சிக்கன் புரியாணி சாப்பிட்டுவிட்டே இறைச்சிக்கடைகள் மீது தாக்குதல் நிலை
ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க
பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இதுதொடர்பில் மேலும் உரையாற்றியுள்ள ரணில் விக்கிரமசிங்க,
பௌத்த சமயத்தில் உயிர்களை வதைக்க கூடாதென்றே கூறப்பட்டுள்ளதேயன்றி
மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாதென சொல்லப்படவில்லை. இறைச்சி சாப்பிடுவதும்,
சாப்பிடாததும் எம்மை பொறுத்தவிடயம். இந்நிலையில்தான் ஒரு குழுவினர்
மாட்டிறைச்சி விற்பனை செய்யும் கடையொன்றின் மீது தாக்குதல்
நடாத்தியுள்ளனர்.
ஒவ்வொரு மதத்திலும் ஒவ்வொரு வழமையுள்ளது. அதனை
யாரும் தடுக்க முடியாது. சிக்கன் புரியாணி சாப்பிட்டுவிட:டே மாட்டிறைச்சி
விற்கக்கூடாதெனக் கூறி மாட்டிறைச்சிக் கடை மீது தாக்குதல் நடத்தும் நிலையை
இன்னு காணக்கூடியதாகவுள்ளது எனவும் ரணில் விக்கிரமசிங்க மேலும்
குறிப்பிட்டுள்ளார்.
0 கருத்துகள்: