அரசாங்கத்துக்கு
ஆதரவு வழங்கியதற்கு பரிசாகவே முஸ்லிம் காங்கிரஸ் அரசியலமைப்பு
திருத்தங்களை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவில்
சேர்க்கவில்லையென அஸாத் சாலி தெரிவித்துள்ளார்.
கிழக்கிலுள்ள
முஸ்லிம்களை காட்டிக்கொடுத்து அரசுக்கு ஆதரவு வழங்கி வந்தது முஸ்லிம்
காங்கிரஸ். இவர்களுக்கு வெட்கம் இருந்தால் பதவிகளை துறந்துவிட்டு,
அரசாங்கத்திலிருந்து வெளியேறவேண்டும்.
குறித்த பாராளுமன்ற தெரிவுக்குழுவில் முஸ்லிம்கள் சார்பாக அகில இலங்கை
முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் றிசாத் பதியுதீனும் தேசிய காங்கிரஸ் சார்பாக
ஏ.எல்.எம். அதாவுல்லாவும் உள்வாங்கப்பட்டுள்ளனர். அரசின் பங்காளிக்கட்சி
என்ற வகையில் இவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்ட நிலையில், முஸ்லிம் காங்கிரஸை
அரசாங்கம் கணக்கில் எடுக்கவும் இல்லை.
இவ்வாறு அரசாங்கத்தின்
பங்காளி கட்சிகளின் சார்பில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பலர் இணைத்துக்
கொள்ளப்பட்ட போதிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அரசாங்கம் கணக்கில்
எடுத்துக் கொள்ளவில்லை.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் என் அரசுடன் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டுமென அஸாத் சாலி கேள்வியெழுப்புகிறார்.
0 கருத்துகள்: