெரிக்க அதிபர் ஹாரிட்ரூமேன், ஜப்பான் மீது அணுஆயுத தாக்குதல் நடத்தியதாக அறிவித்தார். (அணுகுண்டை சோதித்து பார்ப்பதற்காக அமெரிக்கா இதை செய்தது எனவும் கூறப்படுகிறது). இதன் பிறகே ஹிரோஷிமாவில் வீசப்பட்டது அணுகுண்டு என ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகளுக்கு தெரியவந்தது.

மீண்டும் தாக்குதல்:

மூன்று நாட்கள் கழித்து ஆக., 9ல், ஜப்பானின் நாகசாகி நகரின் மீது "பேட்மேன்' என்ற அணுகுண்டை 2வது முறையாக அமெரிக்கா வீசியது. இந்த தாக்குதல்களால் இரண்டு நகரங்களும் முற்றிலுமாக நிலைகுலைந்தன. கதிர்வீச்சு காரணமாக இறந்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்தை எட்டியது. இதனையடுத்து 6 நாட்கள் கழித்து, சரணடைவதாக ஆக., 15ம் தேதி ஜப்பான் ஒப்புக்கொண்டது. அத்துடன் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது. அணுகுண்டு தாக்குதலால் பாதிக்கப்பட்ட இந்த 2 நகரங்களும், அந்த சுவடே தெரியாத அளவுக்கு தற்போது பல்வேறு துறைகளில் வளர்ச்சியடைந்தது அந்நாட்டின் தன்னம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

மக்கள் எதிர்பார்ப்பது:

அமெரிக்கா, ரஷ்யாவைத் தொடர்ந்து இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வடகொரியா ஆகிய நாடுகள் அணுகுண்டு சோதனை நடத்தி, தங்களை அணு ஆயுத நாடுகளாக காட்டியுள்ளன. இதைத்தவிர இஸ்ரேல் மற்றும் ஈரானும் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. வேறு சில நாடுகளும் அணுஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக கருதப்படுகிறது. ஜப்பான் அழிவிற்கு பின், அணுகுண்டு தாக்குதல் உலகில் நிகழவில்லை என்பது வரவேற்கத்தக்க விஷயம். இது தொடர வேண்டும் என்பது தான் உலக மக்களின் விருப்பம்

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts