சிங்கள
தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றும் பெண் ஊடகவியலாளரான தில்கா சமன்மலிக்குப்
பொதுபல சேனாவைச் சேர்ந்தவர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம்
தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுபல சேனா அமைப்பின் செயலாளரான ஞானசார தேரரின் தனிப்பட்ட வாழ்க்கையின்
அசிங்கங்களை குறித்த பெண் ஊடகவியளாளர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில்
அம்பலப்படுத்தியதனையடுத்தே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அதெரண தொலைக்காட்சியில் வாராந்தம் ஒளிபரப்பாகும் ’360 பாகை’ என்ற
நிகழ்ச்சியில் ஞானசார தேரரை குறித்த ஊடகவியலாளர் பேட்டி கண்டிருந்தார்.
இதன்போது, இந்தத் தேரர் குடிவெறியில் வாகனம் ஓட்டியதற்காக
நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டமை, பெண்களுடன் அங்க சேட்டையில் ஈடுபட்டமை
உட்படலான பல விடயங்களை கேள்விகளாகத் தொடுத்து அவரைத் திக்குமுக்காடச்
செய்ததுடன் தேரர் தான் செய்த அசிங்கமான காரணங்களை ஒப்புக் கொள்ளும் வகையில்
தனது பேட்டியை நடத்திச் சென்றிருந்தார்.
இதனால் ஆத்திரமுற்ற
பொதுபல சேனாவைச் சேர்ந்தவர்கள் குறித்த பெண் ஊடகவியலாளரை தொலைபேசியில்
அழைத்து அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர். இதனையடுத்தே அவர் தனக்கு
ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு
செய்துள்ளார்.
இதேவேளை, பிக்குவேடம் பூண்டு பொதுபல சேனாவின்
தலைவராக வலம்வரும் ஞான தேரர் ஒரு படு கிரிமினல் குற்றவாளி, குற்றங்களை மூடி
மறைக்கவே பொதுபல சேனாவை துவக்கியதாகவும் கூறப்படுகின்றது.
0 கருத்துகள்: